ஜீப்பில் அமர்ந்தவாறு வாளுடன் போஸ்.. கையில் காப்பு போட்டு அழைத்து சென்ற போலீசார்.. நடந்தது என்ன!

Kodaikanal Youth Arrested: திண்டுக்கல் மாவட்டத்தில் ஜீப்பில் அமர்ந்தவாறு கையில் வாளை வைத்துக் கொண்டு சினிமா பாடலுக்கு வீடியோ வெளியிட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர். மேலும், கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் இளைஞர்கள் இது போன்ற செயலில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.

ஜீப்பில் அமர்ந்தவாறு வாளுடன் போஸ்.. கையில் காப்பு போட்டு அழைத்து சென்ற போலீசார்.. நடந்தது என்ன!

கையில் வாளுடன் வீடியோ வெளியிட்ட இளைஞர் கைது

Updated On: 

19 Feb 2026 13:03 PM

 IST

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாக விளங்கி வருவதால் இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் தினந்தோறும் சுற்றிப் பார்ப்பதற்காக வந்து செல்கின்றனர். இதில், அதிக அளவு இளைஞர்கள் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சுற்றுலாவுக்காக வருகின்றனர். அப்படி வருகை தரும் இளைஞர்கள் ஆபத்தான கொண்டை ஊசி வளைவுகளில் அதிவேகமாக இரு சக்கர வாகனத்தில் செல்வதும், தடை செய்யப்பட்ட அருவிகள் மற்றும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு அத்துமீறி நுழைந்து அதன் அனுபவம் குறித்து வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதே போல, கடந்த சில நாட்களுக்கு முன்பு கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்திருந்த ஒரு இளைஞர் ஜீப்பின் மீது அமர்ந்தவாறு கையில் அரிவாளை வைத்துக் கொண்டு சினிமா பாடலுக்கு வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்திருந்தார்.

வீடியோ வைரல்- இளைஞருக்கு போலீசார் காப்பு

அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. இதற்கு பல்வேறு தரப்பினர் மத்தியில் இருந்து கடும் கண்டனம் எழுந்து வந்தது. இது தொடர்பாக கொடைக்கானல் காவல் ஆய்வாளர் வசந்தகுமார் மற்றும் உதவி ஆய்வாளர் அபினேஷ் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில், அந்த வீடியோவை பதிவு செய்தவர் திண்டுக்கல் மாவட்டம், மேல்மலை கிராமம், பூம்பாறையை சேர்ந்த செல்வகுமார் ( 25 வயது) என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் படிக்க: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக மேலும் 22 மீனவர்கள் கைது… இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்!

வாள்-ஜீப் ஆகியவை பறிமுதல்

அவரிடம் இருந்து, வீடியோவில் பதிவு செய்திருந்த வாள், ஜீப் மற்றும் இருசக்கர வாகனம் உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். திண்டுக்கல்லுக்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இது போன்று செயல்களில் ஈடுபடுவதும், அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரப்பி விடுவதும் குற்றமாகும். எனவே, இது போன்ற விபரீத செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கொடைக்கானல் போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

சட்டம் – ஒழுங்குக்கு குந்தகம்

சமீப காலமாக தமிழகத்தில் பொது இடங்களில் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை வைத்துக்கொண்டு ரிலீஸ் வெளியிடுவதும், ஆயுதங்கள் மூலம் பிறந்தநாளுக்கு கேக் வெட்டுவதும், சினிமா பாடலுக்கு ஆயுதங்களுடன் நடனம் ஆடுவதும் போன்ற வீடியோக்கள் சமூகவலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, சட்ட ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. இதற்கு பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: அரசு பேருந்தில் இலவச பயணம் செய்த பெண்கள் குறித்து விமர்சனம்… ஓட்டுநர்-நடத்துநர் மீது பாய்ந்த நடவடிக்கை!

மணமகளின் பையை திருடிச் சென்ற நபர்.. ரூ.4 லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளி கொள்ளை..
சந்தேகத்தின் பெயரில் காதலியை கொலைசெய்த காதலன்
ஏப்.30 வரை "ஜனநாயகன்" வெளியாக வாய்ப்பில்லை - ரசிகர்கள் அதிர்ச்சி!
நான் அல்லு அர்ஜூனின் தீவிர ரசிகை - வைரலாகும் மமிதா பைஜூவின் வீடியோ