Apple iPhone 15 : வெறும் ரூ.28,550-க்கு கிடைக்கும் ஆப்பிள் ஐபோன் 15.. எங்கு தெரியுமா?

iPhone 15 Smartphone Selling at Lowest Price in Amazon | பொதுவாக ஐபோன்கள் என்றால் சற்று விலை அதிகமாக விற்பனை செய்யப்படும். ஆனால், அமேசானில் தற்போது வழங்கப்படும் சிறப்பு தள்ளுபடியை பயன்படுத்தி ரூ.69,999 மதிப்புள்ள ஐபோன் 15 ஸ்மார்ட்போனை வெறும் ரூ.28,550 வாங்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

Apple iPhone 15 : வெறும் ரூ.28,550-க்கு கிடைக்கும் ஆப்பிள் ஐபோன் 15.. எங்கு தெரியுமா?

ஐபோன் 15

Updated On: 

31 May 2025 20:56 PM

உலகம் முழுவதும் அதிக மக்களால் விரும்பி பயன்படுத்தப்படும் ஸ்மார்ட்போன்களாக உள்ளது ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் ஐபோன்கள் (iPhones) தான். ஐபோன்கள் தரம் மற்றும் பாதுகாப்பில் மற்ற ஸ்மார்ட்போன்களை விட சிறப்பாக உள்ளதால் பெரும்பாலான பொதுமக்கள் ஐபோன்கள் மீது அதிக நாட்டம் கொண்டுள்ளனர். ஐபோன்கள் எவ்வளவு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளதோ அதே அளவிற்கு அதிக விலையையும் கொண்டுள்ளது. மற்ற நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களை விடவும் ஐபோன்களின் விலை சற்று கூடுதலாக இருக்கும். இதன் காரணமாக பெரும்பாலான மக்களால் ஐபோன் வாங்க முடியாமல் போய்விடுகிறது. ஐபோன் வாங்கும் ஆசை இருந்து அதிக விலையின் காரணமாக அதனை வாங்காமல் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. அதாவது, ஆப்பிள் ஐபோன் 15 (Apple iPhone 15) அமேசான் (Amazon) தற்போது மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஐபோன் 15-க்கு அதிரடி சலுகைகளை வழங்கி வரும் ஆப்பிள் நிறுவனம்

ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ள நிலையில், ஆப்பிள் ஐபோன் 15 சீரீஸ் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், அமேசானில் தற்போது ஆப்பிள் ஐபோன் 15-க்கு அசத்தல் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை பயன்படுத்தி, ரூ.69,999 மதிப்பிலான இந்த ஆப்பிள் ஐபோன் 15 ஸ்மார்ட்போனை வெறும் ரூ.28,550-க்கு வாங்கிக்கொள்ளலாம்.

ரூ.69,999 மதிப்பிலான ஆப்பிள் ஐபோ 15-ஐ வெறும் ரூ.28,550-க்கு வாங்கலாம் – எப்படி?

ஆப்பிள் ஐபோன் 15 ஸ்மார்ட்போன் தற்போது அமேசானில் ரூ.69,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் 15 சதவீதம் தள்ளுபடி போக ரூ.59,700-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதில் மேலும் சில சலுகைகளும் உள்ளன. அதாவது, நல்ல நிலையில் உள்ள 512 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஆப்பிள் ஐபோன் 14 ஸ்மார்ட்போனை எக்ஸ்சேஞ்ச் செய்யும் பட்சத்தில் அதற்கு ரூ.31,150 வரை பணம் கிடைக்கும். இதன் மூலம் ரூ.69,999 மதிப்புள்ள ஆப்பிள் ஐபோன் 15 ஸ்மார்ட்போனை வெறும் ரூ.28,550-க்கு வாங்கிக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

பல நாட்களாக ஐபோன் வாங்க நினைத்துக்கொண்டு இருக்கும் நபர்களுக்கு குறைந்த விலையில் ஐபோன் வாங்க இது சிறந்த தேர்வாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.