“ஜனநாயகன் பற்றி விஜய் வாய் திறக்காதது ஏன்?” கஸ்தூரி சரமாரி கேள்வி!!
Kasthuri questions Vijay: பாஜக நிர்வாகியான நடிகை கஸ்தூரி காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது, அவர் பேசுகையில், தவெக தலைவரான நடிகர் விஜய் மாநாட்டில் மட்டுமே பேசுகிறாரே தவிர மற்ற நேரத்தில் பேசுவதில்லை என்று விமர்சித்தார். மேலும், விஜய் குறித்த கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்தார்.
காஞ்சிபுரம், ஜனவரி 26: விஜய் மாநாட்டில் மட்டுமே பேசுகிறாரே தவிர மற்ற நேரத்தில் பேசுவதில்லை என கஸ்தூரி விமர்சித்துள்ளார். முன்னதாக சென்னை மாமல்லபுரத்தில் நடந்த தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், பாஜகவிடம் அதிமுக நேரடியாகவே சரணடைந்துவிட்டதாகவும், திமுகவை தீய சக்தி என்றும், அதிமுகவை ஊழல் சக்தி எனவும் கடுமையாக சாடியிருந்தார். அதோடு, இதற்கு முன்பு ஆட்சி செய்தவர்களும் பா.ஜனதாவுக்கு அடிமையாகத்தான் இருந்திருக்கிறார்கள். அவர்களை நம்பியும் பிரயோஜனம் இல்லை. அடிமையாக இருக்க நான் அரசியலுக்கு வரவில்லை என்றும் கூறியிருந்தர்.
மேலும் படிக்க: மதுரை-திருநெல்வேலி வழியாக ஜன.28- இல் அம்ரித் பாரத் ரயில் சேவை…தெற்கு ரயில்வே அறிவிப்பு!
மாநாட்டில் மட்டும் பேசும் விஜய்:
இந்நிலையில், பாஜக நிர்வாகியான நடிகை கஸ்தூரி காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது, அவர் பேசுகையில், தவெக தலைவரான நடிகர் விஜய் மாநாட்டில் மட்டுமே பேசுகிறாரே தவிர மற்ற நேரத்தில் பேசுவதில்லை. கடந்த வருடம் முழுவதும் தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடந்தது ஆனால் எந்த போராட்டத்திலும் விஜய் கலந்து கொள்ளவில்லை.
ஜனநாயகன் பற்றி விஜய் பேசவில்லை:
ஜனநாயகன் திரைப்பட விவகாரத்தில் பல்வேறு கட்சித் தலைவர்கள் மற்றும் மக்கள் பேசினார்களே தவிர இதுவரை நடிகர் விஜய் அது குறித்து ஏன் பேசவில்லை. கஸ்தூரி தாக்கு ஊழல் நடந்தால் தட்டி கேட்பேன் எனக் கூறும் விஜய், ஜனநாயகம் திரைப்படத்தின் விவகாரத்தை பேசாதது ஏன்? என மக்கள் என்னை கேட்க சொன்னதாக கேட்கிறேன் என்று அவர் கேள்வி கூறினார்.
திமுக டப்பா டான்ஸ் ஆட போகிறது:
தேசிய ஜனநாயக கூட்டணி ஓடாத டப்பா என்ஜின் என ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் விரைவில் திமுக டப்பா டான்ஸ் ஆட போகிறது. இந்தி படிப்பு இந்தியை படிக்கக் கூடாது என கூறுபவர்கள் அவர்கள் பள்ளியில் மட்டும் இந்தியை தேர்வாக எழுதுகின்றனர், அவர்கள் பள்ளியில் தவறை யாரும் மாணவர்கள் இலவசமாக இந்தி படிக்கக் கூடாது என திமுக எண்ணுகிறது.
மேலும் படிக்க: சென்னையில் இடைவிடாது கொட்டும் மழை.. இன்று எங்கெல்லாம் மழை இருக்கும்? வானிலை ரிப்போர்ட்..
திமுக இந்தியை காசு கொடுத்து படிக்க வேண்டுமே தவிர இலவசமாக படிக்கக் கூடாது என எண்ணுகிறது. அடுத்த முறை தேர்தலில் செங்கல்லை கொண்டு வந்தது போல் இந்த முறை கோழி முட்டையும், மணலையும் எடுத்துக் கொண்டு வந்தாலும் வருவார்கள் இதனால் அது அவர்களுக்கு தேர்தல் முடிவை காட்டும்” இவ்வாறு அவர் கூறினார்.