சட்டமன்ற தேர்தலில் திமுகவிடம் வி.சி.க.வும் அதிக தொகுதிகளை கோரும் – திருமாவளவன்

Thirumavalavan on 2026 TN Assembly Elections: அரியலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையின் அடிப்படையில் முடிவு செய்யப்படும் எனத் தெரிவித்தார். பாஜக-அதிமுக கூட்டணி இன்னும் முழுமையாக உருவாகவில்லை என விமர்சித்தார்.

சட்டமன்ற தேர்தலில் திமுகவிடம் வி.சி.க.வும் அதிக தொகுதிகளை கோரும் - திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்

Updated On: 

13 Jun 2025 09:38 AM

அரியலூர் ஜூன் 11: அரியலூரில் (Ariyalur) செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் (Thirumavalavan), 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் (2025 Assembly Election) திராவிட முன்னேற்ற கழக (Dravida Munnetra Kazhagam) கூட்டணியில் அதிக தொகுதிகள் கேட்பது வழக்கமானது என்றும், பேச்சுவார்த்தையின் சூழ்நிலைப்படி முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். கூட்டணி கட்சிகள் அனைத்தையும் இணைத்து செல்ல வேண்டிய பொறுப்பு கூட்டணி தலைவர்களுக்குள்ளது என்றும் கூறினார். மதுக்கடைகள் குறித்த திமுக நிலைப்பாட்டில் தெளிவான தீர்மானம் தேவை என்றார். பாரதிய ஜனதா கட்சி – அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் கூட்டணி இன்னும் முழுமையாக உருவாகவில்லை என்றும், அவர்களின் ஆட்சி கனவு வெறும் பில்ட்அப்பாகவே இருப்பதாக விமர்சித்தார். தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்ற கழகம், பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் பாஜகவுடன் இணைவதில் ஆர்வம் காட்டவில்லை என்றார். திமுக வாக்குறுதிகள் 100% நிறைவேற வேண்டும் எனவும், உடனடியாக செயல்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

‘அ.தி.மு.க – பா.ஜ.க. கூட்டணியின் ஆட்சி கனவு பில்ட்அப் மாதிரியே’

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், அரியலூரில் 2025 ஜூன் 10 அன்று செய்தியாளர்களை சந்தித்தார். அந்த நேரத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் கூறிய “மேலும் அதிக தொகுதிகளை கேட்போம்” என்ற கருத்து குறித்து அவரிடம் கேள்வி எழுந்தது. அதற்கு பதிலளித்த திருமாவளவன், ஒவ்வொரு கட்சியும் தேர்தலில் அதிக தொகுதிகளை கோருவது வழக்கமானது என்றும், அது திமுக கூட்டணியானாலோ அதிமுக கூட்டணியானாலோ மாறாது என்றும் கூறினார்.

தொகுதி பங்கீட்டில் வாதங்கள் தேவைப்படும்: திருமா

தேர்தல் நேரத்தில் பேச்சுவார்த்தைகளில் நிலவும் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு இறுதி முடிவுகள் எடுக்கப்படும். கூட்டணிக் கட்சிகள் எல்லோரையும் இணைத்துக்கொண்டு செல்லும் பொறுப்பு கூட்டணி தலைவர்களுக்கு உண்டு. அதே சமயம், மதுக்கடைகள் குறித்த திமுகவின் நிலைப்பாட்டில் தெளிவான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

செய்தியாளர் சந்திப்பில் திருமா

பா.ஜ.க. – அதிமுக கூட்டணியில் குழப்பம்

பாஜக – அதிமுக கூட்டணி குறித்து கருத்து தெரிவித்த அவர், “திமுக கூட்டணி கட்டுப்பாடுடன் உள்ளது; அதிமுக கூட்டணி இன்னும் முழுமையாக உருவாகவே இல்லை. அமித்ஷா வருகை செய்தாலும், தேமுதிக மற்றும் பாமக போன்ற கட்சிகள் கூட அவரை சந்திக்க விரும்பவில்லை. எனவே, இந்த கட்டத்தில் அ.தி.மு.க – பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைக்கும் என கூறுவது வெறும் பில்ட்அப்பாகத்தான் தெரிகிறது” என்றார்.

வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், அரியலூரில் 2025 ஜூன் 10 அன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தொடர்ந்து பேசிய அவர், அதிமுகவின் தேர்தல் அறிக்கையிலுள்ள வாக்குறுதிகளை 100% நிறைவேற்ற வேண்டும் எனவும், நிறைவேறாதவைகளை உடனடியாக செயல்படுத்த வேண்டிய தேவை இருப்பதாகவும் திருமாவளவன் வலியுறுத்தினார்.

Related Stories
பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு: ராமேஸ்வரம் செல்லும் ரயில்கள் ரத்து!
‘சாமானியனுக்கு ஒரு விதி, போலீசாருக்கு ஒரு விதியா? காவல்துறையை வறுத்தெடுத்த திமுக எம்எல்ஏ இனிகோ, பின்னர் நடந்தது என்ன?
Sivagangai Custodial Death: சிவகங்கை வழக்கு சிபிஐக்கு மாற்றம்.. அஜித் குமார் குடும்பத்திடம் மன்னிப்பு கேட்ட முதலமைச்சர் ஸ்டாலின்!
Sivagangai Custodial Death: ஜூலை 8ம் தேதிக்குள் அறிக்கை.. சிசிடிவி காட்சிகளை மாற்றக்கூடாது! மாநில அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவு!
Sivagangai Custodial Death: சிவகங்கை லாக்அப் டெத்..! காவல்துறையை கடுமையாக விளாசிய உயர்நீதிமன்ற மதுரை கிளை!
ஈவு இரக்கமின்றி தாக்கிய போலீஸ்.. அலறும் இளைஞர் அஜித் குமார்.. காவல் நிலையத்தில் என்ன நடந்தது?