கூகுள் பேயின் ‘PocketMoney’ அம்சம்… ஆபத்தானதா? உண்மை என்ன..?

Google Pay Feature : கூகுள் பே நிறுவனம் பாக்கெட் மணி என்ற புதிய அம்சத்தை அதன் பயனர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அம்சம் ஆபத்தானது எனவும் நம் வங்கி கணக்கில் உள்ள பணம் காலியாகிவிடும் என சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது.

கூகுள் பேயின் PocketMoney அம்சம்... ஆபத்தானதா?  உண்மை என்ன..?

மாதிரி புகைப்படம்

Published: 

09 Apr 2026 16:20 PM

 IST

முன்னணி டிஜிட்டல் பேமெண்ட் நிறுவனமான கூகுள் பே தனது புதிய பாக்கெட் மணி என்ற வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.  இந்த புதிய அம்சம், யுபிஐ சர்கிள் மூலம் குடும்பத்தினர், நண்பர்கள் அல்லது பணியாளர்கள் போன்றோருக்கு எளிதாக பணம் செலுத்த உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வங்கி கணக்கு இல்லாதவர்களுக்குக் கூட இந்த வசதி மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும் என்பது இதன் முக்கிய சிறப்பம்சமாகும்.

கூகுள் பே அறிமுகப்படுத்திய பாக்கெட் மணி வசதி

இந்த புதிய அம்சத்தில் , ஏற்கனவே கூகுள் பே பயன்படுத்தும் நபர் முதன்மை பயனராக இருப்பார். அவர் குடும்பத்தினர், நண்பர்கள் அல்லது ஊழியர்களை அவருக்கு கீழ் இணைக்க முடியும். அவர்கள் முதன்மை பயனராக இணைக்கப்பட்டவரின் வங்கி கணக்கின் உதவியுடன் பணம் செலுத்த முடியும். இதன் மூலம் குடும்பத்தின் மாதாந்திர செலவுகளை இந்த அம்சத்தின் மூலம் நிர்வகிக்க முடியும். மேலும் பெற்றோர்கள், குழந்தைகள் அல்லது ஊழியர்களுக்கா பணத்தை நிர்வகிக்க முடியும்.

இதையும் படிக்க : உங்கள் வாட்ஸ்அப் டேட்டா அழியாமல் பாதுகாக்க வேண்டுமா? இந்த எளிய டிப்ஸை டிரை பண்ணுங்க

இந்த புதிய அம்சத்தின் செலவுகள் வெகுவாக குறையும் என கூறப்படுகிறது. முதன்மை பயனர் தனது கீழே இணைக்கப்பட்டவர்களின் மாத வரம்பை நிர்வகிக்க முடியும். இதில் அதிகபட்சமாக மாதம் ரூ.15,000 வரை வரம்பு அமைக்க முடியும். இதில் பயனர் இணைத்த நபர்கள் தங்கள பணத்தை தங்களுக்கு உள்ள வரம்பிற்குள் நேரடியாக பணத்தை அனுப்பலாம்.

மேலும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் பயனருக்கு முன் அனுமதி பெறும் வசதியும் இதில் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் தங்கள் குடும்பத்தின் ஒவ்வொரு செலவையும் முதன்மை பயனர் கண்காணிக்க முடியும். இதனால் தேவையில்லாத செலவுகளையும் கட்டுப்படுத்த முடியும்.

‘PocketMoney’ அம்சம் ஆபத்தானதா?

இந்த அம்சம் ஆபத்தானது என்றும் நம் பேங்க் அக்கவுண்டில் உள்ள பணம் காலியாகிவிடும் என்றும் சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. இது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் அல்லது குடும்ப உறுப்பினர்களின் செலவுகளைக் கட்டுப்படுத்த அனுமதிக்கும் ஒரு அதிகாரப்பூர்வ அம்சமாகும். இதனை பயன்படுத்துவதால் நம் வங்கியில் உள்ள பணம் காலியாகாது. மாறாக, நாம் நிர்ணயித்த அல்லது அங்கீகரித்த அளவுக்கான வரம்பின் படியே பணத்தை மட்டுமே செலவழிக்க முடியும். இதனால் இந்த புதிய அம்சம் ஆபத்தானது அல்ல.

இதையும் படிக்க : இனி சுலபமாக ஜிமெயில் ஐடியை மாற்றம் செய்யலாம்.. கூகுள் வெளியிட்ட அசத்தல் அம்சம்!

கூகுள்பேயில் உள்ள நபர் தனது போன் காண்டாக்டில் உள்ள நபர்களை மட்டுமே இணைக்க முடியும். இந்த வசதியை பயன்படுத்த கூகுள் பே செயலியில் உள்ள யுபிஐ சர்கிள் என்ற ஆப்சனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் தான் இணைக்க வேண்டிய நபரைத் தேர்வு செய்யவும் பின்னர் மாத வரம்பு அல்லது ஒவ்வொரு பரிவர்த்தனைக்குமான அனுமதி என்ற ஆப்சனைத் தேர்வு செய்யவும். தேவையான விவரங்களை பதிவு செய்து, யுபிஐ பாஸ்வேர்டு போட்டு, அழைப்பை அனுப்பலாம்.

மொத்தத்தில், கூகுள் பேயின் இந்த புதிய பாக்கெட் மணி வசதி, குடும்பத்தினருக்குள் பாதுகாப்பாகவும், எளிதாகவும் பண பரிவர்த்தனை செய்ய உதவும் பயனுள்ள அம்சமாக பார்க்கப்படுகிறது. இது டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை மேலும் பொதுமக்களுக்கு நெருக்கமாக்கும் ஒரு முயற்சியாக கருதப்படுகிறது.

Follow Us
தங்கம் வாங்குவதற்கு இது சிறந்த நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
ஆர்தமெஸ் 2 எடுத்த முதல் படத்தை பகிர்ந்த நாசா
புதிய கப்பல் வழித்தடம் - முடிவுக்கு வரும் எரிபொருள் பற்றாக்குறை
கேஸ் சிலிண்டருக்காக 40 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை - என்ன நடக்கிறது?