Big Billion Days Sale : விரைவில் வருது பிளிப்கார் பிக் பில்லியன் டேஸ் சேல்.. சலுகைகள் என்ன என்ன?
Flipkart Big Billion Days Sale | பிளிப்கார்ட் நிறுவனம் அவ்வப்போது ஏதேனும் சேல்களை அறிவிக்கும். அந்த வகையில் தற்போது பிக் பில்லியன் டேஸ் சேலை அறிவித்துள்ளது. இந்த சேலில் ஸ்மார்ட்போன்கள் முதல் தொலைக்காட்சிகள் வரை அனைத்தும் அதிரடி சலுகையில் விற்பனை செய்யப்பட உள்ளது.

உலகின் மிகப்பெரிய இ காமர்ஸ் (e Commerce) நிறுவனமான பிளிப்கார்ட் (Flipkart) தனது பிக் பில்லியன் டேஸ் சேலை (Big Billion Days Sale) அறிவித்துள்ளது. இந்த சேல் எப்போது தொடங்கி எப்போது முடிகிறது என்பது குறித்த எந்த விதமான அறிவிப்பையும் அந்த நிறுவனம் வெளியிடவில்லை. மாறாக பிளிப்கார்ட் நிறுவனத்தின் இணையதளம் மற்றும் செயலிகளில் பிக் பில்லியன் டேஸ் சேல் கம்மிங் சூன் (Big Billion Days Sale Coming Soon) என்று விளம்பரம் செய்துள்ளது. இந்த நிலையில், பிளிப்கார்ட் நிறுவனம் விரைவில் பிக் பில்லியன் சேலின் தேதியை அறிவிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
விரைவில் வருகிறது பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல்
உலகின் மிகப்பெரிய இ காமர்ஸ் நிறுவனங்களில் ஒன்றுதான் பிளிப்கார்ட். இந்த நிறுவனத்துக்கு உலகம் முழுவதும் பில்லியன் கணக்கான பயனர்கள் உள்ளனர். பிளிப்கார்ட் தளம் மூலம் பொருட்களை ஆர்டர் செய்து வீட்டிற்கு வரவழைத்துக்கொள்ளலாம் என்பதால் பலருக்கும் இது மிகவும் பயனுள்ள அம்சமாக உள்ளது. பொதுமக்கள் வாழ்வில் பிளிப்கார்ட் இத்தகைய முக்கிய பங்கு வகிக்கும் நிலையில், அந்த நிறுவனம் அவ்வப்போது சில சேல்களை அறிவிக்கும். அத்தகைய சேல்களில் ஒன்றுதான் பிளிப்கார்டின் பிக் பில்லியன் டேஸ் சேல். இந்த சேலில் ஸ்மார்ட்போன்கள் உள்ளிட்ட மின்சாதன பொருட்களின் விலை மிக குறைவாக இருக்கும். இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான பிக் பில்லியன் டேஸ் சேலை பிளிப்கார்ட் தற்போது அறிவித்துள்ளது.
இதையும் படிங்க : Flipkart Black : இலவச யூடியூப் பிரீமியம் முதல் கேஷ்பேக் வரை.. அசத்தல் அம்சங்களுடன் அறிமுகமானது பிளிப்கார்ட் பிளாக்!




என்ன என்ன சிறப்பு சலுகைகள்
இந்த அமேசான் பிக் பில்லியன் டேஸ் சேலில் ஸ்மார்ட்போன்கள் மற்றும் தொலைக்காட்சிகளுக்கு அட்டகாசமான சலுகைகள் வழங்கப்பட உள்ளன. ஸ்மார்ட்போன்களை பொருத்தவரை புதிய மாடல்களான சாம்சங் கேலக்ஸி எஸ்25, கூகுள் பிக்சல் 10, சாம்சங் கேலஸி எஸ்24, ஐபோன் 16 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி சலுகைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களை மிக குறைந்த விலையில் வாங்கிக்கொள்ள முடியும் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க : ஏர்டெல் முதல் ஜியோ வரை.. ஓடிடி உடன் கிடைக்கும் அசத்தல் ரீச்சார்ஜ் திட்டங்கள்.. லிஸ்ட் இதோ!
சேல் எப்போது நடைபெறும்
இந்த அமேசான் பிக் பில்லியன் டேஸ் சேல் எப்போது நடைபெறும் என்பது குறித்த தேதி எதுவும் அந்த நிறுவனம் வெளியிடாத நிலையில், செப்டம்பர் கடைசி வாரம் அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கும் என கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.