Teachers Day : ஆசிரியர் பணியே அறப்பணி.. இந்த ஆசிரியர் தினத்துக்கு இப்படி வாழ்த்து கூறுங்கள்!
Happy Teachers' Day 2025 | ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 ஆம் தேதி ஆசிரியர் தின விழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் நாளை (செப்டம்பர் 05, 2025) ஆசிரியர் தின விழா கொண்டாடப்படும் நிலையில், உங்கள் ஆசிரியர்களுக்கு இப்படி வாழ்த்து கூறுங்கள்.

இந்தியாவில் ஆசிரியர்களின் மகத்துவத்தை போற்றும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 ஆம் தேதி ஆசிரியர் தின விழா (Teachers Day) கொண்டாடப்படுகிறது. இந்திய நாட்டின் முன்னாள் குடியரசு தலைவரும் சிறந்த ஆசிரியராகவும் திகழ்ந்த டாட்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளே ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் நாளை (செப்டம்பர் 05, 2025) இந்தியா முழுவதும் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், இந்த ஆசிரியர் தினத்திற்கு உங்களது வாழ்வின் வழிகாட்டியான ஆசிரியர்களுக்கு சிறப்பாக எப்படி வாழ்த்து கூறுவது என்பது குறித்து பார்க்கலாம்.
சமுதாயத்தின் வழிகாட்டியாக முக்கிய பங்கு வகிக்கும் ஆசிரியர்கள்
சமுதாயத்தின் முக்கியமான பணிகளில் ஒன்று தான் ஆசிரியர் பணி. ஒரு ஆசிரியர் பல மாணவர்களின் தலை எழுத்தை மாற்றும் வல்லமை கொண்டவர். ஆசிரியர்கள் தங்களது ஆற்றலாலும், அறிவாலும் நாள் தோறும், ஆண்டுதோறும் ஏராளமான மருத்துவர்கள், பொறியாளர்கள், விஞ்ஞானிகள் என பல துறைகளில் நுபுணர்களை உருவாக்குகின்றனர். கல்வி மிகப்பெரிய ஆயுதம் என்றால் அதனை கூர் தீட்டும் கருவிகள் தான் ஆசிரியர்கள். அத்தகைய மகத்தான பணியை செய்யும் ஆசிரியர்களை போற்றும் விதமாக தான் இந்த ஆசிரியர் தினம் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கோலாகலமாக நடைபெறுகிறது.
இதையும் படிங்க : 7.8% வளர்ச்சி… சவால்களை மீறி இந்தியா முன்னேற்றம்… டிரம்ப்பிற்கு பிரதமர் மோடி மறைமுக பதில்




இந்த ஆசிரியர் தினத்துக்கு இப்படி வாழ்த்துங்கள்
- இனிய ஆசிரியர் தின விழா வாத்துக்கள். உங்கள் அறிவால் மிகவும் நிதானமாக எங்களை வழிகாட்டுவதற்கு மிக்க நன்றி.
- இந்த சிறப்பான நாளில் அனைத்து ஆசிரியர்களுக்கும் நெஞ்சார்ந்த ஆசிரியர் தின விழா நல்வாழ்த்துக்கள். இந்த நாள் முழுவதும் அன்பும், மரியாதையும், நன்றி உணர்வு வெளிப்படுத்தும் விதமாக அமையட்டும். நீங்கள் தான் இந்த நாட்டை கட்டமைப்பவர்கள்.
- உங்கள் வார்த்தை தைரியத்தை கொடுக்கிறது, உங்கள் வழிகாட்டுதல் அடையாளத்தை உருவாக்குகிறது, உங்களுடைய பாடங்கள் எதிர்காலத்தை கட்டமைக்கிறது. இனிய ஆசிரியர் தின விழா நல்வாழ்த்துக்கள்.
- ஆசிரியர்கள் சமூதாயத்தின் ரகசிய கலைஞர்கள். அதன் காரணமாக இன்று நாங்கள் உங்களை கொண்டாடுகிறோம். இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.
இதையும் படிங்க : இந்தியாவில் அதிகரிக்கும் புற்றுநோய் பாதிப்புகள்.. 100-ல் 11 பேருக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம்.. ஷாக் ரிப்போர்ட்..
உங்கள் வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்த ஆசிரியர்களுக்கு மேற்குறிப்பிட்ட படி வாழ்த்து கூறி உங்களது ஆசிரியர்களை மகிழ்வியுங்கள்.