ஐபோன் 17 ஸ்மார்ட்போனை விட அசத்தல் அம்சங்கள்.. இந்தியாவில் அறிமுகமானது ஒன்பிளஸ் 15!

OnePlus 15 Smartphone Launched in India | ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய மாடல் ஸ்மார்ட்போன் ஆன ஒன்பிளஸ் 15 இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. இந்த நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஐபோன் 17 ஸ்மார்ட்போனை விட அசத்தல் அம்சங்கள்.. இந்தியாவில் அறிமுகமானது ஒன்பிளஸ் 15!

ஒன்பிளஸ் 15

Published: 

14 Nov 2025 18:06 PM

 IST

ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன் ஆன ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனை (OnePlus 15 Smartphone) இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 2024 ஆம் ஆண்டு வெளியாகி பெரிய வரவேற்பை பெற்ற ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனை (OnePlus 13 Smartphone) விட பல கூடுதல் மற்றும் அட்டகாசமான அம்சங்களை கொண்டுள்ளது. இந்த நிலையில், இந்த ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவில் அறிமுகமானது ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன்

இந்த ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனில் 6.68 இன்ச் AMOLED டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குவால்கம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 Soc அம்சத்தை கொண்டுள்ளது. மூன்று கேமரா அம்சங்களை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் 50 எம்பி மெயின் சென்சாரை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 7,300 mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இது 120 வாட்ஸ் வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்தையும், 50 வாட்ஸ் வயர்லஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்தையும் கொண்டுள்ளது. இது ஆக்சிஜன்OS 16 சாஃப்ட்வேர் அம்சத்தை கொண்டுள்ளது.

இதையும் படிங்க : பயனர்களை தற்கொலைக்கு தூண்டும் சாட்ஜிபிடி.. ஒரே வாரத்தில் 7 வழக்குப்பதிவு!

ஐபோன் 15 – விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

இந்த ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனில் ஐபோன் 17 ஸ்மார்ட்போனை விட பல சிறப்பு அம்சங்கள் உள்ளதாகவும், ஆனால் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனை விட ஐபோன் 17 ஸ்மார்ட்போன் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க : Google Maps : கூகுள் மேப்ஸ் செயலியில் அறிமுகமாகியுள்ள புதிய அட்டகாசமான அம்சங்கள்.. என்ன என்ன?

ஒன்பிளஸ் 15 விலை பட்டியல்

12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் ரூ.72,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 16ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் ரூ.79,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் 17 ஸ்மார்ட்போன் ரூ.82,900-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், அதனை விட அதிக அம்சங்களை கொண்ட ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் குறைவான விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.