விநாயகர் சதுர்த்தி விடுமுறை.. சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. எங்கெல்லாம் தெரியுமா?

Ganesh Chaturthi Special Buses : விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தையொட்டி, சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு தமிழக போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. 2025 ஆகஸ்ட் 26ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை 3,519 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தி விடுமுறை.. சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. எங்கெல்லாம் தெரியுமா?

சிறப்பு பேருந்துகள்

Published: 

26 Aug 2025 06:15 AM

 IST

சென்னை, ஆகஸ்ட் 26 : விநாயகர் சதுர்த்தி விடுமுறை (Ganesh Chaturthi), வார இறுதி நாட்கள், முகூர்த்த நாளையொட்டி (TNSTC Special Buses) தமிழக போக்குவரத்து கழகம் சார்பில்  சென்னையில் 2025 ஆகஸ்ட் 26ஆம் தேதியான இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. 2025 ஆகஸ்ட் 26ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை 3,519 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. இதன் மூலம் பயணிகள் கூட்ட நெரிசலின்றி பயணிக்க முடியும். தமிழகத்தில் பெரும்பாலானோர் பேருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர். வெளியூர் செல்வதற்காக ரயில்களை காட்டிலும் பேருந்துகளை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், பேருந்துகளின் எப்போதுமே கூட்டம் அதிமாகவே இருக்கும். குறிப்பாக, வார இறுதி நாட்கள், பண்டிகை காலங்களில் பேருந்துகளில் மக்கள் கூட்டம் அலைமோதும்.

இதனால், தமிழக போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2025 ஆகஸ்ட் 27ஆம் தேதி(நாளை) விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. அதோடு, முகூர்த்த நாள் மற்றும் வார இறுதி விடுமுறையும் வருகிறது. இதனையொட்டி, மக்கள் அதிக அளவில் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்வார்கள். இதனை கருத்தில் கொண்டு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 2025 ஆகஸ்ட் 26ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை 3,519 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

Also Read : மும்பையில் விநாயகரச் சதுர்த்தி கொண்டாட்டம்…ரூ.474 கோடிக்கு இன்சூரன்ஸ் பாதுகாப்பு

சிறப்பு பேருந்துகள் இயக்கம்


அதன்படி, சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கும்பகோணம், கன்னியாகுமரி, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 2025 ஆகஸ்ட் 26ஆம் தேதி 675 பேருந்துகளும், ஆகஸ்ட் 28ஆம் தேதி 610 பேருந்துகளும், 2025 ஆகஸ்ட் 29ஆம் தேதி 405 பேருந்துகளும், ஆகஸ்ட் 30ஆம் தேதி 380 பேருந்துகளும், 2025 ஆகஸ்ட் 31ஆம் தேதி 875 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது.

கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 2025 ஆகஸ்ட் 26ஆம் தேதி 110 பேருந்துகளும், 2025 ஆகஸ்ட் 28,29ஆம் தேதிகளில் 90 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது. மாதாவரம் பேருந்து முனையத்தில் இருந்து ஆகஸ்ட் 26,28,29ஆம் தேதிகிள்ல 24 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

Also Read : தடைகளை நீக்கும் ஈச்சனாரி விநாயகர் கோயில்.. மிஸ் பண்ணாதீங்க

மேலும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 350 பேருந்துகளும் இயக்கப்பட ள்ளது. அதோடு, ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக அனைத்து இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us
Related Stories
எரிவாயு தட்டுப்பாடு.. மத்திய மாநில அரசுகளுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்..
ஈரான் போர் தாக்கம்.. எரிவாயு தட்டுப்பாடு குறித்து பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
ஓ. பன்னீர் செல்வம் மனநிலையில் திடீர் மாற்றம்… வீட்டில் மீண்டும் குடியேறிய ஜெயலலிதா புகைப்படம்!
பசுமை காடுகளுக்கு மத்தியில் “குட்டி குற்றாலம்”.. பட்ஜெட் ட்ரிப்புக்கு ஏற்ற பக்காவான இடம்!
மதுபோதையில் கொடூர தாக்குதல்.. ஆத்திரத்தில் கத்தியை எடுத்த தாய்.. ரத்தம் வெள்ளத்தில் சுருண்டு விழுந்த மகன்.. அடுத்து நடந்த விபரீதம்!
Seeman Tamil Nadu Election: தனித்து களம் காணும் நாதக… காங்கிரஸ் கோட்டையில் களமிறங்கும் சீமான்.. வெற்றியை வசமாக்குவாரா!
ஈரான் - இஸ்ரேல் போர் பரபரப்பு: 4 வாரங்களுக்கு டிவி செய்தி சேனல்களின் TRP வெளியீடு நிறுத்தம்
ஷோலே படக் காட்சி போல சம்பவம்… காதலனை விடுவிக்க மொபைல் டவரில் ஏறிய இளம்பெண்!
போர் விமான விபத்து.. இந்திய விமானப்படை விமானி வீரமரணம்..
நவீனகால திருமணங்கள்.. பழமை மாறாத சிந்தனை..