Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

UPI பேமெண்ட் தோல்வியா? இந்த 5 முறைகளை டிரை பண்ணுங்க!

UPI Payment Problem : இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் பணம் செலுத்துவதற்குப் பயன்படுத்தும் முக்கிய வழியாக UPI இருந்தாலும், சில நேரங்களில் GPay, PhonePe, Paytm போன்ற பயன்பாடுகள் தற்காலிகமாக செயலிழக்கின்றன. இப்படிப்பட்ட நேரங்களில் பணப்பரிவர்த்தனையை நிறைவு செய்ய முடியாமல் சிக்கல் ஏற்படலாம். அந்த நேரங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

UPI பேமெண்ட் தோல்வியா? இந்த 5 முறைகளை டிரை பண்ணுங்க!
மாதிரி புகைப்படம்
karthikeyan-s
Karthikeyan S | Published: 13 May 2025 17:48 PM

இன்றைய காலக்கட்டத்தில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் (Digital Transaction) மக்களின் முக்கியமான தேவைகளில் ஒன்றாக மாறியிருக்கிறது. Unified Payment Interface எனப்படும் யூபிஐ (UPI) மூலம் வங்கி கணக்கை இணைத்து ஆன்லைன் மூலம் பணம் செலுத்திக்கொள்ளலாம். இதனால் வெளியே செல்லும்போது பணம் எடுத்து செல்ல வேண்டிய தேவை இல்லை. ஆனால் சில நேரங்களில், GPay, PhonePe, Paytm போன்ற யூபிஐ செயலிகள் அவ்வப்போது தற்காலிகமாக செயலிழக்கின்றன என்பதால் முழுமையாக அதனை நம்பியிருப்பது சிக்கலை ஏற்படுத்தும். முன் கூட்டியே அதற்கான மாற்று வழிகளை தயார் செய்து வைத்திருந்தால் தேவைப்படும் நேரங்களில் அதனை எளிதாக சமாளிக்க முடியும். இப்போது, உங்கள் ஸ்மார்ட்போனில்  யுபிஐ செயலிகள் வேலை செய்யவில்லையெனில் என்ன செய்வது?  மற்றும் அதற்கான தீர்வு என்ன? என்பதையும் இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

வேறொரு யூபிஐ ஆப்பை பயன்படுத்துங்கள்

ஒரு  யூபிஐ ஆப் வேலை செய்யவில்லை என்றால், வேறு ஒன்றை பயன்படுத்த முயற்சிக்கலாம். GPay, PhonePe, Paytm போன்ற பல விருப்பங்கள் உள்ளன. பெரும்பாலான நேரங்களில் பிரச்சனை ஒரு தளத்திலேயே மட்டுப்படும், மற்றவை வேலை செய்யும்.

வங்கியின் செயலியை பயன்படுத்துங்கள்

SBI YONO, HDFC Mobile Banking, ICICI iMobile போன்ற நம் அக்கவுண்ட் இருக்கும் வங்கியின் செயலிகளில் உள்ள கியூஆர் கோடை ஸ்கேன் செய்து நேரடியாக பணம் செலுத்தலாம். அவற்றில் பெரும்பாலும் யூபிஐ வசதிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

 டெபிட்/கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துங்கள்

யூபிஐ ஆப்கள் வேலை செய்யவில்லையெனில் அவரசத்துக்கு உங்கள் டெபிட் அல்லது கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி ஆன்லைன் மூலமோ அல்லது POS மெஷின் வழியாகவோ பணம் செலுத்தலாம்.

நெட் பேங்கிங்கை பயன்படுத்துங்கள்

உங்கள் வங்கியின் இணைய பக்கத்திற்கு சென்று Net Banking மூலம் உங்கள் பரிவர்த்தனையை முடிக்கலாம்.

