மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜனவரி 4-இல் தமிழகம் வருகை…அரசியல் பின்னணி என்ன!

Union Minister Amit Shah To Visit Tamil Nadu: மத்திய உள்துறை அமித் ஷா வரும் ஜனவரி 4- ஆம் தேதி தமிழகம் வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இரு நாள்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார் .

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜனவரி 4-இல் தமிழகம் வருகை...அரசியல் பின்னணி என்ன!

அமித் ஷா தமிழகம் வருகை

Published: 

31 Dec 2025 19:55 PM

 IST

தமிழகத்தில் தேர்தல் பணிகளை அனைத்து கட்சிகளும் தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. இதில், பாரதிய ஜனதா கட்சி கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் எனவும், ஆட்சியை பிடித்து விட வேண்டும் எனவும் முனைப்பு காட்டி வருகிறது. இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் ஜனவரி 4- ஆம் தேதி தமிழகம் வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, அவர் புதுக்கோட்டை மற்றும் திருச்சியில் 2 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இதில், புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறும் பாரதிய ஜனதா கட்சியின் மாநாட்டில் அமித்ஷா பங்கேற்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனவரி 9- ஆம் தேதி உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வர இருப்பதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில், அவரது பயணம் ஜனவரி 4- ஆம் தேதிக்கு முன்கூட்டியே திட்டமிடப்பட்டதாக கூறப்படுகிறது.

பொங்கல் பண்டிகைக்கு தமிழகம் வரும் பிரதமர் மோடி

ஏற்கெனவே, பொங்கல் பண்டிகை நாளில் பிரதமர் மோடி தமிழகம் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தமிழகம் வர இருப்பது தமிழக அரசியல் களத்தில் முக்கியத்துவம் பெறுகிறது. தமிழகம், கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் மக்கள் மத்தியில் பாஜகவுக்கு போதிய அங்கீகாரம் இல்லாத நிலை இருந்து வருகிறது. இந்த நிலையை மாற்றி பாஜகவை நிலை நிறுத்துவதற்கான பணிகளை டெல்லி பாஜக தலைமை மேற்கொண்டு வருகிறது.

மேலும் படிக்க: “திமுக செய்யும் தவறுகளை மக்களிடம் கொண்டு செல்லுங்கள்”.. மாவட்ட செயலாளர்களுக்கு இபிஎஸ் அறிவுரை!

டெல்லி பாஜக தலைமையின் தொடர் தமிழக பயணம்

அதன்படி, தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்துவதற்காக பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தமிழகத்துக்கும் பயணம் மேற்கொள்வதாக கூறப்படுகிறது. அண்மையில் தமிழகம் வந்து சென்ற தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஸ் கோயல், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியை சந்தித்து பேசி இருந்தார். இந்த சந்திப்பில், கூட்டணி விவகாரம், தொகுதி பங்கீடு குறித்து பேசப்பட்டதாக தகவல் வெளியானது.

அமித் ஷாவின் வருகைக்கு பின்னால் முக்கிய திருப்பங்கள்

இந்த நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வருகையின் போது, அதிமுக தலைமையிடம் தொகுதி பங்கீடு, கூட்டணி விவகாரம், அதிமுக ஒருங்கிணைப்பு உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது. அமித்ஷாவின் இந்த தமிழக வருகைக்கு பின்னால் பல்வேறு முக்கிய திருப்பங்கள் மற்றும் அறிவிப்புகள் வழியாக கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: அதிமுக விருப்ப மனு தாக்கல் நிறைவு…9,500 பேர் போட்டியிட தயார்…நேர்காணல் தேதி விரைவில் அறிவிப்பு!

நள்ளிரவில் திடீரென தீப்பிடித்து எரிந்த ரயில்.. ஒருவர் பரிதாப பலி.. 2 ஏசி பெட்டிகள் தீயில் நாசம்!
டெல்லி குண்டுவெடிப்பில் 40 கிலோ உயர்தர வெடிப்பொருட்கள் - அமித் ஷா பகீர் குற்றச்சாட்டு
சோகத்தில் முடிந்த ஹனிமூன்.. புதுமண தம்பதி தனித்தனியே தற்கொலை!
தவறாக பயன்படுத்தப்படும் ‘ஆன்டிபயாடிக்’.. வளர்ந்து வரும் சுகாதார அச்சுறுத்தல் என எச்சரிக்கும் மருத்துவர்கள்..