பழைய வீடியோக்களை HD-ல் பார்க்கலாம்.. யூடியூபில் வரும் புதிய அம்சம்!
New AI Feature To Come In YouTube | யூடியூப் செயலியில் பழைய வீடியோக்கள் சற்று தரம் குறைந்ததாக இருக்கும். இந்த நிலையில், இந்த சிக்கலை சரிசெய்ய கூகுள் நிறுவனம் யூடியூப் செயலியில் புதிய அம்சம் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது.
என்னதான் திரைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்க்க ஓடிடி தளங்கள் மற்றும் செயலிகள் வந்தாலும், பொதுமக்களுக்கு யூடியூப் (YouTube) செயலி மீதான காதல் குறைந்தபாடில்லை. இன்றும் கூட பெரும்பாலான மக்கள் தங்களது அன்றாட வாழ்வில் பொழுதுபோக்கு உள்ளிட்ட தேவைகளுக்காக யூடியூப் செயலியை பயன்படுத்துகின்றனர். இவ்வாறு கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் பிரதான செயலியாக யூடியூப் உள்ள நிலையில், கூகுள் அதில் பல அசத்தலான மற்றும் அட்டகாசமான அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது ஒரு அசத்தலான மற்றும் மிகவும் பயனுள்ள அம்சம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அது என்ன அம்சம், அதன் சிறப்புகள் என்ன எம்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பழைய வீடியோக்களையும் எச்டி தரத்தில் பார்கலாம்
யூடியூப் அறிமுகமான காலக்கட்டத்தில் தொழில்நுட்ப வசதி மிகவும் குறைவாகவே இருந்தது. தற்போது தரம் வாய்ந்த கேமராக்களை பயன்படுத்தி வீடியோக்கள் பதிவிடப்படும் நிலையில், ஆரம்ப காலக்கட்டத்தில் பதிவிடப்பட்ட வீடியோக்கள், பழைய திரைப்படங்கள் மற்றும் வீடியோக்களின் தரம் மிகவும் குறைவானதாக உள்ளது. இதன் காரணமாக பயனர்களால் பல வீடியோக்களை பார்க்க முடியாமல் போய்விடுகிறது. இந்த நிலையில், தான் பழைய வீடியோக்களை நல்ல தரத்தில் பார்க்கும் அம்சத்தை கூகுள், யூடியூபில் அறிமுகம் செய்ய உள்ளது.
இதையும் படிங்க : Google Maps : கூகுள் மேப்ஸ்-ல் வரும் முக்கிய அம்சம்.. இனி இதற்கு கவலை இல்லை!
ஏஐ மூலம் எச்டி வீடியோ – புதிய அம்சத்தை அறிமுகம் செய்ய உள்ள யூடியூப்
அதாவது தரைமற்ற பழைய வீடியோக்களை செயற்கை நுண்ணறிவு அம்சத்தின் மூலம் தானாகவே எச்டி அம்சத்திற்கு மாற்றும் ஒரு அசத்தலான அம்சத்தை தான் யூடியூப் செயலியில் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக 1080 பி என்ற தரத்துக்கு குறைவாக பதிவிடப்பட்டு இருந்த வீடியோக்களை இந்த புதிய செயற்கை நுண்ணறிவு அம்சத்தின் மூலம் தரம் உயர்த்த யூடியூப் திட்டமிட்டுள்ளது.
இதையும் படிங்க : உங்கள் பிரிட்ஜ் கூலிங்க் ஆகவே இல்லையா.. இந்த தவறுகள் காரணமாக இருக்கலாம்.. உடனே செக் பண்ணுங்க!
4கே, ஐஐடி மற்றும் அல்ட்ரா ஐஐடி வரைக்கும் வீடியோக்களை தரம் உயர்த்தவும் யூடியூப் திட்டமிட்டுள்ளது. அதாவது செட்டிங்ஸில் உள்ள சூப்பர் ரெசல்யூஷன் என்ற ஆப்ஷனை தேர்வு செய்து ஒப்புதல் தெரிவிக்கும் பட்சத்தில் தானாகவே வீடியோக்கள் தரம் உயர்த்தி கொடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.