Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தொல்லை கொடுக்கும் கூகுள் பே ஆட்டோ பே அம்சம்.. கேன்சல் செய்ய சிம்பிள் ஸ்டெப்ஸ் இதோ!

Cancel Google Autopay | கூகுள் பே-ல் உள்ள ஆட்டோ பே அம்சம் மூலம் பலர் கடும் சவால்களையும், சிக்கல்களையும் எதிர்க்கொள்கின்றனர். இந்த நிலையில், கூகுள் பே ஆட்டோ பே அம்சத்தை கேன்சல் செய்வது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

தொல்லை கொடுக்கும் கூகுள் பே ஆட்டோ பே அம்சம்.. கேன்சல் செய்ய சிம்பிள் ஸ்டெப்ஸ் இதோ!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 28 Mar 2025 18:44 PM IST

பண பறிமாற்றத்தை (Money Transfer) நொடி பொழுதில் நிகழ்த்துவதற்காக அறிமுகம் செய்யப்பட்ட அசத்தலான அம்சம் தான் யுபிஐ (UPI – Unified Payment Interface). யுபிஐ அம்சம் மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் நொடி பொழுதில் பணம் அனுப்ப முடியும். யுபிஐ இவ்வாறு உடனடி சேவையை வழங்கும் நிலையில் தான், ஏராளமான மக்கள் அதனை பயன்படுத்துகின்றனர்.

தொல்லை கொடுக்கும் ஆட்டோ பே அம்சம்

இந்தியாவை பொருத்தவரை யுபிஐ மிக வேகமாக நாடு முழுவதும் பரவ தொடங்கிவிட்டது. அதன் விலைவாக பெரிய நகரங்கள் முதல் சிறிய கிராமங்கள் வரை இந்தியாவின் மூலை, முடுக்கெங்கும் யுபிஐ சேவை பரவி கிடக்கிறது. யுபிஐ-ல் பண பரிவர்த்தனை மட்டுமன்றி, மொபைல் ரீச்சார்ஜ், தொலைக்காட்சி ரீச்சர்ஜ் என பல்வேறு கட்டணங்களையும் சுலபமாக செலுத்த முடியும்.

பல சேவைகளை பெற மாதம் மாதம் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இதற்காக கூகுள் பே செயலியில் (Google Pay) உள்ள ஒரு அசத்தல் அம்சம் தான் ஆட்டோ பே (Auto Pay). அதாவது, இந்த அம்சம் மூலம் மாதம் மாதம் வங்கி கணக்கில் இருந்து பணம் பிடித்தம் செய்யப்படும். நீங்கள் மாதம் மாதம் நினைவு வைத்தோ அல்லது சேவை முடிந்த பின்னர் புதுப்பிப்பதற்காக கட்டணம் செலுத்த வேண்டாம்.

சிலர் இந்த அம்சத்தை விரும்பி தேர்வு செய்தாலும் பெரும்பாலான நிறுவனங்கள் கட்டாயமாக இந்த அம்சத்தை திண்கின்றன. ஒருவேளை நீங்கள் இந்த ஆட்டோ பே அம்சத்தால் சிக்கலளை சந்தித்தித்து வருகிறீர்கள் என்றால், அதனை கேன்சல் செய்வது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கூகுள் பே ஆட்டோ பே அம்சம் – கேன்சல் செய்வது எப்படி?

  1. அதற்கு முதலில் கூகுள் பே செயலிக்குள் செல்ல வேண்டும்.
  2. அங்கு வலது பக்கத்தில் மேலே கொடுக்கப்பட்டுள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்யுங்கள்.
  3. அதில் உள்ள ஆட்டோ பே (AutoPay) என்ற அம்சத்தை கிளிக் செய்யுங்கள்.
  4. அதில் நீங்கள் என்ன என்ன ஆட்டோ பேமெண்ட் செய்கிறீர்கள் என்ற முழுமையான பட்டியல் தோன்றும்.
  5. தற்போது உங்களுக்கு எந்த ஆட்டோ பேமெண்டை கேன்சல் செய்ய வேண்டுமோ அதனை தேர்வு செய்து கேன்சல் ஆட்டோ பே (Cancel Autopay) என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  6. பின்பு அதனை உறுதி செய்வதற்காக நீங்கள் தேர்வு செய்ததை உறுதி செய்ய வேண்டும்.
  7. பிறகு பின் நம்பரை பதிவு செய்து, ஆட்டோபேவை கேன்சல் செய்வதை உறுதி செய்ய வேண்டும்.
  8. உங்கள் கோரிக்கையின் படி, ஆட்டோ பேமெண்ட் கேன்சல் செய்யப்பட்டால் அது தொடர்பான குறுஞ்செய்தி உங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும்.

மேற்குறிப்பிட்ட இந்த எளிமையான நடைமுறைகளை பின்பற்றி மிக சுலபமாக உங்கள் கூகுள் பே செயலியில் இருந்து ஆட்டோ பே அம்சத்தை கேன்சல் செய்துக்கொள்ளலாம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.