ரூ.79,999-க்கான கூகுள் பிக்சல் 9 வெறும் ரூ.34,999-க்கு விற்பனை.. பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேலில் அதிரடி தள்ளுபடி!
Discount on Google Pixel Smartphones | பிளிப்கார்ட் நிறுவனத்தின் பிக் பில்லியன் டேஸ் சேல் இன்று (செப்டம்பர் 23, 2025) தொடங்கியுள்ளது. இந்த சேலில் கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி தள்ளுபடிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்களுக்கான சலுகைகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

கூகுள் பிக்சல் 9
பிளிப்கார்ட் (Flipkart) நிறுவனத்தின் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் (Flipkart Big Billion Days Sale) இன்று (செப்டம்பர் 23, 2025) தொடங்கியுள்ளது. இந்த சேலில் ஆப்பிள் (Apple), சாம்சங் (Samsung), ஒன்பிளஸ் (OnePlus) உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு அட்டகாசமான தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் தள்ளுபடிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்களுக்கு பிளிப்கார்ட் சேலில் வழங்கப்பட்டுள்ள தள்ளுபடிகள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் – கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் தள்ளுபடி
பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேலில் கூகுள் பிக்சல் 9 ப்ரோ ஃபோல்டு (Google Pixel 9 Pro Fold) மற்றும் கூகுள் பிக்சல் 9 (Google Pixel 9) ஆகிய ஸ்மார்ட்பொன்களுக்கு அட்டகாசமான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
கூகுள் பிக்சல் 9 ப்ரோ ஃபோல்டுக்கான பிளிப்கார்ட் தள்ளுபடி
கூகுள் பிக்சல் 9 ப்ரோ ஃபோல்டு ஸ்மார்ட்போன் ரூ.1,72,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், தற்போது பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேலில் வெறும் ரூ.99,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ரூ.73,000 தள்ளுபடியுடன் இந்த ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் Google Tensor G4 Chip மற்றும் Titan M2 Security பிராசசரை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 48 மெகாபிக்சல் வைட் ஆங்கில் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 10.5 மெகாபிக்சல் கேமரா அல்ட்ரா வைட், 10.8 மெகாபிக்சல் டெலிபோட்டோ மற்றும் 5x ஆப்டிக்கல் மற்றும் 20x சூப்பர் Resolution Zoom ஆகிய அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்போனில் 4,650 mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ள நிலையில், 45 வாட்ஸ் PPS Wired Charging அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : 10 நிமிடங்களில் Blinkit-ல் டெலிவரி செய்யப்படும் ஐபோன் 17.. அதுவும் அசத்தல் சலுகைகளுடன்!
கூகுள் பிக்சல் 9 ஸ்மார்ட்போனுக்கான பிளிப்கார்ட் தள்ளுபடி
ரூ.79,999-க்கு அறிமுகமான இந்த கூகுள் பிக்சல் 9 ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேலில் வெறும் ரூ.34,999-க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்ட்டில் ரூ.37,999 தள்ளுபடி வழங்கப்பட்டுள்ள நிலையில், குறிப்பிட்ட வங்கி கார்டுகளுக்கு ரூ.2,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதுதவிர எக்ஸ்சேஞ் போனஸாக ரூ.1,000 வழங்கப்படுகிறது. இதன் மூலம் கூகுள் பிக்சல் 9 ஸ்மார்ட்போனை ரூ.45,000 தள்ளுபடியுடன் வாங்கிக்கொள்ளலா என்பது குறிப்பிடத்தக்கது.