ஆன்லைன் முதலீட்டு மோசடி.. ரூ.1.29 கோடி பணத்தை இழந்த நபர்.. அதிர்ச்சி சம்பவம்!

Bengaluru Man Loses 1.29 Crore in Online Scam | பெங்களூரை சேர்ந்த நபர் ஒருவர் ஆன்லைன் மோசடியில் சிக்கி ரூ.1.29 கோடி பணத்தை இழந்துள்ளார். டேட்டிங் செயலியில் அவருக்கு ஒரு பெண் அறிமுகமான நிலையில், அவர் அந்த நபரை சிக்கலில் சிக்க வைத்துள்ளார்.

ஆன்லைன் முதலீட்டு மோசடி.. ரூ.1.29 கோடி பணத்தை இழந்த நபர்.. அதிர்ச்சி சம்பவம்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

13 Nov 2025 00:04 AM

 IST

தொழில்நுட்ப வளர்ச்சிக்கு (Technology Development) ஏற்ப மோசடி மற்றும் குற்ற சம்பவங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக முதலீட்டு மோசடி (Investment Scam) மற்றும் டிஜிட்டல் கைது மோசடிகள் (Digital Arrest Scam) ஆகியவை அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், பெங்களூருவை சேர்ந்த நபர் ஒருவர் ரூ.1.29 கோடி பணத்தை முதலீட்டு மோசடியில் இழந்துள்ளார். இந்த நிலையில், அந்த நபர் அவ்வளவு பணத்தை முதலீட்டு திட்டத்தில் இழந்தது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

முதலீட்டு மோசடியில் ரூ.1.29 கோடி பணத்தை இழந்து பெங்களூரு நபர்

ஆன்லைன் மோசடி (Online Scam) சம்பங்களின் எண்ணிக்கை இந்தியாவில் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த சில மாதங்களில் மட்டும் ஏராளமான பொதுமக்கள் தங்களது பணத்தை இத்தகைய ஆன்லைன் மோசடிகளில் இழந்துள்ளனர். அந்த வகையில், பெங்களூரை சேர்ந்த 42 வயது நபர் ஒருவர் ரூ.1.29 கோடி பணத்தை முதலீட்டு மோசடியில் இழந்துள்ளார். அந்த நபர் டேட்டிங் செயலியில் ஒரு பெண்ணை சந்தித்த நிலையில், அவர் மூலம் இந்த மோசடி வலையில் விழுந்துள்ளார்.

இதையும் படிங்க : பயனர்களை தற்கொலைக்கு தூண்டும் சாட்ஜிபிடி.. ஒரே வாரத்தில் 7 வழக்குப்பதிவு!

டேட்டிங் ஆப் மூலம் மோசடி வலையில் சிக்கிய நபர்

ஜகதீஷ் என்ற அந்த நபர் டேட்டிங் செயலி மூலம் மேகனா ரெட்டி என்ற பெண்ணை சந்தித்துள்ளார். அந்த பெண் தான் இந்த மோசடிக்கு இடையில் இருந்து அரங்கேற்றியுள்ளார். இந்த பெண் டேட்டிங் செயலி மூலம் மிகவும் உருக்கமாக பேசி அவரின் நம்பிக்கையை பெற்றுள்ளார். அவர் கூறிய அனைத்தையும் உண்மை என நம்பிய ஜகதீஷ், அவர் சொல்வதை அப்படியே செய்துள்ளார். அந்த பெண் ஜகதீஷை முதலீட்டு திட்டத்தில் முதலீடு செய்ய கூறி ஒரு இணையதளத்தை அறிமுகம் செய்து வைத்துள்ளார். அதனை உண்மை என நம்பிய அவர், அதில் முதலீடு செய்ய தொடங்கியுள்ளார்.

இதையும் படிங்க : Google Maps : கூகுள் மேப்ஸ் செயலியில் அறிமுகமாகியுள்ள புதிய அட்டகாசமான அம்சங்கள்.. என்ன என்ன?

இரண்டு நாட்களில் ரூ.1.29 கோடி பணத்தை இழந்த நபர்

அந்த நபர் நவம்பர் 05, 2025 மற்றும் நவம்பர் 06, 2025 ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் ரூ.1,29,33,253 பணத்தை அந்த மோசடி தளத்தில் மோசடி செய்துள்ளார். அவர் பணத்தை முதலீடு செய்ததும் அந்த பெண் அவருடன் பேசுவதை நிறுத்தியுள்ளார். அவர் தான் முதலீடு செய்த பணம் திரும்பி வராத நிலையில், அவரது போன் கால் மற்றும் குறுஞ்செய்திகளுக்கு யாரும் பதில் அளிக்காமல் அப்படியே விட்டுவிட்டுள்ளனர். அப்போது தான் அவர் தான் மோசடி செய்யப்பட்டது குறித்து தெரிந்துக் கொண்டுள்ளார்.

இதனால் கடும் அதிர்ச்சிக்கு உள்ளான அவர் உடனடியாக நவம்பர் 07, 2025 அன்று சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். அவரின் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.