மதுரை அருகே இரு ஆம்னி பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து.. 3 பேர் பலி..
Two omni buses collided near Madurai; சென்னையில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி இன்று காலை ஒரு ஆம்னி பேருந்து மதுரை நெடுஞ்சாலை வழியே சென்று கொண்டிருந்துள்ளது. அதேபோல், தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து மற்றோரு ஆம்னி பேருந்து, மதுரையை நோக்கி வந்துகொண்டிருந்துள்ளது.
மதுரை, ஜனவரி 25: மதுரை கொட்டாம்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்துகள் மோதிய விபத்தில் 3 பயணிகள் பரிதாபமாக உயிரழந்தனர். மேலும், 15க்கும் மேற்பட்டார் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இருந்து மதுரை நோக்கி சென்ற இரண்டு ஆம்னி பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. ஓட்டுநரின் அலட்சியத்தால் இந்த விபத்து நடந்ததாக பயணிகளால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. காலையில் நடந்த இந்த விபத்துக்கு காரணம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க: லிவ் இன் பார்ட்னரை கொலை செய்து இரும்பு பெட்டியில் வைத்து எரித்த நபர்.. உ.பியில் பகீர் சம்பவம்!
டீ குடிப்பதற்காக சாலையோரம் நின்ற பேருந்து:
சென்னையில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி இன்று காலை ஒரு ஆம்னி பேருந்து மதுரை தேசிய நெடுஞ்சாலை வழியே சென்று கொண்டிருந்துள்ளது. அதே, தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து மற்றோரு ஆம்னி பேருந்தும், மதுரையை நோக்கி வந்து கொண்டிருந்துள்ளது. இதனிடையே, மதுரை பள்ளம்பட்டி அருகே நான்கு வழிச்சாலையில் மார்த்தாண்டம் நோக்கி சென்ற பேருந்தின் ஓட்டுநர் தேநீர் அருந்துவதற்காக சாலையில் ஓரம் பேருந்தை நிறுத்தி சென்றதாக தெரிகிறது.




ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து:
இந்நிலையில், முன்னாள் உள்ள பேருந்து நின்று கொண்டிருப்பது தெரியாமல், மதுரை நோக்கி அதி வேகமாக வந்த மற்றொரு சொகுசு பேருந்து அதன் பின் பக்கத்தில் பலத்த வேகத்துடன் மோதியது. இதில், நிகழ்விடத்திலேயே செங்கல்பட்டை சேர்ந்த சுதர்சன் (23), கோவில்பட்டியை சேர்ந்த கனகரத்தினம் (65), திவ்யா (43) ஆகியோர் உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் இரு பேருந்துகளில் இருந்த 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களை மீட்ட உள்ளூர் மக்கள்:
இதைத்தொடர்ந்து, காயமடைந்தவர்களை அப்பகுதி மக்கள் விரைந்து வந்த மீட்டதோடு, விபத்து குறித்து காவல்துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், காயமடைந்தவர்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் உடல்கள் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதனிடையே, பேருந்தில் இருந்த பயணிகள் கூறும்போது, அதிவேகமாக ஓட்டுநர் பேருந்தை இயக்கியதே விபத்துக்கு காரணம் என்றும், நெடுஞ்சாலையில் அஜாக்கிரதையாக பேருந்தை சாலையோரம் நிறுத்தியதும் தவறு என்றும் ஆதங்கம் தெரிவித்தனர்.
இதையும் படிக்க: கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவன்.. பிரியாணியில் தூக்க மாத்திரை கொடுத்து கொலை.. திடுக் சம்பவம்!!
நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு:
தொடர்ந்து, காயமடைந்த பயணிகள் தற்போது மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, விபத்தில் சிக்கிய பேருந்துகளால் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, போலீசார் விரைந்து இரு பேருந்துகளையும் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.