தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்துவாங்கும்.. வானிலை மையம் அலர்ட்!!

Heavy rain alert in tn: இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இன்று வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அதற்கடுத்த 48 மணி நேரத்தில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்துவாங்கும்.. வானிலை மையம் அலர்ட்!!

கோப்புப் புகைப்படம்

Updated On: 

08 Jan 2026 06:28 AM

 IST

சென்னை, ஜனவரி 08: தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று (ஜன.8) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கடும் பனிபொழிவு நிலவி வந்த நிலையில் கனமழை குறித்த முக்கிய தகவலை வானிலை மையம் தெரிவித்துள்ளது.தென்கிழக்கு வங்கக்கடல் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று அதே பகுதிகளில், மட்டகிளப்பிற்கு (இலங்கை) கிழக்கு தென்கிழக்கே சுமார் 790 கிலோ மீட்டர் தொலைவிலும், திரிகோணமலைக்கு (இலங்கை) கிழக்கு – தென்கிழக்கே 880 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்காலுக்கு தென்கிழக்கே 1150 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தெற்கு-தென்கிழக்கே 1270 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைக்கொண்டுள்ளது.

இதையும் படிக்க : ஜன.28- இல் தமிழகம் வரும் பிரதமர் மோடி?…தாமரை மகளிர் மாநாட்டில் பங்கேற்கிறார்!

வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு பகுதி:

இது இன்று வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அதற்கடுத்த 48 மணி நேரத்தில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். உள் தமிழகத்தில் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

இன்று கனமழை எச்சரிக்கை:

அதன்படி, இன்று (ஜனவரி 8) கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இராமநாதபுரம், புதுக்கோட்டை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

நாளை மிக கனமழை எச்சரிக்கை:

கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவாரூர், நாகபட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், ராமநாதபுரம், புதுக்கோட்டை தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.

ஜனவரி 10ஆம் தேதி மழை நிலவரம்:

மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழையும், புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக முன்னறிவித்துள்ளது.

ஜனவரி 11 ஆம் தேதி மழை நிலவரம்:

வடகடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை வேலூர். திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.

சென்னை வானிலை நிலவரம்:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க : எஸ்.ஐ.ஆர். பணியில் திமுக இரட்டை வேடம்…எதிர்க் கட்சிகள் பரபரப்பு குற்றச்சாட்டு!

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல் ஜனவரி 10-ம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிமீ வேகத்திலும், இடையிடையே 65 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ரயிலை தவறவிட்டவர்கள் அதே டிக்கெட்டை வைத்து வேறு ரயிலில் பயணிக்க முடியுமா?
ரோகித்துக்கு வட பாவ் வழங்க முயன்ற ரசிகர் - வைரலாகும் வீடியோ
விராட் கோலியை போலவே இருக்கும் சிறுமி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..
இந்திய கிரிக்கெட்டில் எழுந்த டோப்பிங் சர்ச்சை.. சிக்கிய ராஜன் குமார்..