பாஜகவின் முகமூடியாக செயல்படும் சீமான்-விஜய்..சனாதனத்துக்கு ஆதரவானவர்கள்…தொல்.திருமாவளவன் தாக்கு!

Seeman And Vijay Acting Puppets Of The BJP: தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சியின் முகமூடிகளாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் செயல்படுவதாக விசிக தலைவர் திருமாவளவன் கூறினார்.

பாஜகவின் முகமூடியாக செயல்படும் சீமான்-விஜய்..சனாதனத்துக்கு ஆதரவானவர்கள்...தொல்.திருமாவளவன் தாக்கு!

பாஜகவின் முகமூடி சீமான்-விஜய்

Updated On: 

27 Dec 2025 12:41 PM

 IST

இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக கூட்டணி மட்டுமே உறுதியாக உள்ளது. எதிர்க் கட்சிகளின் கூட்டணி ஒன்றிணைய முடியாமல் பலம் இழந்து போய் உள்ளது. திமுக கூட்டணியே வீழ்த்துவோம் என்று அன்புமணி ராமதாஸ் கூறியது நகைப்புக்குரியதாக உள்ளது. ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்பது தொடர்பாக உரிய நேரத்தில் முடிவெடுத்து அதை நடைமுறைக்கு கொண்டு வருவோம். இதில், சில முடிவுகள் மற்றும் நிலைப்பாடுகளை சூழ்நிலை பார்த்து தான் எடுக்க முடியும். அன்புமணி, ராமதாஸ் அணியில் ஒருவர் திமுக கூட்டணிக்கு வருவதாக கூறுவது யூகத்தின் அடிப்படையில் கூறுவதாகும். செவிலியர்களின் கோரிக்கைகளை ஏற்றது போல, தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளையும் திமுக அரசு ஏற்று நிறைவேற்ற வேண்டும்.

விசிகவுக்கு சமூக நீதி அரசியலே முக்கியம்

ஆசிரியர்கள் முன் வைக்கக்கூடிய ஓய்வூதியம் தொடர்பான கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட வேண்டியவை ஆகும். இதில், அரசு விரைந்து முடிவு எடுக்க வேண்டும். கடந்த சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதி அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும். எங்களுக்கு சமூக நீதி அரசியல், அம்பேத்கர் அரசியல் மட்டுமே முக்கியமாகும். கூட்டணி இரண்டாம் பட்சம் தான். தமிழகத்தில் மதுவை ஒழிப்பது முதல்வர் மு. க. ஸ்டாலின் கையில் தான் உள்ளது.

மேலும் படிக்க: ஆண்டிப்பட்டியில் நிச்சயம் போட்டி.. தை மாதம் கூட்டணி முடிவு வெளியாகும் – டிடிவி தினகரன் திட்டவட்டம்..

தமிழகத்தில் பாஜக வளர கூடாது

கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் சம்பவம் நடந்ததால் தான் தமிழகத்தில் பாஜக வளர கூடாது என்று கூறுகிறோம். இது போன்ற சம்பவங்களை கட்டவிழ்த்து விடப்படுவதற்காகவே ஆர் எஸ் எஸ், பஜ்ரங் தளம், விஷ்வ ஹிந்து பரிஷத் போன்ற அமைப்புகள் கிறிஸ்தவர்களை குறி வைத்து தாக்கி வருகிறது. இந்தச் சம்பவத்தை திசை திருப்புவதற்காகவே பிரதமர் மோடி கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

சனாதனத்துக்கு ஆதரவாக செயல்படும் சீமான்-விஜய்

தமிழகத்தில் பாஜக வளர்வதற்கு அதிமுக உள்ளிட்ட கட்சிகள் துணை போகின்றன. இந்த மாதிரியான மதவாத அரசியல் தமிழகத்தில் காலூன்ற முயற்சிக்கின்றது. சனாதனத்துக்கு ஆதரவாக சீமானும், விஜயும் செயல்படுகின்றனர். பாஜகவை கொள்கை எதிரி என்று கூறும் விஜய் பெரிதளவில் அவர்களை விமர்சிக்கவில்லை. கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல் குறித்தும் விமர்சனம் தெரிவிக்கவில்லை.

தமிழினத்துக்கு துரோகம் செய்த அதிமுக

தமிழகத்தில் பாஜக வளர்வதற்கு அதிமுக மிகப்பெரிய இடம் கொடுத்துள்ளது. அத்துடன், தமிழினத்திற்கு துரோகம் இழைத்துள்ளது. 1996- இல் பாஜகவுடன் திமுக கூட்டணி அமைக்கும் போது, மதவாத அரசியல், பாபர் மசூதி இடிப்பு, ஜம்மு காஷ்மீர் விவகாரம் உள்ளிட்டவை குறித்து பேசக்கூடாது என முடிவெடுத்து கூட்டணி அமைக்கப்பட்டது என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: பாமக யாருடன் கூட்டணி…. அன்புமணி கொடுத்த விளக்கம்!

சமந்தாவுக்காக ஏர்போர்ட்டில் காதலுடன் காத்திருந்த ராஜ்..... வைரலாகும் வீடியோ
இதுவரை இல்லாத அளவுக்கு வசூல் சாதனையுடன் பாக்ஸ் ஆபிஸ் அதிர வைத்த துரந்தர் படம்..
அதிகமாக சாப்பிட்ட வருங்கால மனைவி.. நஷ்ட ஈடு வழங்க தொடுத்த வழக்கு..
ஜப்பானில் கடைப்பிடிக்கப்படும் மெட்டபாலிக் லா.. அப்படி என்ன சட்டம் இது?