Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இது கூட்டணி அல்ல… அதற்கும் மேல் புனிதமானது.. திமுக குறித்து கமல்ஹாசன் விளக்கம்

Kamal on DMK Alliance: வருகிற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் பேசிய கமல்ஹாசன், தான் வாழும் காமராஜர் இல்லை என்றும் தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடக்க வேண்டும் என்றும் பேசினார்.

இது கூட்டணி அல்ல… அதற்கும் மேல் புனிதமானது.. திமுக குறித்து கமல்ஹாசன் விளக்கம்
கட்சி நிர்வாகிகளுடன் கமல்ஹாசன்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 18 Sep 2025 17:43 PM IST

சென்னை, செப்டம்பர் 19: சென்னை ராஜா அண்ணாமலைபுரம் முத்தமிழ் பேரவை அரங்கில் செப்டம்பர் 18, 2025 அன்று நடைபெற்ற மக்கள் நீதி மய்யத்தின் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் கமல்ஹாசன் (Kamal Haasan) கலந்து கொண்டார். இதில், சென்னை மண்டல நிர்வாகிகள், அமைப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் பூத் கமிட்டி உள்ளிட்டவை குறித்து ஆலோசனைகள் நடைபெற்றதாக  கூறப்படுகிறது. இந்த நிலையில் நிர்வாகிகள் முன்னிலையில் பேசிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், திமுக கூட்டணி குறித்த சர்ச்சைகளுக்கு அவர் விளக்கமளித்துள்ளார். இந்த கட்டுரையில் அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

விமர்சனங்களுக்கு கமல்ஹாசன் விளக்கம்

அப்போது பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், திமுகவில் சேர்ந்துவிட்டோம் என கூறுகிறார்கள். ஆனால் இது கூட்டணி அல்ல, அதற்கும் மேல் புனிதமானது. திமுகவின் வேர்கள் நீதிக் கட்சியில் இருந்துதான் வந்தது. மக்கள் நீதி மய்யத்திலும் நீதி உள்ளது. மய்யத்தின் குரல் அனைவர் செவியிலும் விழும். திராவிடம் நாடு தழுவியுள்ளது, ஆசியாவிலேயே மையவாதத்தை பின்பற்றும் ஒரே கட்சி மக்கள் நீதி மையம் தான்.

இதையும் படிக்க : ‘முகத்தை மறைக்கவில்லை..கர்ச்சீப்பால் துடைத்தேன்’ எடப்பாடி பழனிசாமி பரபர பேட்டி

நாட்டை இடது, வலது என பிரிப்பதை அனுமதிக்க கூடாது இந்தியா அதை புரிந்துகொள்ள வேண்டும். எனக்கு பிறகும் நமது கட்சியில் தலைவர்கள் உருவாக வேண்டும். எனக்கு பிறகு கட்சி இல்லை என்று அழிந்து விடக்கூடாது. நான் வாழும் காமராஜர் இல்லை. என்னுடைய இயற்பெயர் பார்த்தசாரதி.ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்று பேசினார்.

கட்சி நிர்வாகிகளுடன் கமல்ஹாசன்

 

பின்னர் நிருபர்களை சந்தித்த அவர், எங்கள் நிர்வாகிகளை சந்தித்து தேர்தல் பணிகள், பூத் கமிட்டி அமைப்பு உள்ளிட்டவற்றைப் பற்றி ஆலோசனை நடத்தினோம். தற்போது உள்ள குறைகள், தடைகள் என்னென்ன உள்ளன, அதை எப்படி சமாளிக்க வேண்டும் என்பதைப் பற்றி விவாதித்தோம்,” என்று தெரிவித்தார்.

கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துவது குறித்து விவாதம்

இதையும் படிக்க : ’வாக்கு திருட்டு நடந்தது 100% உண்மை.. ஆதாரம் இருக்கு’ மீண்டும் உறுதியாக சொன்ன ராகுல் காந்தி

இந்த நிர்வாகிகள் சந்திப்பு செப்டம்பர் 18, 2025 தொடங்கி நான்கு நாட்கள் நடைபெறுகிறது. தொடர்ச்சியாக கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, விழுப்புரம், சேலம் மற்றும் புதுச்சேரி பகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகளை கமல்ஹாசன் சந்திக்கிறார். இந்த சந்திப்பின் போது மக்கள் நீதி மய்யத்துக்கு மக்களிடம் செல்வாக்கு எப்படி இருக்கிறது? எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தொகுதிகள், கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்த செய்ய வேண்டிய நடவடிக்கைகள் ஆகியவை குறித்து கமல்ஹாசன் ஆலோசனை நடத்தி வருகிறார்.