திருச்சியில் பிரதமர் மோடி தொடங்கி வைத்த ரூ.5,650 கோடி திட்டங்கள் என்னென்ன!

PM Modi Inaugurated New Projects: திருச்சியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ரூ.5,650 மதிப்பிலான பல்வேறு திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்திருந்தார். அவர் தொடங்கி வைத்த திட்டங்கள் என்னென்ன என்பது குறித்த முழு விவரங்களை இந்தப்பதிவில் விரிவாக பார்க்கலாம்.

திருச்சியில் பிரதமர் மோடி தொடங்கி வைத்த ரூ.5,650 கோடி திட்டங்கள் என்னென்ன!

பிரதம் மோடி தொடங்கி வைத்த திட்டங்கள் என்னென்ன

Published: 

12 Mar 2026 06:30 AM

 IST

திருச்சி மாவட்டம், பஞ்சப்பூர் பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நேற்று புதன்கிழமை ( மார்ச் 11 ) பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு வருகை தந்து, அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலமாக நிகழ்ச்சி நடைபெறும் பஞ்சப்பூர் பகுதிக்கு வந்தடைந்தார். தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி நிகழ்வில் பங்கேற்று பேசியிருந்தார். முன்னதாக அவர் ரூ.5,650 கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்ததுடன், பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பிரதமர் மோடி தொடங்கி வைத்த திட்டங்கள் என்னென்ன என்பது குறித்த தகவல் பின்வருமாறு:

மேலும் படிக்க: தமிழர்களின் பாரம்பரிய உடையான பட்டு வேட்டி சட்டையில் திருச்சி வந்து இறங்கிய பிரதமர் மோடி..

  • ரூ.3,680 கோடி மதிப்பில் ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நகர எரிவாயு விநியோக அமைப்பு தொடங்கும் பணி.
  • சென்னை மாவட்டத்தில் உள்ள மணலி பகுதியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் 672 ஆயிரம் மெட்ரிக் டன் திறன் கொண்ட மசகு எண்ணெய் கலவை ஆலை திறப்பு. இந்த ஆலையானது ரூ.1,490 கோடியில் அமைக்கப்பட்டுள்ளதுடன், இந்தியாவின் மசு எண்ணெய் உற்பத்தி திறனை மேலும் வலுப்படுத்தும்.
  • பிரதம மந்திரியின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் கிராமப் புறங்களில் 370 கிலோ மீட்டர் தொலைவுள்ள 89 சாலைகள் திறப்பு.
  • கங்கைகொண்ட சோழபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலை எண் 81- இல் பசுமை புறவழிச் சாலை அமைக்கும் பணி தொடக்கம்.
  • நாகர்கோவில்- சார்லப்பள்ளி, போத்தனூர்- தன் பாத் அம்ரித் பாரத் விரைவு ரயில்கள், திருநெல்வேலி- மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில்கள், ராமேஸ்வரம்- மங்களூரு சென்ட்ரல், மயிலாடுதுறை- திருவாரூர்- காரைக்குடி பயணிகள் ரயில் சேவை தொடங்கி வைப்பு.
  • நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் 30 லட்சம் மக்களுக்கு பி. என். ஜி. மற்றும் சி. என். ஜி. மூலம் பாதுகாப்பான சமையல் எரிவாயு மற்றும் போக்குவரத்து வசதி கிடைக்கும்.
  • 22 லட்சத்துக்கும் அதிகமான மனித நாட்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கி உள்ளூர் பொருளாதாரம் வலுப்படும்.
  • மணலியில் உலகின் 2- ஆவது மிகப்பெரிய ஒருங்கிணைந்த லூப்ரிகண்ட் வளாகம் மூலம் லூப்ரிகன்ட் உற்பத்தி வலுப்படுத்தப்படும்.
  • 26,251 கிலோ மீட்டர் சாலைகள் மற்றும் 189 பாலங்கள் மூலம் கிராமங்களின் இணைப்பை மேம்படுத்தும் வசதி.
  • பெண்கள் பாதுகாப்புடன் நடமாடவும், குழந்தைகள் எளிமையாக பள்ளிக்கு சென்று வரவும், விவசாயிகளுக்கு பயணச் செலவை குறைக்கும் வகையிலும் கொண்டு வரப்பட்ட புதிய திட்டம்.
  • தமிழகம், ஒடிசா, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் உள்ள பொதுமக்கள் 5 புதிய ரயில் சேவைகள் மூலம் எளிதாக தங்களது பயணங்களை மேற்கொள்ள முடியும்.

மேலும் படிக்க: தமிழகம் ஒரு குடும்பத்தின் ஏடிஎம்மாக மாறிவிட்டது – திருச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

Follow Us
Related Stories
தமிழக அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் இன்று தவெக ஆர்ப்பாட்டம்.. விஜய் பங்கேற்கிறாரா?
இலங்கை கடற்படையினர் தொடர் அத்துமீறல்… ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேர் கைது… படகு-மீன்பிடி உபகரணங்கள் பறிமுதல்!
தட்டுப்பாடு அச்சம்.. பெட்ரோல் பங்குகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்.. கேன்கள், பக்கெட்டுகளில் நிரப்பிச் செல்வதால் பரபரப்பு..
டீ-காபி பிரியர்களுக்கு பேரதிர்ச்சி… நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு விலை உயர்வு!
இண்டி கூட்டணிக்கு யார் தலைமை.. திமுக-காங்கிரஸ் இடையே நீடிக்கும் உரசல்.. தொகுதி பங்கீட்டில் தாமதம்!
தமிழகத்தில் 4 நாட்களுக்கு கோடை மழை கொட்டும்.. வெப்பமும் உயரும்.. வானிலை நிலவரம் இதோ..
ஈரான் - இஸ்ரேல் போர் பரபரப்பு: 4 வாரங்களுக்கு டிவி செய்தி சேனல்களின் TRP வெளியீடு நிறுத்தம்
ஷோலே படக் காட்சி போல சம்பவம்… காதலனை விடுவிக்க மொபைல் டவரில் ஏறிய இளம்பெண்!
போர் விமான விபத்து.. இந்திய விமானப்படை விமானி வீரமரணம்..
நவீனகால திருமணங்கள்.. பழமை மாறாத சிந்தனை..