திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா.. கொடியேற்றத்துடன் கோலகலமாக தொடங்கியது!
Tiruvannamalai Karthigai Deepam 2025 | திருவண்ணாமலையில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீப திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். அந்த வகையில், இந்த ஆண்டும் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. இந்த விழாவுக்கு உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை புரிவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அண்ணாமலையார் கோயில்
திருவண்ணாமலை, நவம்பர் 24 : திருவண்ணாமலையில் (Tiruvannamalai) உள்ள அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீப திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். இந்த விழாவுக்கு உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பொதுமக்கள் வருகை தருவது வழக்கம். இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீப திருவிழா இன்று (நவம்பர் 24, 2025) கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியுள்ளது. இந்த ஆண்டும் உலக அளவில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் இந்த திருவிழாவுக்கு வருகை தருவர் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கொடியேற்றத்துடன் தொடங்கிய கார்த்திகை தீப திருவிழா
திருவண்ணாமலையில் உள்ள இந்த அருணாச்சலேஸ்வரர் கோயில் உலக பிரச்சித்தி பெற்றதாக உள்ளது. இந்த கோயில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக உள்ளது. இங்கு நடைபெறும் கார்த்திகை தீப திருவிழாவுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஏராளமானவர்கள் வருகை புரிந்து வருகின்றனர். அந்த வகையில், இந்த ஆண்டும் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.
இதையும் படிங்க : கனமழை எதிரொலி…. இந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
தங்க முலாம் பூசப்பட்ட 63 அடி உயர கொடி மரத்தி கொடி ஏற்றப்பட்டுள்ளது. இந்த கொடியேற்ற நிகழ்வு சிவாச்சாரியார்கள் வேத மத்திரம் முழங்க வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மொத்தம் 10 நாட்கள் நடைபெறும் கார்த்திகை தீப திருவிழா
இந்த கார்த்திகை தீப திருவிழா மொத்தம் 10 நாட்கள் நடைபெறும். திருவிழாவின் முதல் நாளான இன்று பஞ்சமூர்த்திகள் வீதி உலா வரும். விழாவில் 7வது நாள் தேரோட்டத்தை தவிர்த்து மற்ற நாட்களில் காலையில் விநாயகர், சந்திரசேகர் வீதி உலா வரும் நிலையில், இரவில் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா நடைபெறும். அவ்வாறு மாட வீதிகளில் உலா வரும் பஞ்சமூர்த்திகளுக்கு திருக்குடைகள் கட்டி அலங்கரிக்கப்படும்.
இதையும் படிங்க : நாய்களை சுதந்திரமாக விட வேண்டும்…. அது அரசின் கடமை – அரசுக்கு நிவேதா பெத்துராஜ் கோரிக்கை
10 நாள் திருவிழாவில் ஏற்றப்படும் மகா தீபம்
இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியான 10 நாம் நாள் டிசம்பர் 03, 2025 அன்று அதிகாலை கோயிலில் பரணி தீபமும், மாலையில் கோயில் பின்புறமுள்ள 2,668 அடி உயரம் கொண்ட அண்ணாமலையார் மலையின் உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும். இதனை காண ஏராளமான மக்கள் திருவண்ணாமலைக்கு செல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.