Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

லேப்டாப்பில் வாட்ஸ்அப் பயன்படுத்தாதீங்க – எச்சரிக்கும் மத்திய அரசு – காரணம் என்ன?

WhatsApp Web Alert : வாட்ஸ்அப் இன்று தவிர்க்க முடியாத செயலியாக மாறி வருகிறது. குறிப்பாக வேலை சார்ந்து நம் பணியாற்றும் நிறுவனத்துடன் நேரடியாக தொடர்பில் இருக்க வேண்டிய தேவை இருக்கிறது. இந்த நிலையில் அலுவலக லேப்டாப் பயன்படுத்தும்போது எச்சரிக்கையாக இருக்குமாறு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

லேப்டாப்பில் வாட்ஸ்அப் பயன்படுத்தாதீங்க – எச்சரிக்கும் மத்திய அரசு – காரணம் என்ன?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 16 Aug 2025 20:50 PM

பலர் தங்கள் அலுவலக வேலை காரணமாக வாட்ஸ்அப்பில் (WhatsApp) தொடர்பில் இருக்க வேண்டியிருக்கிறது. இதன் காரணமாக பலரும் தங்கள் லேப்டாப் (Laptop) மூலம் வாட்ஸ் அப் பயன்படுத்துகிறார்கள்.  இந்த பழக்கம் தவிர்க்க முடியாததாக இருக்கிறது. இந்த நிலையில் மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் லேப்டாப் மற்றும் டெஸ்க்டாப்பில் வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கைவிடுத்துள்ளது. இதன் காரணமாக ஊழியரின் தனிப்பட்ட தகவல்கள், நம் பணியாற்றும் நிறுவனங்களுக்கு செல்லும் என எச்சரித்துள்ளது.  குறிப்பாக அலுவலக லேப்டாப்பில் வாட்ஸ்அப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என எச்சரித்திருக்கிறது. இதற்காக, அலுவலக மடிக்கணினிகள் மற்றும் கணினிகளில் வாட்ஸ்அப் வலையைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

நாம் அலுவலக லேப்டாப்பில்  வாட்ஸ்அப் வலையைப் பயன்படுத்துவது உங்கள் மடிக்கணினி அணுகலை அலுவலக நிர்வாகம் மற்றும் நிறுவனத்தின் ஐடி குழு கண்காணிக்கும் என அது எச்சரித்துள்ளது. இது உங்கள் தனிப்பட்ட உரையாடல்கள் மற்றும் தனிப்பட்ட டாக்குமென்ட்களை அணுக அவர்களை அனுமதிக்கக்கூடும் என்று அரசாங்கம் கூறுகிறது.  இதற்கான தயாரிக்கப்ப்ட பிரத்யேக சாஃப்ட்வேர் கொண்டு அலுவலகம் உங்களை கண்காணிக்கும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க : WhatsApp : மோசடிகளை தடுக்க புதிய அம்சங்கள்.. அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வரும் வாட்ஸ்அப்!

தகவல் பாதுகாப்பு விழிப்புணர்வு குழுவின் கூற்றுப்படி, பல நிறுவனங்கள் இப்போது வாட்ஸ்அப் ஒரு பாதுகாப்பு அபாயமாகக் கருதுகின்றன. இது மால்வேர் மற்றும் மோசடிகளுக்கு ஆதாரமாக மாறக்கூடும் என்று அது கூறுகிறது. அது மட்டுமல்லாமல், அலுவலக வைஃபை பயன்படுத்தும் ஊழியர்கள் நிறுவனங்களுக்கு ஊழியர்களின் தொலைபேசிகளை அணுக வாய்ப்பளிப்பதாகவும் அரசு எச்சரிக்கிறது. இது உங்கள் தனிப்பட்ட தரவை ஆபத்தில் ஆழ்த்துகிறது. இருப்பினும், இதுபோன்ற சிக்கல்களைத் தவிர்க்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்று அரசாங்கம் விரும்புகிறது.

இதையும் படிக்க : வாட்ஸ்அப் குறித்து புதிய வழிமுறைகளை வெளியிடும் அரசு?.. உண்மை என்ன?.. PIB கூறுவது இதுதான்!

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

நீங்கள் புரௌசரில் வாட்ஸ்அப்பை பயன்படுத்த வேண்டியிருந்தால், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசாங்கம் உங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

புரௌசரில் வாட்ஸ்அப்பை பயன்படுத்திய பிறகு, உடனடியாக லாக் அவுட் செய்யுங்கள்.

தெரியாத நபர்களிடமிருந்து இணைப்புகளைக் கிளிக் செய்யும்போது மிகவும் கவனமாக இருப்பது மிகவும் அவசியம்.

வாட்ஸ்அப் பயன்படுத்தும்போது முடிந்த வரை அவற்றை போனில் மட்டுமே பயன்படுத்த முயற்சிக்க வேண்டும். மீட்டிங் போன்ற விஷயங்களுக்கு கூகுள் மீட் போன்ற பிற ஆப்சன்களை பயன்படுத்தலாம்.

அதே போல வாட்ஸ்அப்பில் போன் செய்வதற்கு பதிலாக, சாதராணமாக நேரடியாக போனில் இருந்தே கான்ஃபிரன்ஸ் கால் பேசலாம்.