வெறும் ரூ.43,749-க்கு விற்பனை செய்யப்பட உள்ள ஐபோன் 15.. இந்த டீல மிஸ் பண்ணிடாதீங்க!
iPhone 15 At Just 45,000 Rupees | ஆப்பிள் நிறுவனம் தனது ஆப்பிள் 15 ஸ்மார்ட்போனை ரூ.79,900-க்கு அறிமுகம் செய்தது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேலில் அதிரடி சலுகையில் வெறும் ரூ.45,000-க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.

ஐபோன் 15
பிளிப்கார்ட் (Flipkart) நிறுவனம் தனது பிக் பில்லியன் டேஸ் சேலை (Flipkart Big Billion Days Sale) அறிவித்துள்ளது. இந்த சேலில் பல முன்னணி பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் தள்ளுபடிகளை பிளிப்கார்ட் வழங்க உள்ளது. ஐபோன்களுக்கு பிளிப்கார்ட் அட்டகாசமான சலுகைகளை அறிவித்துள்ள நிலையில், இந்த சேலில் ஐபோன் 15 ஸ்மார்ட்போன் (iPhone 15 Smartphone) வெறும் ரூ.45,000-க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், ஐபோன் 15 மாடல் ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்ட் எவ்வளவு சலுகை வழங்க உள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பிக் பில்லியன் டேஸ் சேலை அறிவித்த பிளிப்கார்ட்
பிளிப்கார்ட் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் தனது பிக் பில்லியன் டேஸ் சேலை அறிவிக்கும். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான பிக் பில்லியன் டேஸ் சேலை தற்போது அறிவித்துள்ளது. செப்டம்பர் 23, 2025 அன்று இந்த சேல் தொடங்க உள்ளது. இதில் பல முன்னணி பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் தள்ளுபடிகள் வழங்கப்பட உள்ளது. ஒன்பிளஸ், சாம்சங் உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி வழங்கப்பட உள்ளதை போலவே ஐபோன்களுக்கு சிறப்பு தள்ளுபடிகள் வழங்கப்பட உள்ளது.
இதையும் படிங்க : எக்கச்சக்க சலுகைகளுடன் தீபாவளி சேலை அறிவித்த ஒன்பிளஸ்.. ஸ்மார்ட்போன்களுக்கு கொட்டிக்கிடக்கும் ஆஃபர்கள்!
வெறும் ரூ.45,000-க்கு விற்பனை செய்யப்பட உள்ள ஐபோன் 15
ஐபோன் 15 ஸ்மார்ட்போன் 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் ரூ.79,900-க்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், கடந்த ஆண்டு இந்த ஸ்மார்ட்போன் ரூ.69,900 ஆக விலை குறைக்கப்பட்டது. தற்போது ஐபோன் 17 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள் ஐபோன் 15 ஸ்மார்ட்போன்களை கைவிட முடிவு செய்துள்ளது. அதாவது, இனி ஐபோன் 15 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை தயாரிக்கபோவதில்லை என ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த நிலையில், ஐபோன் 15 சீரீஸ் ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி வழங்க அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதையும் படிங்க : Meta Ray Ban ஜென் 2 ஏஐ ஸ்மார்ட் கண்ணாடி அறிமுகம்.. அட இத்தனை அசத்தல் அம்சங்களா?
ஐபோன் 15 ஸ்மார்ட்போனுக்கு அட்டகாசமான சலுகை
பிளிப்கார்ட் நிறுவனத்தின் பிக் பில்லியன் டேஸ் சேல் நடைபெற உள்ள நிலையில், அதன் மூலம் சிறப்பு சலுகையுடன் ஐபோன் 15 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்ய ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதாவது இந்த சேலில் 128 ஜிபி வேரியண்ட் கொண்ட ஐபோன் 15 ஸ்மார்ட்போன் ரூ.59,900-க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த நிலையில் வங்கி சலுகையுடன் இந்த ஸ்மார்ட்போன் வெறும் ரூ.43,749-க்கு விற்பனை செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.