அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பஸ் பாஸ் அட்டை குறித்து முக்கிய அறிவிப்பு!

Tamil Nadu Free Student Bus Pass: தமிழ்நாடு அரசு 2025-26 கல்வியாண்டுக்கான இலவச பேருந்துப் பயண அட்டையை மாணவர்களுக்காக அறிவித்துள்ளது. புதிய பாஸ் பள்ளி/கல்லூரி இணையதளங்கள் வழியாக ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம். புதிய பாஸ் வரும் வரை, 2024-25ன் பழைய பாஸ் செல்லுபடியாகும்.

அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பஸ் பாஸ் அட்டை குறித்து முக்கிய அறிவிப்பு!

மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் பயண அட்டை

Published: 

30 May 2025 21:32 PM

தமிழ்நாடு மே 30: 2025-26 கல்வியாண்டுக்கான புதிய கட்டணமில்லா பேருந்து பயண அட்டை(New free bus travel card) , மாணவர்கள் தங்கள் பள்ளி/கல்லூரி இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. புதிய பாஸ் வழங்கப்படும் வரை, 2024-25 ஆம் ஆண்டின் பழைய பாஸ் அல்லது அடையாள அட்டையை காட்டி மாணவர்கள் இலவசமாக பயணிக்கலாம்(Students can travel for free). பள்ளிகள் மற்றும் அரசு கல்வி நிறுவனங்கள் ஜூன் 2 முதல் திறக்கப்பட உள்ளதால், இந்தத் திட்டம் நடைமுறைக்கு வருகிறது. பேருந்துகள் சரியான நேரத்தில் இயக்கப்படுவதை கண்காணிக்க அலுவலர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பாதுகாப்பாக ஏறி இறங்க உரிய நிறுத்தங்களில் பேருந்துகள் நிறுத்தப்பட வேண்டும் என ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு கல்வி பயணத்தை எளிதாக்கும் வகையில் அரசு மற்றும் தனியார் போக்குவரத்துத் துறைகள் மூலமாக “மாணவர் பஸ் பாஸ் பயண அட்டை” (Student Bus Pass) வழங்கப்படுகிறது. இது மாநிலத்தை பொருத்து விதிமுறைகள் மற்றும் தகுதிகள் அடிப்படையில் மாறுபடும்.

புதிய பேருந்து பாஸ் ஆன்லைனில் வழங்கப்படும்

தமிழ்நாடு அரசு, மாணவர்களுக்காக 2025-26 கல்வியாண்டுக்கான புதிய கட்டணமில்லா பேருந்து பயண அட்டையை, அவர்கள் கல்வி பயிலும் பள்ளி அல்லது கல்லூரியின் இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் 2025 ஜூன் 2ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுவதையும், அதன் பின்னர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு தொழில்நுட்பக் கல்லூரிகள், அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கவிருப்பதையும் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்ளலாம்

முந்தைய ஆண்டின் பயண அட்டை தொடரும்

புதிய பயண அட்டை விநியோகம் நடைபெறும் வரை, 2024-25 கல்வியாண்டில் வழங்கப்பட்ட பயண அட்டைகள் செல்லுபடியாகும். பள்ளி மாணவர்கள் தங்கள் சீருடை அல்லது புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை காட்டி, தங்கள் இருப்பிடத்திலிருந்து பள்ளி வரை இலவசமாக பயணிக்கலாம்.

அதேபோல், அரசு கல்லூரி மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவன மாணவர்களும், கடந்த கல்வியாண்டின் பயண அட்டை அல்லது கல்வி நிறுவனத்தின் அடையாள அட்டையை காட்டி கட்டணமின்றி பயணிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

பேருந்து சேவைகள் மேற்பார்வை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள்

பள்ளிகள் துவங்கும் மற்றும் முடியும் நேரங்களில் பேருந்துகள் சரியாக இயக்கப்படுவதை உறுதி செய்ய, அலுவலர்களைக் கொண்ட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. மேலும், மாணவர்கள் பாதுகாப்பாக ஏறி இறங்குவதற்காக, உரிய நிறுத்தங்களில் பேருந்துகளை நிறுத்தி வழிகாட்டும் வகையில், நடத்துநர் மற்றும் ஓட்டுநர்களுக்கு தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.