Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

2 ஆண்டுகளாக ரூ.1,000.. உத்தர பிரதேச பெண்ணுக்கு மகளிர் உரிமைத் தொகை.. அதிர்ச்சி தகவல்

Magalir Urimai Thogai : தமிழக அரசின் முக்கிய திட்டங்களில் ஒன்றாக மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் ரூ.1000 பெறாமல், பல பெண்கள் அதற்காக காத்திருக்கும் நிலையில், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த கடந்த இரண்டு ஆண்டுகளாக ரூ.1,000 வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருவதாக பரவும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2 ஆண்டுகளாக ரூ.1,000.. உத்தர பிரதேச பெண்ணுக்கு மகளிர் உரிமைத் தொகை.. அதிர்ச்சி தகவல்
கோவையைச் சேர்ந்த பெண் மகேஷ்வரி
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 15 Sep 2025 10:21 AM IST

சென்னை, செப்டம்பர் 15 : உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு இரண்டு ஆண்டுகளாக ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காமல் பெண்கள் இருக்கும் நிலையில், உத்தர பிதேசத்தில் இருக்கு பெண்ணுக்கு ரூ.1000 வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.  தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வந்தாலும், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை முக்கிய திட்டமாக உள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மூலம் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. லட்சக்கணக்கா மக்கள் இந்த திட்டம் மூலம் மாதந்தோறும் ரூ.1000 பெற்றுக் கொண்டு, நிதியுதவியை பெற்று வருகின்றனர்.

மேலும், சிலருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படவில்லை என புகார்கள் எழுந்து வருகிறது. தகுதியிருந்தும் பலரால் இந்த திட்டத்தில் சேர முடியவில்லை. விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள், புதிதாக ரேஷன் கார்டு பெற்றவர்கள் என பலரும் இந்த திட்டத்தில் தங்களை இணைத்து கொள்ள காத்துக் கொண்டு இருக்கின்றனர்.  இதற்கான நடவடிக்கையை தமிழக அரசு எடுத்து வருகிறது. இப்படியான சூழலில், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு இரண்டு ஆண்டுகளாக மகளிர் உரிமைத் தொகையாக ரூ.1000 வழங்கப்பட்டு வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Also Read : வியாபாரியிடம் 12 கிலோ தங்கம் திருட்டு.. மிளகாய் பொடி தூவி கும்பல் அட்டூழியம்.. திருச்சியில் சம்பவம்!

உத்தர பிரதேச பெண்ணுக்கு மகளிர் உரிமைத் தொகை

அதாவது, கோவையைச் சேர்ந்த கிணத்துக்கடவைச் சேர்ந்த ஒரு பெண்ணின் உரிமைத் தொகை, கடந்த இரண்டு ஆண்டுகளாக உத்தர பிரதேசத்தில் வசிக்கும் மற்றொரு பெண்ணுக்கு ரூ.1000 அவரது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வந்துள்ளதாக தகவல் வெளிவந்து உள்ளன. இந்த விஷயம் உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலம் தெரியவந்துள்ளது. அதாவது, கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியச் சேர்ந்தவர் மகேஷ்ஸ்வரி. இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்து இருந்தார்.

ஆனால், அவருக்கு எந்த ஒரு பதிலும் வரவில்லை. இந்த நிலையில், சமீபத்தில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் முகாமில் தனக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்க கோரி விண்ணப்பித்து இருந்தார். இந்த மனுவை சரிபார்த்த அதிகாரிகள், உங்களுடன் ரூ.1000 வழங்கப்பட்டு வருவதாக கூறினர். இதனை அடுத்து, சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று விசாரித்த பெண், அங்கிருந்த அதிகாரிகள் அதிர்ச்சி தகவல் கூறினர்.

Also Read : அதிகரிக்கும் தெரு நாய் தொல்லை.. சென்னையில் ரேபிஸ் தாக்கி ஒருவர் உயிரிழப்பு..

அதாவது, உத்தர பிரதேசத்தைச் சேர்நத் சாந்திதேவி என்பவருக்கு மகளிர் உரிமைத் தொகை மாதந்தோறும் செல்வதாக கூறினர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடன் மகேஸ்வரிடம் புகார் அளித்தார். இதனை அடுத்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதுபோன்ற தவறுகள் மீண்டும் நடைபெறாமல் இருக்க வங்கிக் கணக்கு விவரங்களை சரிபார்க்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.