Apple 17 Series : அதிரடியாக அறிமுகமாகும் ஆப்பிள் 17 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள்.. நேரலையில் பார்ப்பது எப்படி?
Apple iPhone 17 Series | மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் ஐபோன் 17 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் இன்று (செப்டம்பர் 09, 2025) அறிமுகமாக உள்ளது. இந்த நிகழ்ச்சியை நேரலையில் பார்ப்பது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஐபோன் 17 சீரீஸ்
உலகம் முழுவதும் எதிர்பார்த்து காத்திருந்த ஆப்பிள் ஐபோன் 17 சீரீஸ் (Apple iPhone 17 Series) ஸ்மார்ட்போன்கள் இன்று (செப்டம்பர் 09, 2025) அறிமுகமாக உள்ளன. இந்த ஸ்மார்ட்போன் குறித்த மிகுந்த எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், ஆப்பிள் நிறுவனம் Awe Dropping என்ற பெயரில் இந்த ஸ்மார்ட்போன் வெளியீட்டு விழாவை நடத்த உள்ளது. இந்த நிலையில், ஆப்பிள் அறிமுகம் செய்ய உள்ள புதிய ஐபோன்கள் என்ன என்ன, ஐபோன்கள் அறிமுகம் செய்யப்படும் நிகழ்ச்சியை நேரலையில் பார்ப்பது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இன்று அறிமுகமாகிறது ஆப்பிள் ஐபோன் 17 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆப்பிள் ஐபோன் 16 சீரீஸ் அறிமுகமான நிலையில், அது பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், அதனை தொடர்ந்து அப்பிள் ஐபோன் 17 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாக உள்ளன. இந்த சீரீசில் ஐபோன் 17 (iPhone 17), ஐபோன் 17 ஏர் (iPhone 17 Air), ஐபோன் 17 ப்ரோ (iPhone 17 Pro) மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் (iPhone 17 Pro Max)ஆகிய ஸ்மார்ட்போன்கள் இடம்பெற உள்ளன. இந்த ஸ்மார்ட்போன்கள் இதுவரை இல்லாத வகையில் வித்தியாசமான தோற்றம் மற்றும் சிறப்பு அம்சங்களை கொண்டு இருக்கும் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க : Apple iPhone 17 Series : விரைவில் அறிமுகமாகும் ஐபோன் 17 சீரீஸ்.. சிறப்பு அம்சங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது!
ஆப்பிள் ஐபோன் 17 சீரீஸ் அறிமுகம் – நேரலையில் பார்ப்பது எப்படி?
ஆப்பிள் ஐபோன் 17 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் வெளியீட்டு விழா இன்று (செப்டம்பர் 9, 2025) பசிபிக் நேரப்படி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. அதாவது இந்திய நேரப்படி, இரவு 10.30 மணி ஆகும். இந்த நிகழ்ச்சி கலிபோர்னியாவில் உள்ள ஆப்பிள் பார்க்கில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியை இந்தியர்களாலும் காண முடியும். ஆமாம், ஆப்பிள் நிறுவனம் தனது ஆப்பிள் ஐபோன் 17 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் நிகழ்வை உலகம் முழுவதும் நேரலை செய்கிறது.
இதையும் படிங்க : இவ்வளவு குறைந்த விலையில் இத்தனை சிறப்பு அம்சங்களா.. வெறும் ரூ.6,099-க்கு அறிமுகமான லாவா யுவா ஸ்மார்ட் 2!
ஆப்பிள் ஐபோன் 17 சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் அறிமுகம் நிகழ்ச்சியை ஆப்பிளின் அதிகாரப்பூர்வ இணையதளமான Appl.com என்பதில் பார்க்கலாம். இது தவிர ஆப்பிள் தொலைக்காட்சி செயலி, ஆப்பிளின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலிலும் பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.