அமேசானில் ஃபிளாஸ்க் ஆர்டர் செய்தவருக்கு கல் வந்ததால் அதிர்ச்சி – விருதுநகர் அருகே பரபரப்பு சம்பவம்
Amazon Delivery Shock: அமேசானின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் தொடங்கியுள்ள நிலையில் மக்கள் ஆர்வமாக தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி வருகின்றனர். இந்த நிலையில் விருதுநகர் காரியாபட்டியை சேர்ந்த ஒரு பெண் அமேசானில் ஃபிளாஸ்க் ஆர்டர் செய்த நிலையில் அவருக்கு கல் டெலிவரி செய்யப்பட்டிருக்கிறது.

அமேசான் ஆர்டரில் வந்த கல்
அமேசான் (Amazon) மற்றும் ஃபிலிப்கார்ட் ஆகிய இ-காமர்ஸ் தளங்களில் பண்டிகை கால விற்பனை தொடங்கியுள்ளது. தற்போது நவராத்திரி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் தீபாவளி பண்டிகை இன்னும் சில நாட்களில் வரவிருக்கிறது. அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு தள்ளுபடிகளை அறிவித்து வருகின்றன. வீட்டு உபயோக பொருட்கள் முதல் எலக்ட்ரானிக் பொரு்கள் வரை விலை மலிவாக கிடைக்கும் என்பதால் மக்கள் இந்த நாட்களில் பொருட்கள் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் விருதுநகர் காரியாபட்டியில் பிளாஸ்க் ஆர்டர் செய்தவருக்கு பார்சலை பிரித்து பார்த்தபோது கல் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்திருக்கிறார்.
பிளாஸ்க் ஆர்டர் செய்தவருக்கு டெலிவரி செய்யப்பட்ட கல்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே காரியாபட்டியில் அமேசான் ஆப்பில் பெண் ஒருவர் ஃபிளாஸ்க் ஆர்டர் செய்திருக்கிறார். ஆனால் அவருக்கு ஃபிளாஸ்க்கிற்கு பதிலாக கல் டெலிவரி செய்யப்பட்டிருக்கிறது. இதனால் அந்தப் பெண் மிகவும் அதிர்சசியடைந்திருக்கிறார்.
இதையும் படிக்க : சூர்யாவின் தனி பாதுகாவலரிடம் ரூ.42 லட்சம் மோசடி – வீட்டு பணியாளர் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியைச் சேர்ந்தவர் ரமா. இவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அமேசான் ஆப் மூலம் சுமார் 400 ரூபாய் மதிப்புள்ள தண்ணீரை சுட வைக்கக்கும் வசதி கொண்ட ஃபிளாஸ்க் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். இந்த நிலையில் செப்டம்பர் 23, 2025 அன்று அமேசான் நிறுவனத்தின் டெலிவரி ஊழியர் மூலம் அவரது வீட்டிற்கு பார்சல் வந்துள்ளது. அதனை வாங்கிய ரமா பிரித்துப் பார்த்தபோது அதில் ப்ளாஸ்க்கிற்கு பதிலாக ஒரு சிறிய கல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து பார்சல் கொண்டு டெலிவரி ஊழியரிடம் கேட்டதற்கு நீங்கள் அமேசான் செயலியில் சென்று புகாரளியுங்கள் என்று கூறி சென்று விட்டார். ஆன்லைன் விளம்பரத்தை பார்த்து பிளாஸ்க் ஆர்டர் செய்ததில் பார்சலில் கல் இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து அவர் தற்போது அமேசான் செயிலி மூலம் புகார் அளித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிக்க : சென்னை மெட்ரோ ரயிலில் பரபரப்பு… மலேசிய நாட்டு பெண்ணின் பேக்கை திருடிய HR – அதிர்ச்சி சம்பவம்
அமேசான் பார்சலில் வந்த பாம்பு
பெங்களூருவை சேர்ந்த பிரகாஷ் என்பவர் அமேசானில் எக்ஸ்பாக்ஸ் கண்ட்ரோலர் ஆர்டர் செய்தார். இந்த நிலையில் அவருக்கு பார்சல் வந்தது. அதை அவர் பிரித்து பார்த்த போது அதில் உயிருடன் பாம்பு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார். ஆனால் நல்ல வேளையாக பாக்ஸ் ஒட்டப்பட்ட பயன்படுத்திய டேப்பில் பாம்பு சிக்கிக்கொண்டதால் அவருக்கு பாதிப்பு ஏற்படவில்லை. இந்த வீடிோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.