தீபாவளிக்கு குற்றாலம் போறீங்களா? வெளியான முக்கிய அறிவிப்பு
Heavy Flood at Courtallam: வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தென்காசியில் பெய்த கனமழை காரணமாக குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதுகுறித்து விவரமாக பார்க்கலாம்.

தமிழகத்தில் அக்டோபர் 16 – 18, 2025 ஆகிய நாட்களில் வடகிழக்கு பருவமழை North East Monsoon) துவங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதற்கேற்ப பெரும்பாலான மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக இந்த ஆண்டு தீபாவளியன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தென்காசி (Tenkasi) மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அக்டோபர் 16, 2025 அன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கிய நீர் வீழ்ச்சியான குற்றாலத்தில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
குற்றாலத்தில் குளிக்க தடை
தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் அக்டோபர் 14, 2025 அன்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மெயின் அருவியில் நீர் ஆர்பரித்து கொட்டும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இதையும் படிக்க : போக்குவரத்து பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் – தமிழக அரசு அறிவிப்பு
தீபாவளிக்கு குற்றாலம் செல்கிறீர்களா?
பொதுவாக தீபாவளி விடுமுறை தினத்தில் மக்கள் அதிக அளவில் குற்றாலத்தில் குளிக்க வருவார்கள். இந்த நிலையில் தற்போது குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தற்போது குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு தீபாவளிக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால் தீபாவளி அன்று வெள்ளப்பெருக்கு குறையுமா என்பது சுற்றுலா பயணிகளின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இதனால் தீபாவளிக்கு குற்றாலம் செல்பவர்கள் தங்கள் திட்டத்தை மாற்றிக்கொள்வது நல்லது.
வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்த சிறுவன்
கடந்த 2024 ஆம் ஆண்டு மே 17 ஆம் தேதி குற்றாலத்தில் குளிக்க வந்த சிறுவன் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தான். மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை பெய்த நிலையில் ஐந்தருவி, மெயின் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பழைய குற்றாலப் பகுதியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதையும் படிக்க : தீபாவளி டிமாண்ட் – கட்டணத்தை அதிரடியாக குறைத்த ஆம்னி பேருந்துகள் – எவ்வளவு தெரியுமா?
இதனையடுத்து பயணிகள் அங்கிருந்து அலறியடித்தபடி ஓடினர். இந்த நிலையில் திருநெல்வேலியைச் சேர்ந்த அஸ்வின் என்ற 17 வயது சிறுவன் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தான். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து குற்றாலத்தில் பாதுகாப்பு விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.