Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Paytm : பேடிஎம்-ல் வந்தது Hide Payment ஆப்ஷன்.. இனி பண பரிவர்த்தனைகளை Hide மற்றும் Unhide செய்துக்கொள்ளலாம்!

Hide UPI Payments on Paytm | இந்தியாவில் பெரும்பாலான பொதுமக்கள் தங்களது அன்றாட வாழ்வில் யுபிஐ செயலிகள் மூலம் பண பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், பயனர்களுக்கு பயனளிக்கும் விதமாக பண பரிவர்த்தனைகளை ஹைட் செய்யும் அம்சத்தை பேடிஎம் அறிமுகம் செய்துள்ளது. அதன் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக் பார்க்கலாம்.

Paytm : பேடிஎம்-ல் வந்தது Hide Payment ஆப்ஷன்.. இனி பண பரிவர்த்தனைகளை Hide மற்றும் Unhide செய்துக்கொள்ளலாம்!
மாதிரி புகைப்படம்
vinalin-sweety
Vinalin Sweety | Updated On: 01 Jul 2025 16:33 PM

இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில்  அதிக மக்களால் யுபிஐ (UPI – Unified Payment Interface) செயலிகள் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கூகுள் பே (Google Pay), போன் பே (PhonePe), பேடிஎம் (Paytm) உள்ளிட்ட செயலிகளும் உள்ளன. அந்த வகையில் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் யுபிஐ செயலிகளில் ஒன்றுதான் பேடிஎம். இவ்வாறு ஏராளமான பொதுமக்கள் பேடிஎம் யுபிஐ செயலியை தங்களது அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் நிலையில், அவர்களுக்கு பயனளிக்கும் விதமாக பேடிஎம் ஒரு அசத்தல் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. அதாவது, Hide Payment என்ற அம்சத்தை தான் அறிமுகம் செய்துள்ளது. இந்த அம்சத்தின் சிறப்புகள் என்ன, அதனை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பேடிஎம் செயலியில் வந்த “Hide Payment” அம்சம் 

பொதுமக்கள் தங்களது அன்றாட வாழ்வில் யுபிஐ செயலிகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். அவ்வாறு யுபிஐ செயலிகளில் மேற்கொள்ளப்படும் பண பரிவர்த்தனைகள், செயலியில் சேமிக்கப்படும். அதன் மூலம் எந்த நாளில் யாருக்கு எவ்வளவு பணம் அனுப்பப்பட்டுள்ளது என்பதை மிக சுலபமாக தெரிந்துக்கொள்ளலாம். இது பலருக்கும் தங்களது நிதியை மேம்படுத்தக்கூடிய ஒரு சிறந்த அம்சமாக உள்ளது. ஆனால், சிலர் சில சமயங்களில் இந்த அம்சம் மூலம் சில சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.

அதாவது, Payment Histoty-ல் அனைத்து விதமான பண பரிவர்த்தனைகளும் இடம்பெற்று இருக்கும் என்பதால், யாருக்கேனும் பரிசளிக்க பண செலவழித்தாலோ, ரகசியமாக ஏதேனும் பண பரிவர்த்தனை செய்தாலோ அது பிறருக்கு தெரிய வந்துவிடும். இந்த நிலையில் தான், பண பரிவர்த்தனைகளை Hide மற்றும் Unhide செய்துகொள்வதற்கான அனுமதியை வழங்கும் விதமாக பேடிஎம் இந்த புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.

பேடிஎம் “Hide Payment” அம்சம் – பயன்படுத்துவது எப்படி?

  1. அதற்கு முதலில் பேடிஎம் செயலிக்கு செல்ல வேண்டும்.
  2. அதில் நீங்கள் எந்த பண பரிவர்த்தனையை Hide செய்ய விரும்புகிறீர்களோ அதன் மீது இடது பக்கத்தில் இருந்து இழுக்க வேண்டும்.
  3. அதில் தோன்றும் Hide ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
  4. பிறகு Yes என்பதை கிளிக் செய்து உறுதி அளிக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்ட இந்த நடைமுறையை பின்பற்றி மிக சுலபமாக பேடிஎம் செயலியில் பண பரிவர்த்தனையை Hide செய்துக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.