Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தஞ்சை டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்த இதயம்.. இறந்தும் 5 பேருக்கு மறுவாழ்வு அளித்த இளைஞர்!!

heart of a brain-dead person; வசந்தின் பெற்றோர் அவரது உடல் உறுப்புகளை தானம் வழங்க ஒப்புதல் அளித்தனர். அதன்பேரில் இதயம், கல்லீரல், இரு சிறுநீரகங்கள் மற்றும் கருவிழிகள் உள்ளிட்ட உறுப்புகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன. இதில், இதயம் சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.

தஞ்சை டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்த இதயம்.. இறந்தும் 5 பேருக்கு மறுவாழ்வு அளித்த இளைஞர்!!
ஹெலிகாப்டரில் பறந்த இதயம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 27 Dec 2025 08:49 AM IST

தஞ்சாவூர், டிசம்பர் 27: தஞ்சாவூரில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் இதயம், ஹெலிகாப்டர் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டு, வெற்றிகரமாக அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மூளைச்சாவு அறிவிக்கப்பட்ட பிறகு ஒருவர் உயிர் திரும்ப வாய்ப்பு இல்லாத நிலையில், அவ்வபோது அந்த நபரின் குடும்பத்தினர் ஒப்புதல் அளித்தால், இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள், கண் கொழுப்பு போன்ற முக்கிய உடல் உறுப்புகள் தானமாக அளிக்கப்படுகின்றன. சரியான நேரத்தில் தானமாக வழங்கப்படும் இவ்வுறுப்புகள், அவசரநிலையிலுள்ள பல நோயாளிகளுக்கு புதிய உயிர் அளிக்கும். அப்படி ஒரு சம்பவம் தான் தமிழகத்தில் தற்போது நிகழ்ந்துள்ளது. அதுகுறித்து இக்கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிக்க: வகுப்பறைக்குள் புகுந்த ஆசிரியைக்கு அடி, உதை.. முன்னாள் மாணவர் வெறிச்செயல்.. அதிர்ச்சி சம்பவம்!!

மூளைச்சாவு அடைந்த இளைஞர்:

தஞ்சை மாவட்ட கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த சண்முக என்பவரின் மகன் வசந்த் (19). இவர் கடந்த 23ஆம் தேதி இரவு பைக்கில் பயணம் செய்தபோது சுவாமிமலை அருகே விபத்துக்குள்ளானார். இதில், கடுமையான காயங்களுடன் அவர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதும், நேற்று வசந்த் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

உடல் உறுப்புகள் தானம்:

இதையடுத்து, வசந்தின் பெற்றோர் அவரது உடல் உறுப்புகளை தானம் வழங்க ஒப்புதல் அளித்தனர். அதன்பேரில் இதயம், கல்லீரல், இரு சிறுநீரகங்கள் மற்றும் கருவிழிகள் உள்ளிட்ட உறுப்புகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன. இதில், இதயம் சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் மதுரை அரசு மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், கல்லீரல் நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், கருவிழிகள் தஞ்சை ராசாமிராசுதாரர் அரசு மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டது.

சென்னைக்கு பறந்த இதயம்:

அந்தவகையில், தஞ்சையிலிருந்து இதயம் அவசர ஆம்புலன்ஸில் திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, அமைந்தகரை அருகில் உள்ள ஒரு கல்லூரியில் ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டது. தொடர்ந்து, அங்கிருந்து போலீஸ் உதவியுடன் வெறும் இரண்டு நிமிடங்களில் தனியார் மருத்துவமனைக்கு இதயம் கொண்டு செல்லப்பட்டது.

மேலும் படிக்க: தவெக பெண் நிர்வாகி அஜிதா தற்கொலை முயற்சி – மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

சென்னைக்குள் தரையிறங்கிய ஹெலிகாப்டர்:

அங்கு, தயார் நிலையில் இருந்த மருத்துவர்கள் மூலம், இதய செயலிழப்பு காரணமாக அவசரநிலையிலிருந்த மகாராஷ்டிராவைச் சேர்ந்த 33 வயது நோயாளிக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. இதற்காக, சென்னை மாநகர எல்லைக்குள் முதல்முறையாக ஹெலிகாப்டர் தரையிறங்கியது. தங்கள் மகனின் உயிர்பிரிந்த நிலையில், அவர் 5 உயிர்களுக்கு மறுவாழ்வு அளித்துச்சென்றதை நினைத்து பெற்றோர் ஆறுதல் அடைந்தனர்.