கிரியேட்டர்களுக்கு பெரிய வாய்ப்பு – ஏஐ பயிற்சிக்காக 15,000 இலவச ஸ்காலர்ஷிப் – மத்திய அரசு அறிவிப்பு

இந்தியாவின் டிஜிட்டல் கண்டென்ட் கிரியேட்டர் துறையை மேம்படுத்தும் நோக்கில் மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. அதன் படி கூகுள் மற்றும் யூடியூப் உடன் இணைந்து 15,000 பேருக்கு இலவச ஏஐ ஸ்காலர்ஷிப் வழங்கப்படும் ஏன அறிவிக்கப்பட்டுள்ளது.

கிரியேட்டர்களுக்கு பெரிய வாய்ப்பு - ஏஐ பயிற்சிக்காக 15,000 இலவச ஸ்காலர்ஷிப் - மத்திய அரசு அறிவிப்பு

மாதிரி புகைப்படம்

Updated On: 

26 Mar 2026 16:38 PM

 IST

இந்தியாவின் டிஜிட்டல் கண்டென்ட் கிரியேட்டர் துறையை மேம்படுத்தும் நோக்கில் மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. அதன் படி கூகுள் மற்றும் யூடியூப் உடன் இணைந்து 15,000 பேருக்கு இலவச ஏஐ ஸ்காலர்ஷிப் வழங்கப்படும் ஏன அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவித்தார். இந்தியாவின் டிஜிட்டல் வளர்ச்சியை மேம்படுத்தவும், குறிப்பாக மீடியா, எண்டெர்டெயின்மென்ட் மற்றும் டிஜிட்டல் கண்டென்ட் துறைகளில் பல திறமைகளை உருவாக்கவும் இந்த திட்டம் உதவும் என அவர் கூறினார்.

இந்த ஸ்காலர்ஷிப் திட்டம் மூலம், மாணவர்கள், யூடியூபர்ஸ், கண்டென்ட் கிரியேட்டர்ஸ், டெவலப்பர்ஸ், திரைப்பட மற்றும் மீடியா தொழில்நுட்ப நிபுணர்கள் எல்லோரும் ஏஐ சார்ந்த பயிற்சிகளை இலவசமாக பெறலாம். தேசிய ஏஐ ஸ்கில்லிங் இனிசியேட்டிவ் என்ற பெயரில் செயல்படும். இது இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் கிரியேட்டிவ் டெக்னாலஜி மூலம் கூகுள் மற்றும் யூடியூப் இணைப்பில் செயல்படுத்தப்படுகிறது.

இதையும் படிக்க : மொபைல் எண் இல்லாமலேயே அழைப்புகள்.. 92 மொழிகள்.. உள்நாட்டு மெசஞ்சரை கொண்டு வந்த அனுவாதினி ஏஐ!

பயிற்சியின் முக்கிய நோக்கங்கள்

மேலும், 15,000 பேருக்கு ஏஐ பயிற்சி மீடியா, அனிமேஷன், விஎஃபெக்ஸ், கேமிங் போன்ற துறைகளில் வேலை வாய்ப்பு திறன் மற்றும் தியரிக்கு பதிலாக பிராக்டிக்கலாக பயிற்சி வழங்கப்படும். கூகுள் கேரியர் சான்றிதழ் என்ற திட்டத்தின் மூலம் ஏஐ பயிற்சி வழங்கப்படும். கூகுள் நிறுவனத்தின் படி, இந்த திட்டம் இரண்டு கட்டங்களாக நடைபெறும். முதலாவதாக கூகுள் கேரியர் சான்றிதழ் அணுகல், ஜெனரேட்டிவ் ஏஐ அறிமுகம், ஏஐ தொழில்நுட்பத்தின்அடிப்படை அறிவு ஆகியவை கற்றுக்கொடுக்கப்படும்.

பின்னர் ஏஐ டூல் மூலம் கண்டென்ட் உருவாக்குவது எப்படி, யூடியூப் வீடியோக்கள் உருவாக்குவது ஆகியவை குறித்து விரிவாக கற்றுத்தரப்படும். இந்த திட்டம் இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஆன்லைன் மற்றும் நேரடி வகுப்புகள் மூலம் நடைபெறும். இந்த திட்டத்துக்கு மாணவர்கள், யூடியூபர்கள் கண்டென்ட் கிரியேட்டர்கள் டெவலப்பர்கள், மீடியா மற்றும் எண்டர்டெயின்மென்ட் துறையில் உள்ளவர்கள் ஆகியோர் இந்த திட்டத்தில் பயிற்சி பெற தகுயிானவர்களாக கருதப்படுவர். மேலும் அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ் கேமிங், காமிக்ஸ் போன்ற வளர்ந்து வரும் துறைகளுக்கு இந்த திட்டம் பெரிய ஆதரவாக இருக்கும்.

இதையும் படிக்க : தேர்தல் நடத்தை விதிகள்: வாட்ஸ்அப் குழுக்களுக்கு கட்டுப்பாடு – மீறினால் சட்ட நடவடிக்கை

ஏஐ காரணமாக கண்டென்ட் உருவாக்குவது போன்ற செயல்பாடுகளை முற்றிலும் மாறி வருகிறது. இந்த நிலையில் ஏஐ கற்பதன் மூலம் நம்மால் காலத்துக்கு ஏற்ப அப்டேட் செய்ய முடியும். இலகுவாக ஒரு வேலையை செய்ய முடியும். இதனால் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும், வருமானம் பெருகும்.

Follow Us
Related Stories
இனி சமூக வலைதளங்களில் போலி கணக்கு துவங்க முடியாது – மத்திய அரசு அதிரடி திட்டம்
வாட்ஸ்அப்பில் காட்டினாலே போதும்… மருத்துவ செலவுகளுக்கு பணம் எடுத்து செல்பவர்களுக்கு தளர்வு – தேர்தல் ஆணையர் முக்கிய அறிவிப்பு
விரைவில் அறிமுகமாகும் ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 9 அல்ட்ரா ஸ்மார்ட்போன்.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?
15 நிமிடங்களில் தானாகவே மறையும் குறுஞ்செய்திகள்.. புதிய அம்சத்தை சோதனை செய்யும் வாட்ஸ்அப்!
மொபைல் எண் இல்லாமலேயே அழைப்புகள்.. 92 மொழிகள்.. உள்நாட்டு மெசஞ்சரை கொண்டு வந்த அனுவாதினி ஏஐ!
அதிகரிக்கும் கோடை வெப்பம்? ரூ.10 லட்சத்துக்குள் கிளைமேட் கண்டரோல் வசதியுடைய கார்கள் – டாப் 5 இதோ!
ஏப்ரல் 1 முதல் பான் கார்டு விதிகளில் வரவிருக்கும் மாற்றம்
தாய், மகளைக் கடித்து குதறிய வளர்ப்பு நாய்.. வேடிக்கை பார்த்த உரிமையாளர்கள்..
ஏப்ரல் 1 முதல் உங்கள் சம்பளம் மாறப்போகிறது!.. புதிய விதிகள், வரி மாற்றங்கள்..
இனி இரவிலும் சூரிய ஒளியை பெறலாம்.. விண்வெளியில் கண்ணாடி அமைக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனம்..