OnePlus 15 : மூன்று நாட்களில் அறிமுகமாகும் ஒன்பிளஸ் 15.. வெளியான முக்கிய தகவல்கள்!

OnePlus 15 Smartphone Launch Soon | ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன் ஆன ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த நிலையில், இந்த ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

OnePlus 15 : மூன்று நாட்களில் அறிமுகமாகும் ஒன்பிளஸ் 15.. வெளியான முக்கிய தகவல்கள்!

ஒன்பிளஸ் 15

Updated On: 

10 Nov 2025 13:52 PM

 IST

இந்தியர்கள் மத்தியில் மிகவும் பிரபலாமாக உள்ள ஸ்மார்ட்போன் (Smartphone) நிறுவனம் தான் ஒன்பிளஸ் (OnePlus). இந்த நிறுவனம் தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அவ்வப்போது அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனை (OnePlus 15 Smartphone) அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது நவம்பர் 13, 2025 அன்று ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த நிலையில், இந்த ஸ்மார்ட்போனில் என்ன என்ன சிறப்பு அம்சங்கள் இடம்பெற உள்ளன, இது இந்தியாவில் என்ன விலைக்கு விற்பனை செய்யப்பட உள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

3 நாட்களில் அறிமுகமாக உள்ள ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன்

ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் (OnePlus 13 Smartphone) ஜனவரியில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், அதே ஆண்டு ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் அறிமுகமாக உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பல அட்டகாசமான அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : வாட்ஸ்அப்பில் இருந்து வேறு செயலிக்கு குறுஞ்செய்தி அனுப்பலாம்.. புதிய அம்சத்தை சோதனை செய்யும் மெட்டா!

ஒன்பிளஸ் 15 – விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.69,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனை குறைந்த விலைக்கு அல்லது அதே விலைக்கு அறிமுகம் செய்ய ஒன்பிளஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.70,000-க்குள் விற்பனை செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : வருங்காலத்தில் AI எத்தககைய மாற்றங்களை ஏற்படுத்தும்?.. வியக்க வைக்கும் கணிப்புகள்!

ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் சீனாவில் 4,499 யென்னுக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.53,100 ஆகும். ஆனால்,  இந்தியாவில் ஒன்பிளஸ் 13 ரூ.69,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் 3,999 யென்னுக்கு அறிமுகமாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.50,000 ஆகும். இந்த நிலையில், ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.70,000-க்குள் விற்பனை செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.