பனை மரத்தின் மரபணு ரகசியங்கள் என்ன? கண்டறிந்து டாக்டர் பட்டம் பெற்ற நெல்லை மாணவர்

PhD research on Palmyra palm genome: பனைமரத்தின் மரபணுவை ஆய்வு செய்த நெல்லை மாணவர் விஜித், 230 கோடி மரபணுக்கள், 32 ஆயிரம் புரதங்களை கண்டறிந்துள்ளார். பதநீரின் இனிப்புக்கும் வறட்சியை தாங்கும் தன்மைக்கும் காரணமான நொதிகளும் ஆழமாக ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இந்தத் தகவல்கள் உலகளாவிய ஆய்வாளர்களுக்கு பயன்படும் வகையில் இணையத்தில் பகிரப்பட்டுள்ளன.

பனை மரத்தின் மரபணு ரகசியங்கள் என்ன? கண்டறிந்து டாக்டர் பட்டம் பெற்ற நெல்லை மாணவர்

நெல்லை மாணவரின் சாதனை

Published: 

18 Jul 2025 08:47 AM

நெல்லை ஜூலை 18: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக (Nellai Manonmaniam Sundaranar University) மாணவர் விஜித் (Student Vijith), பனை மரத்தின் மரபணு பற்றி நான்கு ஆண்டுகள் ஆய்வு (Four years of research into the genome of the palm tree) செய்து முனைவர் பட்டம் (Doctorate) பெற்றுள்ளார். பனைமரத்தில் 230 கோடி மரபணுக்கள், 32 ஆயிரம் புரதங்களை உருவாக்கும் தன்மை உள்ளதைக் கண்டுபிடித்துள்ளார். பதநீர் இனிப்பானதற்கான காரண மரபணுக்களும் தெரியவந்துள்ளன. வறட்சியை தாங்கும் நொதிகள் உள்ளிட்ட தகவல்களும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பனைமரத்தின் பயன்களை அறிவியல் முறையில் மேலும் மேம்படுத்த இது உதவும். ஆய்வு விவரங்கள் அமெரிக்க இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

முனைவர் பட்டத்துக்கு பனை மர மரபணு ஆய்வு: நெல்லை மாணவரின் சாதனை

நெல்லை மாவட்டத்தில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில், உயிரி தொழில்நுட்பவியல் துறையில் முனைவர் பட்டம் பயிலும் விஜித் என்ற மாணவர், தமிழகத்தின் மாநில மரமாக விளங்கும் பனை மரத்தின் மரபணுவை ஆராய்ந்து, முக்கியமான தகவல்களை வெளியிட்டுள்ளார். இவர், பேராசிரியர் சுதாகர் சிவசுப்பிரமணியம் வழிகாட்டுதலிலும், தென்காசி மாவட்டம் கடையத்தில் உள்ள எஸ்விஏ கல்வி அறக்கட்டளையின் ஒத்துழைப்புடனும், சமூகரெங்கபுரத்தில் உள்ள பின்டெக் நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவியுடனும் இந்த ஆய்வை மேற்கொண்டார்.

மரபணுக்களும் அடையாளம் கண்டுபிடிப்பு

சுமார் நான்கு ஆண்டுகளாக நடத்திய இந்த ஆய்வில், பனை மரத்தில் 230 கோடி மரபணுக்கள் இருப்பதும், அவை 32,000-க்கும் மேற்பட்ட புரதங்களை உருவாக்கும் திறன் கொண்டவையுமாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இவை, பனை மரம் வளர்ச்சியடையவும், வறட்சியை தாங்கவும், நோய்களை எதிர்கொடுக்கவும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அதனுடன், பதநீரில் அதிக அளவில் குளுக்கோஸ், பர்டோஸ், சுக்ரோஸ் போன்ற இனிப்புச்சத்துக்கள் இருப்பதற்கான மரபணுக்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்க உதவும்

பனை மரத்தின் அனைத்து பகுதிகளும் மக்கள் வாழ்வில் பயன்படுகின்றன. இதன் மரபணு தகவல்கள் மூலம் இந்த மரத்தின் பலன்களை அறிவியல் அடிப்படையில் மேலும் மேம்படுத்தும் வழிவகை உருவாகும். குறிப்பாக, நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்க மற்றும் வறண்ட நிலங்களிலும் வளமாக வளர்ச்சியடைய பயன்படும் நொதிகள் பற்றிய தகவல்களும் இந்த ஆராய்ச்சியில் வெளிவந்துள்ளன.

Also Read: பெங்களூரு, ஈரோடு செல்லும் ரயில்கள் ரத்து – தென்னக ரயில்வே அறிவிப்பு

அமெரிக்காவின் தேசிய உயிர்தொழில்நுட்ப தகவல் மைய இணையதளத்தில் வெளியீடு

இந்த ஆய்வின் முழு விவரங்கள், நெல்லை பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர் தலைமையில் அமெரிக்காவின் தேசிய உயிர்தொழில்நுட்ப தகவல் மைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இது, எதிர்கால ஆராய்ச்சியாளர்களுக்கும் மாணவர்களுக்கும் பனை மரம் தொடர்பான முழுமையான தகவல்களைப் பெற உதவியாக இருக்கும்.