சட்டம் படிக்க வேண்டுமா? கால அவகாசத்தை நீட்டித்த அம்பேத்கர் பல்கலைக்கழகம்…
TNDALU LLB Application Deadline Extended: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக இணைவு பெற்ற கல்லூரிகளில், மூன்றாண்டு எல்.எல்.பி மற்றும் எல்.எல்.பி (ஹானர்ஸ்) படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப கடைசி தேதி ஜூலை 25, 2025 மாலை 5.45 மணிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்
சென்னை ஜூலை 11: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் (Tamil Nadu Dr. Ambedkar Law University) இணைவு பெற்ற கல்லூரிகளில், மூன்றாண்டு எல்.எல்.பி மற்றும் எல்.எல்.பி (ஹானர்ஸ்) படிப்புகள் (Three-year LLB and LLB (Honours) courses) நடத்தப்படுகின்றன. இந்த படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் ஆன்லைனில் மட்டுமே ஏற்கப்படும். விண்ணப்பதாரர்கள், பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் tndalu.ac.in-ல் விண்ணப்பிக்க வேண்டும். முன்னதாகக் குறிப்பிடப்பட்ட கடைசி நாள் தற்போது மாற்றப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 25, 2025 மாலை 5.45 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை பல்கலைக்கழக பதிவாளர் (University Registrar) வெளியிட்டுள்ளார்.
எல்.எல்.பி படிப்புகளுக்கான விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற அனைத்து சட்டக் கல்லூரிகளிலும் நடத்தப்படும் மூன்றாண்டு எல்.எல்.பி மற்றும் மூன்றாண்டு எல்.எல்.பி (ஹானர்ஸ்) பாடநெறிகளுக்கான விண்ணப்பத்துக்கான கடைசி நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் நடத்தும் மூன்றாண்டு எல்.எல்.பி மற்றும் ஹானர்ஸ் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 25, 2025 மாலை 5.45 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் http://tndalu.ac.in இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
Also Read: மெரினா நீச்சல் குளத்துக்கு வராதீங்க..! 20 நாட்கள் மூடப்படும் என அறிவித்த சென்னை மாநகராட்சி..
ஜூலை 25 வரை நீட்டிப்பு
இப்பாடநெறிகளுக்காக ஆன்லைனில் விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுடைய மாணவர்கள், பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் http://tndalu.ac.in மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இந்த வாயிலாக, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஜூலை 25, 2025 அன்று மாலை 05.45 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் பதிவாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் (TNDALU) சென்னை நகரில் அமைந்துள்ள மாநில அரசுப் பல்கலைக்கழகமாகும். இது 1997ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இப்பல்கலைக்கழகம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் சட்டக் கல்லூரிகளையும் இணைத்துள்ளது. இந்த பல்கலைக்கழகம் மூன்று முக்கிய நிலைகளில் சட்டப் படிப்புகளை வழங்குகிறது.
5 ஆண்டு ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு, 3 ஆண்டு எல்.எல்.பி (LL.B), மற்றும் 2 ஆண்டு எல்.எல்.எம் (LL.M). 5 ஆண்டு சட்டப் படிப்புகள் School of Excellence in Law (SOEL) மற்றும் இணைப்பட்ட கல்லூரிகளில் நடைபெறுகின்றன; இதில் B.A. LL.B. (Hons.), B.B.A. LL.B. (Hons.), B.Com. LL.B. (Hons.), B.C.A. LL.B. (Hons.) உள்ளிட்ட பாடநெறிகள் உள்ளன.