தாம்பரம்-திருவனந்தபுரம் அம்ரித் பாரத் ரயில் புறப்படும் நேரம்…தெற்கு ரயில்வே அறிவிப்பு!

Amrit Bharat Train Service: தாம்பரம் - திருவனந்தபுரம் இடையேயான அம்ரித் பாரத் ரயில் சேவைக்கான நேர அட்டவணையை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த நேரத்தின் அடிப்படையில் பொது மக்கள் இந்த அம்ரித் பாரத் ரயிலில் பயணம் மேற்கொள்வதற்கு திட்டமிடலாம்.

தாம்பரம்-திருவனந்தபுரம் அம்ரித் பாரத் ரயில் புறப்படும் நேரம்...தெற்கு ரயில்வே அறிவிப்பு!

அம்ரித் பாரத் ரயில் நேர அட்டவணை அறிவிப்பு

Published: 

24 Jan 2026 07:40 AM

 IST

கேரள மாநிலம், திருவனந்தபுரம்- தாம்பரம் இடையே அம்ரித் பாரத் வாராந்திர ரயில் சேவை தொடங்குவதற்கு தென்னக ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி, அம்ரித் பாரத் ரயில் சேவைக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. இந்த ரயில் சேவைக்கான பணிகள் அனைத்தும் இறுதிக் கட்டத்தை எட்டிய நிலையில், ரயில் சேவை தொடங்குவதற்கான தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நேற்று வெள்ளிக்கிழமை (ஜனவரி 23) திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று தாம்பரம்- திருவனந்தபுரம் இடையான அம்ரித் பாரத் ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதன்படி, இந்த ரயில் சேவையானது நேற்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில், அம்ரித் பாரத் ரயிலுக்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில், வரும் ஜனவரி 28-ஆம் தேதி ( புதன்கிழமை) தாம்பரத்தில் இருந்து மாலை 5 மணிக்கு வாராந்திர அம்ரித் பாரத் விரைவு ரயில் (வண்டி எண்- 16121) புறப்படுகிறது.

அம்ரித் பாரத் ரயிலில் 15 மணி நேர பயணம்

இந்த ரயில் மறுநாள் ஜனவரி 29- ஆம் தேதி ( வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடையும். இதே போல, மறுமார்க்கத்தில் வியாழக்கிழமை ( ஜனவரி 29) காலை 10:40 மணிக்கு புறப்படும் வாராந்திர அம்ரித் பாரத் விரைவு ரயிலானது அன்று இரவு 11: 45 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையத்தை வந்தடையும். இந்த அம்ரித் பாரத் ரயிலானது செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர், நாகர்கோவில், குழித்துறை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

மேலும் படிக்க: மகாபலிபுரம்-கொடைக்கானலில் விரைவில் ரோப் கார் சேவை…சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் பலே திட்டம்!

அம்ரித் பாரத் ரயிலில் உள்ள சிறப்பு அம்சங்கள்

ஏசி வசதி இல்லாத இந்த ரயிலில் படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், இருக்கை வசதி உடைய பெட்டிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புக்காக தானியங்கி முறையில் இயங்கும் கதவுகள், கண்ணாடி ஜன்னல்கள், கண்காணிப்பு கேமராக்கள், ரயில் நிலையத்தின் பெயரை குறிப்பிடும் ஒலி பெருக்கிகள் மற்றும் டிஜிட்டல் போர்டுகள், பயணிகளுக்கு ஏதேனும் அவசர தேவைக்காக ரயில் ஓட்டுநருடன் தொடர்பு கொள்வதற்கான அவசர அழைப்பான் உள்ளிட்ட ஏராளமான வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் அம்ரித் பாரத்

இந்த அம்ரித் பாரத் ரயிலானது மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல கூடியதாகும். ஆரம்பக் காலக் கட்டத்தில் வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்பட்டிருந்தது. இந்த ரயிலுக்கு பொதுமக்கள் மத்தியில் பெரிதளவில் வரவேற்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து, அம்ரித் பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டு வருகிறது. தற்போது, இயக்கப்படும் இந்த ரயிலால் நடுத்தர மக்கள் மற்றும் தென்மாவட்ட மக்கள் மிகுந்த பயன் அடைவர்.

மேலும் படிக்க: 77வது குடியரசு தின விழா.. சென்னையில் போக்குவரத்து மாற்றம்.. எந்த பகுதியில்?

வனப்பகுதியைச் சுற்றிப் பார்த்து ரசித்த இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்கள்..
பொது சொத்துக்களை மதிக்கும் பயணிகள் மட்டுமே பயணம் செய்ய வேண்டும்.. வந்தே பாரத் ரயில் குறித்த வைரல் போஸ்ட்..
ஐசிசி உலகக் கோப்பை 2026.. ஐசிசியின் எச்சரிக்கை.. வங்கதேசத்தின் இறுதி பதில்
குட்டியை காப்பாற்ற தாய் குரங்கு செய்த செயல்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..