Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்…மதுரை அமர்வு இன்று தீர்ப்பு!

Thiruparankundram Deepathoon Issue: திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான மேல் முறையீட்டு மனு வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. இதில், தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என்று பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்…மதுரை அமர்வு இன்று தீர்ப்பு!
தீருப்பரங்குன்றம் தீபத்தூண் மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 06 Jan 2026 11:23 AM IST

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக மதுரையைச் சேர்ந்த ராம. ரவிக்குமார் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன் தீபத்தூணில் தீபம் ஏற்ற கோரி கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தார். ஆனால், அந்த நாளில் தீபம் ஏற்றப்படவில்லை. இது தொடர்பாக, ராம. ரவிக்குமார் நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன் தீபம் ஏற்ற கோரி மீண்டும் உத்தரவு தெரிவித்தார். அதன்படி, தீபம் ஏற்ற சென்றவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். இந்த விவகாரத்தில் தனி நீதிபதி அளித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி அரசு தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

மேல்முறையீட்டு வழக்கில் இன்று விசாரணை

இது தொடர்பான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இந்த விசாரணை ஜனவரி 6-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அதன்படி, இந்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று செவ்வாய்க்கிழமை ( ஜனவரி 6) தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. முன்னதாக, இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே. கே. ராமகிருஷ்ணன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜி. ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை விசாரணைக்கு ஏற்றனர்.

மேலும் படிக்க: கன்னியாகுமரி கடல் பகுதியில் திடீர் பரபரப்பு..அலறியடுத்து ஓடிய சுற்றுலா பயணிகள்…என்ன காரணம்!

தங்கள் தரப்பு வாதங்களை முன் வைத்த தர்கா நிர்வாகம்

இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின் போது, அரசு தரப்பு, சிக்கந்தர் தர்கா, கோயில் செயல் அலுவலர், ஜமாத் மனுதாரர், ராம.ரவிக்குமார், வக்பு வாரியம் ஆகியோர், இல்லையீட்டு மனுதாரர் ஆகியோர் ஆஜராகி தங்களின் கருத்துக்களை முன் வைத்தனர். இந்த நிலையில் திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தர்காவில் கந்தூரி விழா அண்மையில் கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இன்று செவ்வாய்க்கிழமை சந்தனக்கூடு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவையொட்டி, மலையில் ஆடு, மாடுகள் பலியிடப்பட உள்ளன.

தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்யக் கோரி மனு

அவற்றுக்கு தடை விதிக்க கோரி மதுரையை சேர்ந்த மாணிக்கம் மூர்த்தி என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி, மலையில் விலங்குகளை பலி விடுவது, அசைவ உணவுகளை எடுத்துச் செல்வது போடாது என்று கடந்த ஜனவரி 2-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், நேற்று திங்கள் கிழமை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே. கே. ராமகிருஷ்ணன் அமர்வு முன் திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா தரப்பு வழக்கறிஞர்கள் ஆஜராகி கந்தூரி விழா தொடர்பாக தனி நீதிபதியின் உத்தரவை தடை செய்ய வேண்டும் என்று கூறினர். ஆனால், இன்று மேல்முறையீட்டு மனு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளதால், இதை விசாரணை செய்ய முடியாது என்று தெரிவித்தனர்.

மேலும் படிக்க:ஏஐ ஒருபோதும் மனிதனுக்கு மாற்று இல்லை… லேப்டாப் வழங்கும் திட்டத்தை துவங்கி வைத்து பேச்சு