வெயில் காலத்தில் ஐபோன் அதிக வெப்பமடைவதற்கான காரணம் என்ன? அதற்கான தீர்வு என்ன?
iPhone Overheating in Summer : ஐபோன் பயன்படுத்தும் பலர், தங்கள் போன் திடீரென அதிகமாக சூடாவதாகவும், செயல் திறன் குறைவதாகவும் பலரும் தங்கள் குற்றச்சாட்டுகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதற்கு என்ன காரணம்? இந்த பிரச்னைகளை எப்படி சரி செய்வது என பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
இந்தியாவில் அதிகரித்து வரும் கடும் வெயில், மனிதர்களை மட்டுமல்லாமல் ஸ்மார்ட்போன்களையும் பாதிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக ஐபோன் பயன்படுத்தும் பலர், தங்கள் போன் திடீரென அதிகமாக சூடாவதாகவும், செயல் திறன் குறைவதாகவும் பலரும் தங்கள் குற்றச்சாட்டுகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். ஆப்பிள் நிறுவனம் தங்களது ஐபோன்களை பொதுவாக 0°C முதல் 35°C வரை உள்ள வெப்பநிலையில் சிறப்பாக செயல்படும்படி வடிவமைத்துள்ளது. இதை மீறி அதிக வெப்பநிலை ஏற்பட்டால், ஸ்மார்ட்போன் தன்னைத்தானே பாதுகாக்க கூலிங் மோட் அல்லது பாதுகாப்பு நிலைக்கு மாறும்.
ஐபோன் வெப்பமடையும் போது காட்டும் அறிகுறிகள்
டிஸ்பிளே திடீரென மங்கலாகி விடும். சார்ஜிங் நிறுத்தம் போன்ற நோட்டிஃஃபிகேஷன் காட்டப்படும். போன் வழக்கத்தை விட மெதுவாக இயங்கும். கேமரா சரியாக வேலை செய்யாது. போனில் உள்ள ஆப்ஸ் திறக்க அதிக நேரம் ஆகும். ஆனால் இது ஐபோன் தன்னை பாதுகாக்க எடுக்கும் முயற்சிகள்.
இதையும் படிக்க : 13,380 mAh பேட்டரி.. அட்டகாசமான அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகமானது ஒன்பிளஸ் பேட் 4!
ஐபோன் வெப்பமடைய முக்கிய காரணங்கள்
ஐபோனை அதிக நேரம் வெயிலில் பயன்படுத்தும்போது வெப்பமடையும். சார்ஜ் செய்தபடியே கேம் விளையாடுவது, வீடியோக்கள் பார்ப்பது போன்றவற்றை தொடர்ந்து செய்தால் ஐபோன் வெப்பமடைய வாய்ப்பிருக்கிறது. அதே போல கேபிள் சார்ஜிங்கிற்கு பதிலாக வயர்லெஸ் சார்ஜிக் செய்தால் போன் அதிக வெப்பமடைய வாய்ப்பிருக்கிறது. , மேலும் ஜிபிஎஸ், ப்ளூடூத் ஆகிய வற்றை தொடர்ந்து பயன்படுத்தினாலோ அல்லது ஒரே நேரத்தில் பல செயலிகளை பயன்படுத்தினாலோ பேட்டரியின் லோட் அதிகரித்து வெப்ப நிலைய உயர வாய்ப்பிருக்கிறது.
இதற்கான தீர்வு என்ன?
பொதுவாக ஐபோன்கள் வெப்பமடைவதை தவிர்க்க, வெயிலில் அதிக நேரம் போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். கனமான கவர் அணிவதை தவிர்க்க வேண்டும். வயர்லெஸ் சார்ஜிங் தவிர்த்து கேபிள் மூலம் சார்ஜ் செய்வதை வழக்கமாக வைத்திருங்கள். தேவையற்ற செயலிகள் பயன்படுத்துவதை தவிர்த்து அவற்றை குளோஸ் செய்யலாம். குறைவான பவர் மோடில் பயன்புட்துதவது நல்லது. காரின் டேஷ்போர்டில் ஸ்மார்போனை வைப்பதை தவிர்க்க வேண்டும்.
இதையும் படிக்க : உங்கள் குழந்தை பருவத்துடன் நீங்கள் சந்தித்து பேசலாம் – சமூக வலைதள Baby me Treand – எப்படி உருவாக்குவது?
வெயில் காலங்களில் மனிதர்கள் மட்டுமல்லாமல் ஸ்மார்ட்போன்கள் கூட பாதிப்படைய செய்கின்றன. இதனால் மககள் அதிக கவனத்துடன் அதனை கையாள வேண்டியது அவசியமாகிறது. காரணம் நாம் அலட்சியம் செய்தால் அதன் செயல் திறன் முழுமையாக பாதிக்கப்படக்கூடும். ஆண்ட்ராய்டு போன்களை விட ஐபோன்கள் விலை உயர்ந்ததால் அதனை கூடுதல் கவனத்துடன் பயன்படுத்த வேண்டியது அவசியமாகிறது.