ஏஐக்கான செலவு மனிதர்களை விட அதிகமா? சிக்கலில் ஐடி நிறுவனங்கள்
AI vs Humans: உலகம் முழுவதும் ஏஐ பயன்பாடு அதிகரித்திருக்கிறது. இதனால் பல ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன. இத்தகைய சூழலில் ஏஐ கருவிகளுக்கு மனிதர்களை விட அதிகம் செலவதாக ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மாதிரி புகைப்படம்
செயற்கை நுண்ணறிவு பயன்பாடு உலகம் முழுவதும் வேகமாக அதிகரித்து வருகிறது. பல நிறுவனங்கள் தங்கள் வேலைகளை ஏஐ மூலம் நிறைவேற்றி வருகின்றன. இதனால் பல நிறுவனங்கள் ஆட் குறைப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் இதற்கு அந்த நிறுவனங்கள் மிகப்பெரி விலை கொடுக்க வேண்டியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்பு முதலீட்டாளர்களின் பணத்தை பயன்படுத்தி ஏஐ மாடல்களை உருவாக்கிய நிறுவனங்கள், தற்போது அதற்கான செலவுகளை தங்கள் பயனர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் வசூலிக்க தொடங்கியுள்ளன. இதனால், நிறுவனங்களின் செலவுகள் அதிகரித்து வருகிறது.
ஊழியர்களை விட நிறுவனங்களின் செலவுகள் அதிகம்?
சில நிறுவனங்களில், ஏஐ பயன்படுத்தும் செலவு ஊழியர்களின் சம்பளத்தை விட அதிகமாக உள்ளது. பல நிறுவனங்கள் 2026 ஆம் ஆண்டுக்கான ஏஐ பட்ஜெட்டை சில மாதங்களிலேயே முழுமையாக பயன்படுத்திவிட்டதாக தெரிவித்துள்ளார். குறிப்பாக ஆந்த்ரோபிக் உருவாக்கிய கிளவுட் கோட் போன்ற கருவிகள் அதிகம் பயன்படுத்தப்பட்டால் இந்த நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க : பேட்டரி முழுமையாக சார்ஜ் ஆனதும் சார்ஜர் தானாகவே துண்டிக்கப்படும் – வந்தாச்சு புது சார்ஜர் !
மேலும் 4 பேர் கொண்ட ஒரு குழுவிற்கு ஏஐக்காக மட்டும் ரூ.1 கோடிக்கு அதிகமாக செலவழிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து நிவிடியா நிறுவனத்தின் அதிகாரி பிரயன் தெரிவித்ததாவது, எங்கள் குழுவிற்கு ஏஐ பயன்பாட்டு செலவு ஊழியர்களுக்கு பயன்படுத்தும் செலவை விட அதிகமாக உள்ளது என்றார். இந்த நிலையில் கார்ட்னர் வெளியிட்ட தகவலின் படி, 2026 ஆம் ஆண்டில் உலக அளவில் ஐடி செலவுகள் 6.31 டிரில்லியன் டாலர்களை விட அதிகம் உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2025 ஆம் ஆண்டை விட 13.5 சதவிகிதம் அதிகம் என கூறப்படுகிறது.
இதையும் படிக்க : தொடர்ந்து ரீல்ஸ் பார்ப்பது மது குடிப்பதை விட மோசமானது.. எச்சரிக்கும் நரம்பியல் நிபுணர்கள்!
கிளவுட் சேவைக்கான கட்டணம், சப்ஸ்கிரிப்ஷன் கட்டணங்கள் ஆகியவை ஐடி செலவுகள் உயர்வதற்கு மிக முக்கிய காரணமாகவும். இதனால் நிறுனங்கள் தங்கள் செய்யும் முதலீடுகளுக்கு ஏற்ப சரியான வருமானம் கிடைக்கிறதா என்பதை நிரூபிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஏஐக்கான செலவுகளால் பெரிய நிறுவனங்கள் மட்டும் அல்ல சாதாரண மக்களும் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக ஆந்திரோபிக் நிறுவனத்தின் கிளாட் சேவையை பயன்படுத்தும் பயனர்கள், அவர்களுக்கு வழங்கப்படும் டோக்கன் வரம்பு விரைவில் முடிவதாக புகார் தெரிவித்துள்ளனர்.