கூகுளில் தொலைபேசி எண்களை தேடுகிறீர்களா ? மோசடியில் சிக்கும் ஆபத்து
Trouble with Google AI Overview : கூகுளில் அனைத்து விதமான தகவல்களும் இருக்கும். பெரும்பாலான நபர்கள் தங்களுக்கு தேவையான தகவல்களை கூகுளில் தேடியே பெறுகிறார்கள். அப்படி ஒரு நிறுவனத்தின் தொலைபேசி எண்ணை கூகுளில் தேடிய பெண் ஒருவர் மோசடியில் சிக்கியிருக்கிறார்.

மாதிரி புகைப்படம்
ஏதாவது தகவல் வேண்டும் என்றால் மக்கள் உடனடியாக செய்வது கூகுளில் (Google) தான் தேடுவோம். குறிப்பாக ரெஸ்டாரண்ட்கள் முதல் மருத்துவமனை வரை அனைத்து விதவமான தகவல்களும் கூகுளில் கிடைக்கும். இதனால் உலகமே நம் உள்ளங்கைக்கு வந்த ஒரு உணர்வு ஏற்படும். ஆனால் அதில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சில நேரங்களில் மோசடியிலும் சிக்க வாய்ப்பிருக்கிறது. சிலர் தங்களின் நோய் அறிகுறிகளை கூகுகளில் தேடுவதால் தவறான தகவல்களை பெறுகிறார்கள். இப்படி கூகுளில் நன்மைகள் இருப்பது போல சிக்கல்களும் இருக்கிறது. இந்த நிலையில் கூகுளில், ஒரு நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மைய தொலைபேசி எண்ணை தேடிய ஒரு பெண் மோசடியில் சிக்கியிருக்கிறார். அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
கூகுள் மூலமாக நடக்கும் மோசடி
சமீபத்தில் ஒரு ஃபேஸ்புக் பயனர் அலெக்ஸ் ரிவ்லின் தனக்கு நடந்த சம்பவம் குறித்து பதிவிட்டுள்ளார். அதில் ராயல் கரீபியன் ஷட்டில் என்பதற்கு முன்பதி செய்ய, அந்த நிறுவனத்தின் கூகுளில் தேடினேன். அதன் பிறகு கூகுளின் ஏஐ, ஒரு அதிகாரப்பூர்வ எண்ணைக் காட்டியது. அந்த எண்ணை தொடர்பு கொண்ட போது அந்த நிறுவனத்தில் இருந்து வாடிக்கையாளர் சேவை மைய அலுவலர் பேசினார். பின்னர் அந்த நபர் என் முன்பதிவை உறுதிப்படுத்த கிரெடிட் கார்டு விவரங்கள் கேட்டார். பின்னர் தனிப்பட்ட தகவல்களைக் கேட்ட அவர், கூடுதல் கட்டணம் கேட்டார். இதனால் சந்தேகமடைந்த அலெக்ஸ் அழைப்பை துண்டித்தார்.
இதையும் படிக்க : சமூக ஊடகங்களுக்கு அடிமையாகி விட்டீர்களா?.. இந்த செயலிகள் உங்களுக்கு நிச்சயம் உதவி செய்யும்!
ஆனால் சில நேரங்களில் அவரது கிரெடிட் கார்டு கணக்கில் இருந்து, பணம் எடுக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து அலெக்ஸ் தனது கிரெடிட் கார்டு கணக்கை முடக்கினார். இந்த சம்பவம் மூலம் கூகுகளில் மோசடி நபர்கள் ஏஐ மூலம் போலியான தொலைபேசி எண்களைப பரப்புகிறார்கள் என்ற உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இது குறித்து புகார் அளித்த போது டிஸ்னி, கார்னிவல் பிரின்சஸ் லைன் உள்ளிட்ட பிற நிறுவனங்களுக்கும் போலியாக இதே தொலைபேசி எண் பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டது. இந்த வகையான மோசடிகள் நடப்பது இது முதன்முறை அல்ல. ஆனால் தற்போது ஏஐ தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உண்மைக்கு நெருக்கமாக நடைபெறுவது தான் இதில் அதிர்ச்சி அளிக்கும் செய்தி.
இதையும் படிக்க : இந்த 4 விஷயங்களை கூகுளில் தேடாதீர்கள் – சிறை தண்டனை நிச்சயம்!
இந்த வகை மோசடியைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
இந்த வகையில் மோசடி செய்பவர்கள் தற்போது வலைதளங்களில் போலி தொலைபேசி எண்களைப் பகிர தொடங்கியுள்ளனர். இந்த எண்கள் அடிக்கடி பயன்படுத்தப்படும் போது, கூகுள் போன்ற சர்ச் இன்ஜின்கள் இதனை நம்பகமான தகவலாக கருதி அனைவருக்கும் காட்டத் தொடங்கும். தற்போது ஏஐ தொழில்நுட்பங்களால் ஒருவர் கூகுளில் தேடத் தொடங்கும்போது முதல் பதிலாக கிடைக்கும். எனவே பலரும் இதனை உண்மை நம்பி மோசடியில் சிக்குகின்றனர்.
இதனால் கூகுள் காட்டும் தகவல்களை கண்மூடித்தனமாக நம்பக்கூடாது. கூகுளில் கிடைக்கும் எண்களை ஒருமறைக்கு இருமுறை உறுதி செய்துகொண்டு பின்னர் அழைக்கலாம். அதிகாரப்பூர்வ தளமா என்பதை உறுதி செய்ய வேண்டும். போலியானது என கண்டுபிடித்து புகார் அளிக்கலாம். இதனால் பிறரும் மோசடியில் சிக்காமல் தவிர்க்க முடியும்.