குடிப்பதற்கு பணம் தர மறுத்ததால் ஆத்திரம்…77 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்..வேலூரில் அதிர்ச்சி சம்பவம்!
Vellore Youth Arrested: வேலூரில் மது போதையில் வீட்டுக்குள் அத்துமீறி நுழந்து 77 வயது மூதாட்டியை பலமாக தாக்கி பாலியல் பலாத்காரம் செய்ததாக இளைஞரை போலீசார் கைது செய்த சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேலூரில் மூதாட்டியை பலாத்காரம் செய்த இளைஞர் கைது
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே உள்ளது பெரிய பரவக்கல் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் பாண்டு. இவரது மகன் அஜித்குமார் (24 வயது). இவர், மேளக் கலைஞராக இருந்து வருகிறார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அஜித்குமார் மது போதையில் அந்தப் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அத்துமீறி நுழைந்தார். அப்போது, அந்த வீட்டில் இருந்த 77 வயது மூதாட்டியிடம் செலவுக்கு பணம் தருமாறு கேட்டுள்ளார். அதற்கு, அந்த மூதாட்டி பணம் இல்லை என்று தெரிவித்துள்ளார். இதனால், அந்த மூதாட்டியிடம் அஜித்குமார் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில், ஆத்திரமடைந்த அஜித்குமார், அந்த மூதாட்டியை பலமாக தாக்கி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில், மூதாட்டி மயங்கினார். இதனால், மூதாட்டி உயிரிழந்ததாக அச்சமடைந்த அஜித்குமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதை தொடர்ந்து, மறுநாள் பக்கத்து வீட்டினர் மூதாட்டியின் வீடு திறந்து கிடப்பதை பார்த்து சந்தேகம் அடைந்து உள்ளே சென்று பார்த்தனர்.
மயங்கிய நிலையில் கிடந்த மூதாட்டி
அப்போது, மூதாட்டி பலத்த காயம் அடைந்து மயங்கிய நிலையில் கிடந்தார். இது தொடர்பாக, மூதாட்டியின் மகனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில், அவரது மகன் சம்பவ இடத்துக்கு வந்து மூதாட்டியை மீட்டு அருகில் உள்ள குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு, மூதாட்டிக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துவிட்டு வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். வீட்டுக்கு வந்ததும், இரவு நேரங்களில் மூதாட்டி ஒரு வித அச்சத்துடன் இருந்துள்ளார். இதனால், சந்தேகம் அடைந்த அவரது மகன் இது தொடர்பாக கேட்டுள்ளார்.
மேலும் படிக்க: செல்போனில் வீடியோ கேம் விளையாடிய சிறுவன்…பெற்றோர் கண்டித்ததால் விபரீத முடிவு!
மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர்
அப்போதுதான், அஜித் குமார் என்ற இளைஞர் மதுபோதையில் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து குடிப்பதற்கு பணம் கேட்டதாகவும், அதற்கு நான் பணம் இல்லை என்றும் தெரிவித்ததாகவும், அப்போது, அந்த இளைஞர் என்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து, அந்த மூதாட்டியை மீண்டும் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அவரது மகன் அனுமதித்தார். அங்கு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக, குடியாத்தம் தாலுகா காவல் நிலையத்தில் அஜித் குமார் புகார் அளித்தார்.
இளைஞரை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார்
அதன்படி, குடியாத்தம் துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் உத்தரவின் பேரில், தாலுகா காவல் ஆய்வாளர் சிவசங்கரன் உள்ளிட்ட போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், அஜித் குமார் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்ட நிலையில், அவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் படிக்க: கால்பந்து விளையாடிய மாணவி பரிதாபமாக உயிரிழப்பு.. முதல்வர் இரங்கல்..