Motorola G86 Power : வெறும் ரூ.17,999-க்கு அசத்தல் அம்சங்களுடன் அறிமுகமானது மோட்டோரோலா ஜி86 பவர்!

Motorola G86 Power Smartphone | மோட்டோரோலா நிறுவனம் அவ்வப்போது தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது மோட்டோரோலா ஜி86 பவர் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Motorola G86 Power : வெறும் ரூ.17,999-க்கு அசத்தல் அம்சங்களுடன் அறிமுகமானது மோட்டோரோலா ஜி86 பவர்!

மோட்டோரோலா ஜி86 பவர்

Published: 

01 Aug 2025 15:10 PM

இந்தியாவில் பிரபலமாக உள்ள ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் ஒன்றுதான் மோட்டோரோலா (Motorola). இந்த நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களை ஏராளமான மக்கள் பயன்படுத்து வரும் நிலையில், அது தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், இந்த நிறுவனம் தற்போது மோட்டோரோலா ஜி86 பவர் ஸ்மார்ட்போனை (Motorola G86 Power Smartphone) அறிமுகம் செய்துள்ளது. இந்த நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவில் அறிமுகமானது மோட்டோரோலா ஜி86 பவர் ஸ்மார்ட்போன்

டிகே வீடியோ பதிவு, செயற்கை நுண்ணறிவு அம்சங்களுடன் இந்த மோட்டோரோலா ஜி86 பவர் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. பல அதிரடி அம்சங்களை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் மொத்தம் மூன்று வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 06, 2025 முதல் விற்பனை செய்யப்பட உள்ளது.

இதையும் படிங்க : இந்தியாவில் அறிமுகமானது ரியல்மி 15 ப்ரோ ஸ்மார்ட்போன்.. விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

மோட்டோரோலா ஜி86 பவர் ஸ்மார்ட்போனின் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

இந்த மோட்டோரோலா ஜி86 பவர் ஸ்மார்ட்போன் 6.67 இச்ன் AMOLED டிஸ்பிளே கொண்டுள்ளது. இதில் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 சிப்செட் அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 இயங்குதளத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 6720 mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ள நிலையில், 33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் அம்சத்தையும் இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.

இதையும் படிங்க : Samsung Galaxy F36 5G : பட்ஜெட் விலையில் அறிமுகமான சாம்சங் கேலக்ஸி எஃப்36  5ஜி.. விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன?

கேமரா மற்றும் இதர சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

இந்த ஸ்மார்ட்போனில் இரண்டு கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றில் 50 மெகாபிக்சல் பின்பக்க கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 32 மெகாபிக்சல் பமுன்பக்க கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் வெறும் ரூ.17,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட் விலையில் சிறந்த அம்சங்களை கொண்ட ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.