ஸ்மார்ட்போனில் ஆதார் செயலி Pre Install.. முடிவில் இருந்து பின்வாங்கிய அரசு.. காரணம் என்ன?
Indian Government Drop Pre Install Aadhaar App | இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் ஸ்மார்ட்போன்களில் ஆதார் செயலி முன்கூட்டியே பதிவிறக்கம் செய்யப்பட்டு இருக்க வேண்டும் என்று இந்திய அரசு ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு உத்தரவிட்ட நிலையில், அந்த முடிவை கைவிடுவதாக கூறியுள்ளது.

மாதிரி புகைப்படம்
இந்தியாவில் வசிக்கும் இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் கார்டு (Aadhaar Card) மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. குழந்தைகளை பள்ளிகளில் சேர்ப்பது முதல் முதியோர் உதவி தொகை வரை என பல அரசு சேவைகளை பெற இந்த ஆதார் கார்டு கட்டாயமாக உள்ளது. அதுமட்டுமன்றி, பான் கார்டு (PAN Card), வாக்காளர் அடையாள அட்டை (Voter ID) உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் உடனும் இந்த ஆதார் கார்டு இணைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் ஆதார் விவரங்களை எப்போதும் தயாராக வைத்திருக்க வேண்டும் என்ற நிலை உள்ளது. இதற்காக மத்திய அரசு மேற்கொண்ட ஒரு புதிய முயற்சியை கைவிடுவதாக அறிவித்துள்ளது. அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஸ்மார்ட்போன்களில் ஆதார் செயலி ப்ரீ இன்ஸ்டால் – உத்தரவிட்ட மத்திய அரசு
இந்தியா, டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் அனைத்து துறைகளையும் டிஜிட்டல் மயமாக மாற்றியுள்ளது. அரசின் சேவைகள் அனைத்தும் ஆன்லைன் மூலமே பெற்றுகொள்ளும் வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில், அரசின் முக்கிய சேவைகளான ஆதார், பான், இபிஎஃப்ஓ ஆகியவை தொடர்பான சேவைகளும் ஆன்லைன் மூலமே கிடைக்கின்றன. அந்த வகையில் ஆதார் கார்டு மிக முக்கியமாக உள்ள நிலையில், பொதுமக்கள் தங்களது அன்றாட வாழ்வில் மிக எளிதாக பயன்படுத்த வேண்டும் என்பதற்காக ஆதார் செயலியை பயன்பாட்டில் வைத்துள்ளது. இதன் மூலம் ஆதார் விவரங்கள் மற்றும் வெரிஃபிகேஷன் ஆகியவற்றை மிக சுலபமாக மேற்கொள்ள முடியும்.
இதையும் படிங்க : யூடியூப் ஷார்ட்ஸ் வீடியோக்களால் தொல்லையா? இனி அந்த பிரச்னை இல்லை – வந்தாச்சு புது அப்டேட்
திட்டத்தை கைவிடும் மத்திய அரசு
இந்திய குடிமக்களுக்கு ஆதார் கார்டை கட்டாயமாக வைத்துள்ள மத்திய அரசு, அதன் சேவைகளை பெற ஆதார் செயலியையும் கட்டாயமாக்க முயற்சி செய்தது. அதாவது, இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் புதிய ஸ்மார்ட்போன்களில் ஆதார் செயலி முன்கூட்டிய பதிவிறக்கம் செய்யப்பட வேண்டும் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் கூறியது. ஆனால், அது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆலோசனைகளின் படி, அதற்கான வாய்ப்புகள் மிக குறைவாக இருப்பதால் அரசு அந்த திட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளது. ஸ்மார்ட்போன் மற்றும் எலக்ட்ரானிக் நிறுவனங்கள் தங்கள் பக்க வாதங்களை முன்வைத்த நிலையில், அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.