AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வெயில் வாட்டம் போக்கும் வெட்டிவேர் மந்திரம்: வியர்வை, அரிப்பு தீர்க்கும் இயற்கை வைத்தியம்!

Vetiver Root Remedies: கோடை வெயிலால் ஏற்படும் வியர்வை, அரிப்பு போன்ற பிரச்சினைகளுக்கு வெட்டிவேர் இயற்கை தீர்வாக பயன்படுகிறது. வெட்டிவேர் நீரை குடிப்பது உடல் சூட்டை குறைத்து சோர்வை நீக்குகிறது. வெட்டிவேரை அரைத்து குளிக்க பயன்படுத்தினால் தோல் ஆரோக்கியம் மேம்படும். மேலும், மனஅழுத்தம் குறைந்து உடல்–மனம் புத்துணர்ச்சி பெற உதவுகிறது.

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 02 May 2026 18:10 PM IST
கோடை வெயிலால் உடலில் அதிக வியர்வை, சோர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்படுவது சாதாரணம்.
இந்த வெப்பத்தை சமாளிக்க இயற்கை வைத்தியங்களில் வெட்டிவேர் முக்கிய இடம் பெறுகிறது.
மண்பானை நீரில் வெட்டிவேரை ஊறவைத்து குடிப்பது உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.
இது தாகத்தை தணித்து, உடலுக்கு புத்துணர்ச்சி மற்றும் உற்சாகத்தை அளிக்கிறது.

கோடை வெயிலால் உடலில் அதிக வியர்வை, சோர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்படுவது சாதாரணம். இந்த வெப்பத்தை சமாளிக்க இயற்கை வைத்தியங்களில் வெட்டிவேர் முக்கிய இடம் பெறுகிறது. மண்பானை நீரில் வெட்டிவேரை ஊறவைத்து குடிப்பது உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. இது தாகத்தை தணித்து, உடலுக்கு புத்துணர்ச்சி மற்றும் உற்சாகத்தை அளிக்கிறது.

1 / 5
வெயில் காலத்தில் அதிக வியர்வை மற்றும் அரிப்பு பிரச்சினைகள் பலருக்கும் இருக்கும்.
வெட்டிவேரை நீரில் ஊறவைத்து அரைத்து குளிக்கும் நீரில் கலந்து பயன்படுத்தலாம்.
இது உடலில் ஏற்படும் அரிப்பை குறைத்து தோலை சுத்தமாக வைத்திருக்க உதவும்.
தோல் ஆரோக்கியத்தை பாதுகாக்க இது ஒரு எளிய மற்றும் இயற்கையான முறையாகும்.

வெயில் காலத்தில் அதிக வியர்வை மற்றும் அரிப்பு பிரச்சினைகள் பலருக்கும் இருக்கும். வெட்டிவேரை நீரில் ஊறவைத்து அரைத்து குளிக்கும் நீரில் கலந்து பயன்படுத்தலாம். இது உடலில் ஏற்படும் அரிப்பை குறைத்து தோலை சுத்தமாக வைத்திருக்க உதவும். தோல் ஆரோக்கியத்தை பாதுகாக்க இது ஒரு எளிய மற்றும் இயற்கையான முறையாகும்.

2 / 5
சிலருக்கு வெயிலால் தீக்காயம் அல்லது தோல் எரிச்சல் ஏற்படலாம்.
அவ்வாறான இடங்களில் வெட்டிவேரை அரைத்து பூசுவது நிவாரணம் தரும்.
கால் எரிச்சல் மற்றும் வலிக்கு வெட்டிவேரை தேங்காய் எண்ணெயில் காய்ச்சி பயன்படுத்தலாம்.
இந்த முறைகள் உடலின் வெப்பத்தை குறைத்து சுகமாக உணரச் செய்கின்றன.

சிலருக்கு வெயிலால் தீக்காயம் அல்லது தோல் எரிச்சல் ஏற்படலாம். அவ்வாறான இடங்களில் வெட்டிவேரை அரைத்து பூசுவது நிவாரணம் தரும். கால் எரிச்சல் மற்றும் வலிக்கு வெட்டிவேரை தேங்காய் எண்ணெயில் காய்ச்சி பயன்படுத்தலாம். இந்த முறைகள் உடலின் வெப்பத்தை குறைத்து சுகமாக உணரச் செய்கின்றன.

3 / 5
வெட்டிவேர் ஊறிய நீரை குடிப்பது உடல்நலத்திற்கு பல நன்மைகள் அளிக்கிறது.
காய்ச்சல், நீர் எரிச்சல், உடல் சூடு போன்ற பிரச்சினைகளை இது குறைக்க உதவும்.
உடல் சோர்வு மற்றும் மனஅழுத்தத்தையும் குறைக்கும் தன்மை இதில் உள்ளது.
மேலும் ஜீரண சக்தியை மேம்படுத்தி வயிற்று பிரச்சினைகளையும் சரி செய்கிறது.

வெட்டிவேர் ஊறிய நீரை குடிப்பது உடல்நலத்திற்கு பல நன்மைகள் அளிக்கிறது. காய்ச்சல், நீர் எரிச்சல், உடல் சூடு போன்ற பிரச்சினைகளை இது குறைக்க உதவும். உடல் சோர்வு மற்றும் மனஅழுத்தத்தையும் குறைக்கும் தன்மை இதில் உள்ளது. மேலும் ஜீரண சக்தியை மேம்படுத்தி வயிற்று பிரச்சினைகளையும் சரி செய்கிறது.

4 / 5
வெட்டிவேரிலிருந்து தயாரிக்கப்படும் நறுமண எண்ணெய் மன அமைதியை வழங்குகிறது.
இது மனஅழுத்தத்தை குறைத்து மனநலத்தை மேம்படுத்த உதவுகிறது.
குளியல் பொருட்கள் மற்றும் மருந்துகளில் வெட்டிவேர் பயன்படுத்தப்படுகிறது.
இதனால் சருமத்திற்கு பொலிவு மற்றும் இயற்கையான அழகு கிடைக்கிறது.

வெட்டிவேரிலிருந்து தயாரிக்கப்படும் நறுமண எண்ணெய் மன அமைதியை வழங்குகிறது. இது மனஅழுத்தத்தை குறைத்து மனநலத்தை மேம்படுத்த உதவுகிறது. குளியல் பொருட்கள் மற்றும் மருந்துகளில் வெட்டிவேர் பயன்படுத்தப்படுகிறது. இதனால் சருமத்திற்கு பொலிவு மற்றும் இயற்கையான அழகு கிடைக்கிறது.

5 / 5
Follow Us