எப்பொழுதும் கையில் சிறிது பணம் வைத்திருங்கள்

இப்படியான அவசரநேரங்களில் சிறிது பணம் வைத்திருப்பது நன்மை தரும். அதுவும் யூபிஐ மூலம் பணம் செலுத்த முடியாத சூழ்நிலையில் உதவும்.

இந்தியாவில் யூபிஐ பயன்பாடு சாதனை

கடந்த 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மட்டும் இந்தியா முழுவதும் 18.3 பில்லியன் யூபிஐ பரிவர்த்தனைகள் நடைபெற்றிருக்கின்றன. அதன் மூலம் ரூ. 24.77 லட்சம் கோடி மதிப்புள்ள பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் PhonePe மட்டும் சுமார் 50 சதவிகிதம் பணப்பரிவர்த்தனைகள் நடந்திருக்கின்றன. அதனைத் தொடர்ந்து Google Pay மற்றும் Paytm இடம் பெற்றுள்ளன.

யூபிஐ செயலிழக்கும்போது கவனிக்க வேண்டியவை

யூபிஐ பரிவர்த்தனை தோல்வியடைந்த உடனேயே அதை தொடர்ந்து பலமுறை முயற்சிக்க வேண்டாம். சில நிமிடங்கள் காத்திருந்து, பிறகு மீண்டும் முயற்சிக்கலாம் அல்லது  வேறு வழிகளில் பணம் செலுத்த முயற்சிக்கலாம்.  இல்லையெனில் இரண்டு முறை பணம் செலுத்தும் சிக்கல் ஏற்படும்.

விர்ச்சுவல் கிரெடிட் கார்டால் கிடைக்கும் 7 நன்மைகள்
விர்ச்சுவல் கிரெடிட் கார்டால் கிடைக்கும் 7 நன்மைகள்...
ரோஹித், கோலிக்கு மாற்று யார்? இந்திய அணி எப்படி இருக்கும்..?
ரோஹித், கோலிக்கு மாற்று யார்? இந்திய அணி எப்படி இருக்கும்..?...
ராகவா லாரன்ஸின் பென்ஸ் படப் பூஜையில் சிவகார்த்திகேயன்!
ராகவா லாரன்ஸின் பென்ஸ் படப் பூஜையில் சிவகார்த்திகேயன்!...
கோடையில் அதிக வெப்பத்தால் விரைவில் வயது முதிர்வு ஏற்படும்?
கோடையில் அதிக வெப்பத்தால் விரைவில் வயது முதிர்வு ஏற்படும்?...
ரயிலின் கழிப்பறையில் பாம்பு.. அசால்டாக பிடித்த ரயில்வே அதிகாரி!
ரயிலின் கழிப்பறையில் பாம்பு.. அசால்டாக பிடித்த ரயில்வே அதிகாரி!...
அடிக்கடி ஹை ஹீல்ஸ் போடுவீங்களா... உஷார்!
அடிக்கடி ஹை ஹீல்ஸ் போடுவீங்களா... உஷார்!...
குரு பெயர்ச்சி 2025: செம லக்! 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும்
குரு பெயர்ச்சி 2025: செம லக்! 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும்...
அதிமுக ஆட்சியில் பாதுகாக்க நினைத்தவர்களுக்கு தண்டனை - கனிமொழி
அதிமுக ஆட்சியில் பாதுகாக்க நினைத்தவர்களுக்கு தண்டனை - கனிமொழி...
இந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி எஸ் 25 எட்ஜ்!
இந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி எஸ் 25 எட்ஜ்!...
ரூ.3.5 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.58,766 வருமானம்
ரூ.3.5 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.58,766 வருமானம்...
டூரிஸ்ட் ஃபேமிலி வெற்றி விழாவில் கண்கலங்கி எமோஷ்னலான சிம்ரன்
டூரிஸ்ட் ஃபேமிலி வெற்றி விழாவில் கண்கலங்கி எமோஷ்னலான சிம்ரன்...