Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ரீல்ஸ்களை பகிர ரீபோஸ்ட் வசதி, லொகேஷனைப் பகிர ஃபிரெண்ட் மேப்… இன்ஸ்டாகிராமில் அறிமுகப்படுத்தப்பட்ட 3 புதிய அம்சங்கள்

New Insta Features: இன்ஸ்டாகிராம் அதன் பயனர்களுக்கு மேம்பட்ட அனுபவத்தை வழங்க 3 புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இனி உங்களுக்கு பிடித்த ரீல்ஸ்களை, உங்கள் நண்பர்களுடன் பகிர ரீபோஸ்ட் வசதி, உங்கள் நண்பர்களின் ரீல்ஸ்களை பார்க்க, ஃபிரெண்ட் ஃபீட் வசதி, லோகேஷனை பகிர ஃபிரெண்ட் மேப் வசதி ஆகியவை கொடுக்கப்பட்டிருக்கின்றன.

ரீல்ஸ்களை பகிர ரீபோஸ்ட் வசதி, லொகேஷனைப் பகிர ஃபிரெண்ட் மேப்… இன்ஸ்டாகிராமில் அறிமுகப்படுத்தப்பட்ட 3 புதிய அம்சங்கள்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 07 Aug 2025 17:58 PM

 மெட்டாவின் (Meta) சமூக வலைதள செயலிகளில் ஒன்றான இன்ஸ்டாகிராமை (Instagram) பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. இந்தியாவில் மட்டும் இதுவரை 48  கோடி பேர் பயன்படுத்துகின்றனர். அதற்கு அடுத்த இடத்தில் அமெரிக்கா உள்ளது. அமெரிக்காவில் இதுவரை 17 கோடி பேர் இன்ஸ்டாகிராமை பயன்படுத்துகின்றனர்.  இன்ஸ்டாகிராமை அதிகம் பேர் பயன்படுத்துவதற்கான காரணம் அதன் ரீல்ஸ் அம்சம்.  இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் தனது பயனர்களுக்கு மேம்பட்ட வசதிகளை வழங்கும் நோக்கில்  மூன்று புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.  அந்த வகையில்  ரீபோஸ்ட் வசதிஃபிரெண்ட் மேப் (Friend Map), மற்றும் ரீல்ஸ்க்கு தனி ஃபீட் ஆகிய வசதிகளை  பயனர்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த 3 அம்சங்களின் சிறப்புகள் என்ன என்பது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

இன்ஸ்டாகிராமின் ரீபோஸ்ட் வசதி

பொதுவாக இன்ஸ்டாகிராமில் நமக்கு பிடித்த ரீல்ஸ்களை நண்பர்களுடன் பகிர அவற்றை, அவர்களுக்கு டைரக்ட் மெசேஜ் செய்ய வேண்டும். அல்லது வாட்ஸ்அப்பில் அனுப்ப வேண்டியிருக்கும். இனி அந்த வசதி இல்லை. நமக்கு பிடித்த ரீல்ஸ்களை ரீபோஸ்ட் செய்து வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நமது நண்பர்களால் ரீபோஸ்ட் செய்யப்பட்ட ரீல்ஸ்களை பார்க்க முடியும். கிட்டத்தட்ட எக்ஸ் செயலில் ரீடிவீட் செய்யும் வசதியைப் போல செயல்படும். அதே நேரம் நாம் பகிரும் ரீல்ஸ்க்கான கிரெடிட் ஒரிஜினல் கிரியேட்டருக்கு செல்லும். அவர்களது கண்டென்ட்கள் புதிய பார்வையாளர்களை சென்றடையும்.

இதையும் படிக்க : வாட்ஸ்அப்பில் புதிய அம்சம்: இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்கிலிருந்து நேரடியாக புரொஃபைல் போட்டோ மாற்றலாம்

ஃபிரெண்ட் மேப்

இந்த அம்சத்தின் மூலம் கடைசியாக நாம் இருந்த லொகேஷனைப் பகிர முடியும். இந்த அம்சம் விருப்பத்தின் பெயரில் செயல்படும். இந்த அம்சம் ஸ்நாப்சாட்டின் ஸ்நாப் மேப் போன்று செயல்படும். இது இன்ஸ்டாகிராம் டைரக்ட் மெசேஜ் பகுதியில் காண முடியும்.

ஃபிரெண்ட் ஃபீட்

இந்த புதிய அம்சம் மூலம் ரீல்ஸ் பகுதியில் உங்கள் நண்பர்கள் மற்றும் நீங்கள் விரும்பும் நபர்களின் ரீல்ஸ்களை காணமுடியும். அதாவது உங்கள் நண்பர்கள் பகிரும் ரீல்ஸ்களை தவற விடாமல் பார்க்க உதவும்.

இதையும் படிக்க : ஏசியில் செய்யும் இந்த சில தவறு அதன் ஆயுட்காலத்தை பாதிக்கும்.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

இது உங்கள் நண்பர்கள் உருவாக்கும் வீடியோக்களை Reels பகுதியில் தனியாக காண உதவும். இதன் மூலம் உங்கள் நெருக்கமானவர்கள் பகிரும் வீடியோக்களை தவறவிடாமல் பார்க்கலாம்.

லொகேஷன் ஷேரிங் பாதுகாப்பானதா ?

இந்த விருப்பம் நீங்கள் விரும்பினால் மட்டும் செயல்படும். அல்லது யாருடன் பகிர வேண்டும் என்பதை நீங்களே நிர்ணயிக்கலாம். அதற்கான 3 விருப்பங்கள் உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும். அதாவது, நெருங்கிய நண்பர்கள், தேர்ந்தெடுத்த நண்பர்கள் , யாருடனும் பகிர வேண்டாம் என்ற 3 வசதிகளை தேர்ந்தெடுக்கலாம்.