“ரூ.1,020 கோடி ஊழல் குறித்து வழக்குப்பதிவு செய்யாதது ஏன்?”.. லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அதிமுக சரமாரி கேள்வி!!

AIADMK questions Anti-Corruption Dept: இந்த கடிதத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என அதிமுக எம்.பி. இன்பதுரை மற்றும் ஆதிநாராயணன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தனர். இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது

ரூ.1,020 கோடி ஊழல் குறித்து வழக்குப்பதிவு செய்யாதது ஏன்?.. லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அதிமுக சரமாரி கேள்வி!!

கோப்புப் புகைப்படம்

Updated On: 

25 Feb 2026 12:54 PM

 IST

சென்னை, பிப்ரவரி 25: ரூ.1,020 கோடி நகராட்சி நிர்வாகத்துறை ஊழல் வழக்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அதிமுக தரப்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில், உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் நகராட்சி நிர்வாகத்துறை ஊழல் குறித்து வழக்குப்பதிவு செய்யாதது ஏன்? என்று அவர் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. தமிழக நகராட்சி நிர்வாக துறையில் பணி நியமனங்களுக்கு லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பாகவும், டெண்டர் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் தொடர்பாகவும் வழக்குப்பதிவு செய்ய கூறி, அமலாக்க துறை சார்பில் தமிழக டிஜிபி வெங்கடராமனுக்கு கடந்த 2025 அக்டோபர் மாதம் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. குறிப்பாக அதில், உதவி பொறியாளர், இளநிலை பொறியாளர், நகரமைப்பு அலுவலர் என 2,538 பேரை பணி நியமனம் செய்தில், ரூ.1,020 கோடிக்கு ஊழல் நடந்து உள்ளதாக, 258 பக்க ஆதாரங்களுடன் அமலாக்கத் துறை குற்றம்சாட்டியிருந்தது.

இதையும் படிக்க: ஆட்சிக்கு வந்தால்.. “ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000”.. அதிமுகவின் அதிரடி வாக்குறுதிகள் இதோ!!

உயர்நீதிமன்றத்தில் அதிமுக வழக்கு:

இந்த கடிதத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என அதிமுக எம்.பி. இன்பதுரை மற்றும் ஆதிநாராயணன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தனர். இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத்துறை வழங்கியுள்ள ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் ஒரு குற்றவியல் வழக்கைப் பதிவு செய்ய போதுமானதாக இருப்பதாகக் குறிப்பிட்டனர்

உடனடியாக எஃப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும்:

அதோடு, அமலாக்கத்துறை ஆதாரங்களை வழங்கி பல மாதங்கள் ஆகியும், இன்னும் ‘விரிவான விசாரணை’ என்ற பெயரில் காலதாமதம் செய்வது ஏன் என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. வெறும் முதற்கட்ட விசாரணை என்பது மட்டும் போதாது என்றும், ஆதாரங்களின் அடிப்படையில் உடனடியாக முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

180 நாட்கள் விசாரணை நடத்த அவகாசம்:

தமிழக அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆகியோர்: லஞ்ச ஒழிப்புத்துறை விதிகளின்படி 180 நாட்கள் விசாரணை நடத்த அவகாசம் உள்ளதாகத் தெரிவித்தனர். அதோடு, ஏற்கனவே ஊழல் தடுப்புச் சட்டத்தின் 17ஏ பிரிவின்கீழ் அனுமதி பெறப்பட்டு, டிசம்பர் 15 முதல் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதாக வாதிட்டனர்.

விசாரணைக்கு முன் வழக்குப் பதிவு அவசியம்:

அதேசமயம், அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ரமேஷ், தாங்கள் வழங்கியது வெறும் தகவல் அல்ல, அவை மிக முக்கியமான “ஆதாரங்கள்” என்று வாதிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், விசாரணையைத் தொடங்குவதற்கு முன்பே வழக்குப்பதிவு செய்வது அவசியமானது என்று தீர்ப்பளித்தது. இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு ஒரு வாரகாலம் ஆகியும், தற்போது வரை வழக்கு பதிவு செய்யப்படவில்லை.

மேலும் படிக்க: “உங்கள் வீட்டு பில்லே சாட்சி”.. கையடக்க பிரிண்டருடன் வளம் வரும் அதிமுகவினர்.. திமுகவுக்கு எதிராக புதிய பிரசாரம்..

லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அதிமுக கடிதம்:

இந்நிலையில், இந்த ஊழல் வழக்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அதிமுக எம்.பி இன்பதுரை கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் ரூ.1020 கோடி நகராட்சி நிர்வாகத்துறை ஊழல் குறித்து வழக்குப்பதிவு செய்யாதது ஏன்? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் வழக்குப்பதிவு செய்யாதது குற்றவாளிகளுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை செயல் என்றும் குறிப்பட்டுள்ளார். மேலும், லஞ்ச ஒழிப்புத்துறை தன் கடமையை செய்யாததால் அதிமுக சிபிஐ-யை நாட வேண்டி இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தீவிரவாதிகளை வீழ்த்த உதவிய ராணுவ நாய் டைசன்
‘எல் மேன்சோ’ கொலைக்கு பின் மெக்சிகோவில் வெடித்த வன்முறை..
சூனியக்காரி எனக்கூறி பெண்ணை உயிரோடு எரித்துக்கொன்ற கிராமத்தினர் - அதிர்ச்சி சம்பவம்
இரவில் குழந்தைகள் எழுந்து உட்கார்ந்து சத்தமாக கத்துகிறதா? இதுதான் காரணம்