பெண்களுக்கு அதிக பலன்களை வழங்கும் சேமிப்பு திட்டங்கள்.. செக் பண்ணுங்க!
Instagram Reels Watch History Option | மெட்டா நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் செயலியை உலக அளவில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், பயனர்களின் நலனுக்காக பல புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது வாட்ச் ஹிஸ்டரி அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.

மாதிரி புகைப்படம்
பொதுமக்களின் பொழுதுப்போக்கிற்காக ஏராளமான செயலிகள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றில் உலக மக்களால் அதிகம் விரும்பி பயன்படுத்தப்படும் செயலி தான் மெட்டா (Meta) நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் (Instagram) செயலி. இந்த செயலியில் தகவல் பரிமாற்றம் முதல் பொழுதுபோக்கு வரை என அனைத்து அம்சங்களும் கிடைக்கின்றனர். இதன் காரணமாக இது பலருக்கும் மிக பிடித்த தேர்வாக உள்ளது. இந்த நிலையில், பயனர்கள் இன்ஸ்டாகிராமை மிகவும் சுலபமாகவும், சுவார்ஸ்யமானதாகவும் பயன்படுத்தும் விதமாக மெட்டா அதில் பல புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், இன்ஸ்டா ரீல்ஸ் அம்சத்தில் முக்கிய அம்சம் ஒன்று அறிமுகமாகியுள்ளது.
பயனர்களுக்கு மிக பிடித்த அம்சமாக உள்ள ரீல்ஸ்
இன்ஸ்டாகிராமில் ஏராளமான அம்சங்கள் உள்ள நிலையில், பயனர்களுக்கு மிகவும் பிடித்த அம்சமாக உள்ளது ரீல்ஸ். இந்த அம்சத்திற்காகவே பெரும்பாலான பயனர்கள் இன்ஸ்டாகிராம் செயலியை பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் அம்சத்தில் பல புதிய புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் மிஸ் செய்த ரீல்ஸ்களை எளிதில் கண்டுபிடிக்கவும், அதனை மீண்டும் பார்க்க உதவும் வகையில் வாட்ச் ஹிஸ்டரி (Watch History) அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.
இதையும் படிங்க : ஒரே ஒரு சிப் போதும்.. இனி கண் தெரியாதவர்களும் படிக்கலாம்.. வியக்க வைக்கும் விஞ்ஞானம்!
இன்ஸ்டாகிராம் வாட்ச் ஹிஸ்டரி அம்சத்தின் சிறப்புகள் என்ன என்ன?
ரீல்ஸ் பார்த்துக்கொண்டு இருக்கும்போது பெரும்பாலா நேரங்களில் ரீல்ஸ்களை தவற விட்டுவிடுவோம். ரீல்ஸ்களை சேமிக்க முயற்சி செய்வதற்கு முன்னதாக அவை சென்றுவிடுவது உள்ளிட்ட சிக்கல்களை எதிர்க்கொள்வோம். இந்த சிக்கல்களுக்கு எல்லாம் தீர்வு காணும் வகையில் தான் மெட்டா இந்த வாட்ச் ஹிஸ்டரி அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.
இதையும் படிங்க : Zoho Pay : அரட்டை, உலாவை தொடர்ந்து இந்தியாவில் அறிமுகமாகும் சோஹோ பே!
இந்த அம்சத்தை பயன்படுத்தி நீங்கள் தவற விட்ட ரீல்ஸ்கள், சேமிக்க மறந்த ரீல்ஸ்கள் அனைத்தையும் உங்களால் மீண்டும் பார்க்க முடியும். இந்த அம்சத்தின் மூலம் தேதி வாரியாக நீங்கள் பார்த்த ரீல்ஸ்களை திரும்பவும் பார்க்க முடியும் என அதன் தலைவர் தெரிவித்துள்ளார். இன்ஸ்டாகிராம் செயலியை அதிகம் பயன்படுத்தும் பொதுமக்களுக்கு இது மிகவும் சிறந்த அம்சமாக இருக்கும் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.