கூட்டணி பேச்சுவார்த்தை குழு அமைக்க தவெக திட்டம்… விஜய்யுடன் செங்கோட்டையன் ஆலோசனை!!
Sengottaiyan holds discussions with Vijay: விஜய்யின் அடுத்த மக்கள் சந்திப்பு குறித்து இன்று மாலை விஜய்யுடன் ஆலோசனை நடத்தவிருப்பதாக கூறினார். அதோடு, எந்த இடத்தில் அந்த சந்திப்பு நடைபெற உள்ளது என்பது குறித்தும் மாலை பேசிவிட்டு அறிவிக்கிறேன் என்று அவர் கூறினார்.

விஜய், செங்கோட்டையன்
கோவை, டிசம்பர் 20: தவெக சார்பில் கூட்டணி பேச்சுவார்த்தைக்கான குழு அமைக்க திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து கட்சியின் மூத்த நிர்வாகிகளான செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோருடன் விஜய் இன்று ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. கூட்டணி பேச்சுவார்த்தைக் குழுவில் யார் யாருக்கு இடமளிப்பது என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது. இதற்காக அக்கட்சியின் தலைவர் விஜய்யுடன் ஆலோசனை நடத்த செங்கோட்டையன் சென்னை வருகை தந்துள்ளார். தொடர்ந்து, இந்த ஆலோசனைக்கு பிறகு கூட்டணி பேச்சுவார்த்தை குழு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க : அதிமுக இடத்தை குறி வைக்கும் தவெக…விஜய்யின் திட்டம் பலிக்குமா?பொய்க்குமா?
கூட்டணி பேச்சுவார்த்தை குழு:
தனது சொந்த மாவட்டமான ஈரோட்டில் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டத்தை சிறப்பாக ஏற்பாடு செய்து, விஜய்க்கு மிகப்பெரிய நம்பிக்கையை செங்கோட்டையன் கொடுத்துள்ளார். இதன் காரணமாக தவெக அதிக பலம் கிடைத்துள்ளதாக விஜய் நம்புவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து, விஜய்யின் பயணத் திட்டங்கள் மற்றும் கூட்டணி பேச்சு வார்த்தை குறித்த அனைத்து பொறுப்புகளும் செங்கோட்டையனிடம் ஒப்படைக்கப்பட்ட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
சேலத்தில் அடுத்த பொதுக்கூட்டம்?
அந்தவகையில், விஜய்யின் அடுத்த பொதுக்கூட்டம் சேலத்தில் நடக்க உள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகளையும் செங்கோட்டையனே மேற்கொள்வார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தலைமையில், கூட்டணி பேச்சுவார்த்தைக்கான குழு ஒன்றை தவெக அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த குழுவில், கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் இடம் பெற்றுவார்கள் என தெரிகிறது.
விஜய்யுடன் மாலை ஆலோசனை:
இந்நிலையில், இன்று காலை கோவையில் இருந்து விமானம் மூலம் செங்கோட்டையன் சென்னைக்கு புறப்பட்டார். அப்போது, கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, விஜய்யின் அடுத்த மக்கள் சந்திப்பு குறித்து இன்று மாலை விஜய்யுடன் ஆலோசனை நடத்தவிருப்பதாக கூறினார். தொடர்ந்து, விஜய்யின் அடுத்த பொது கூட்டம் குறித்த கேள்விக்கு, இன்று மாலை விஜய் உடன் பேசிவிட்டு எந்த இடம் என்பதை முடிவு செய்வோம் என்றார்.
இதையும் படிக்க : திருப்பரங்குன்றத்தில் தீ குளித்தவரின் உயிரிழப்புக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும்…நயினார் நாகேந்திரன்!
தவெக தவழும் குழந்தையா?
ஈரோட்டில் நடந்த பொதுகூட்டத்துக்குப் பின்னர், ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் ஒரு கருத்தை சொல்கின்றனர், அதுபோல அமைச்சர் சேகர்பாபு, எங்களை தவழும் குழந்தை என்று சொல்லி இருக்கிறார். தவழும் குழந்தைதான் பெரியவர் ஆவார்கள். பெரியவர் ஆனதற்கு அப்புறம் தான் தன்னுடைய தன்னாட்சி நடத்துவார்கள் என்றார்.
பெங்கலுக்கு பின் தவெக திருப்புமுனை:
மேலும், எங்களைப் பொறுத்த வரையிலும் பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு, எங்கள் திருப்புமுனை எப்படி அமைந்து இருக்கிறது என நாடே வியக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.