லேப்டாப் பேட்டரியை சேதப்படுத்தும் 10 தவறுகள்: தவிர்ப்பது எப்படி?

Laptop Tips: லேப்டாப் என்பது இன்றைய காலகட்டத்தில் இன்றியமையாத ஒரு கருவியாக மாறிவிட்டது. ஆனால் லேப்டாப்பில் நாம் சந்திக்கும் பொதுவான பிரச்னை, சார்ஜ் விரைவாக காலியாவது தான். இந்த கட்டுரையில் பேட்டரி ஆயுள் நீடிக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.

லேப்டாப் பேட்டரியை சேதப்படுத்தும் 10 தவறுகள்: தவிர்ப்பது எப்படி?

மாதிரி புகைப்படம்

Published: 

06 Sep 2025 18:12 PM

 IST

இன்றைய வாழ்க்கையில் லேப்டாப் (Laptop) ஒரு அத்தியாவசியமான பொருளாக மாறியுள்ளது. வேலை, படிப்பு, பொழுதுபோக்கு என பல்வேறு தேவைகளுக்கு லேப்டாப் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஆனால் லேப்டாப்பில் நாம் செய்யும் பொதுவான தவறுகள் பேட்டரியை சேதப்படுத்தும். குறிப்பாக பேட்டரியில் சார்ஜ்  விரைவாக குறையும் பிரச்னைகளை நாம் அதிகம் எதிர்கொள்கிறோம். பலர் இதற்கு லேப்டாப்பின் தரம் தான் காரணம் என நினைக்கிறார்கள். ஆனால் நாம் அதனை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தே பேட்டரியின் செயல்பாடுகள் இருக்கும்.

சில எளிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் உங்கள் லேப்டாப் பேட்டரியின் ஆயுளை நீடிக்கவும், அடிக்கடி சார்ஜ் செய்யாமல் நீண்ட நேரம் பயன்படுத்தவும் முடியும். இந்த கட்டுரையில் நாம் செய்யும் பொதுவான தவறுகள் என்ன? அதனை தவிர்ப்பது எப்படி என பார்க்கலாம்.

இதையும் படிக்க : வாட்ஸ்அப்பில் யாருக்கும் தெரியாத 17 டிரிக்ஸ் – இது தெரிஞ்சா நீங்க தான் மாஸ்டர்

பேட்டரி ஆயுளை பாதுகாக்க வேண்டிய முக்கிய வழிமுறைகள்

  • லேப்டாப் எப்போதும் சார்ஜில் வைத்திருப்பது பேட்டரிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். பேட்டரி 20 சதவிகிதத்துக்கும் கீழே செல்லாமல் பார்த்துக்கொள்ளவும். அதே போல 80 முதல் 90 சதவிகிதம் ஆனவுடன் சார்ஜரை நீக்கவும்.
  • வெப்பம் பேட்டரிக்கு மிகப்பெரிய எதிரி. லேப்டாப் பயன்படுத்தும்போது எப்போதும் சமதளமான இடத்தில் வைத்து பயன்படுத்தவும். பெட் அல்லது போர்வை மீது வைத்து பயன்படுத்தினால் காற்றோட்டம் தடைபடும். இதனால் வெப்பம் அதிகரிக்கும்.
  • லேப்டாப்பில் Power Saver Mode / Battery Saver Mode-ஐ இயக்குவது பேட்டரி சுமையை குறைத்து அதிக நேரம் நீடிக்க உதவும்.
  • தேவையற்ற சாப்ட்வேர் பின்னணியில் இயங்குவதால் பேட்டரி விரைவில் பேட்டரி காலியாகும். Task Manager மூலம் அவற்றை கட்டுப்படுத்துவதன் மூலம் பேட்டரி செயல்திறன் மேம்படும்.
  • திரையின் அதிக பிரைட்னஸ் பேட்டரியை வேகமாக காலியாக்கும். எனவே தேவைக்கு ஏற்ப குறைந்த பிரைட்னஸ் வைத்துக்கொள்ளவும். வெளிச்சம் உள்ள அறைகளில் லேப்டாப் பயன்படுத்தவும்.

இதையும் படிக்க : மெசேஜில் வரும் S,G,P,T – இந்த எழுத்துகளுக்கு அர்த்தம் தெரியுமா? மோசடிகளை தவிர்க்கலாம்

  • பயன்படுத்தாத நேரங்களில் வைஃபை, ப்ளூடுத்  ஆகியவற்றை ஆஃப் செய்யவும். காரணமாக அவை அதிக பேட்டரி பவரை எடுத்துக்கொள்ளும். எனவே அவற்றை தேவையில்லாத போது நிறுத்தி விடுங்கள்.
  • பேட்டரியை அடிக்கடி 0 சதவிகிதம் அளவுக்கு குறையும் வரை பயன்படுத்துவது அதன் ஆயுள் பாதிக்கும். பேட்டரி பவர் 20 முதல் 30 சதவிகிதம் ஆனவுடன் மீண்டும் சார்ஜ் செய்யத் தொடங்கவும்.
  • ஒவ்வொரு சில மாதங்களுக்கு ஒருமுறை பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்து, பின்னர் முழுமையாக காலி செய்யும் வரை பயன்படுத்துங்கள். இது பேட்டரி சென்சார் சரியாக வேலை செய்யவும், அதன் ஆயுளை நீடிக்கவும் உதவும்.
  • லேப்டாப்பின் ஆபரேட்டிங் சிஸ்டம் மற்றும் டிரைவர்ஸை தேவையான பொழுது அப்டேட் செய்யும் போது பேட்டரி ஆயுளை அதிகரிக்கலாம்.
  • லேப்டாப்பை பயன்படுத்தாத நேரங்களில் அதனை முழுமையாக Shut down செய்யவும்.. மாறாக அதனை Sleep Mode-ல் நீண்ட நேரம் வைத்திருப்பது பேட்டரியை பாதிக்கும்.