Heavy rain: இந்த 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்!!
very heavy rain today: நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 4 தென்மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெறுவதை பொறுத்து தமிழகத்தில் மழை அளவு அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கோப்புப்படம்
சென்னை, நவம்பர் 23: தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமெடுத்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இதனிடையே, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று அதே பகுதியில் நீடிக்கிறது. தொடர்ந்து, இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நாளைய தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதற்கு அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக் கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : டிசம்பர் மாத இறுதிக்குள் சென்னையில் குடிநீர் மீட்டர் பொருத்தம்.. இதன் பயன்பாடும் முக்கிய அம்சங்களும் என்ன?
தென் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு:
இதனிடையே, தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யு வாய்ப்புள்ளதாக ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரியில் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, விருதுநகர், ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், கடலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் இன்றைய தினம் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
நாளை 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு:
தொடர்ந்து, நாளையும் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், சென்னைக்கு எந்தவிதமான கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. அதேசமயம், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட வடகடலோரங்களை ஒட்டியுள்ள மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : நவம்பர் 22 முதல் 25 வரை இந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
வங்கக்கடலில் உருவாகும் புயல்:
தென்கிழக்கு வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாக உள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரித்திருக்கும் நிலையில், தமிழகத்தில் 2 நாட்களுக்கு மிக கனமழைக்கான எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. அதேபோல், இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் பட்சத்தில், சென்னைக்கு மழை பெய்யும் அளவில் மாற்றம் ஏற்படலாம்.
அதேசமயம், புயல் உருவாகும் சமயத்தில் தமிழகத்தில் மேலும் சில மாவட்டங்களில் மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்படலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.