Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தவெக பெண் நிர்வாகி அஜிதா தற்கொலை முயற்சி – மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

TVK Vijay: தனது கட்சியில் மாவட்ட செயலாளர் பதவி வழங்கவில்லை எனக் கோரி தூத்துக்குடியை சேர்ந்த அக்கட்சியின் பெண் நிர்வாகி அஜிதா போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த நிலையில் அவர் தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தவெக பெண் நிர்வாகி அஜிதா தற்கொலை முயற்சி – மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
தவெக பெண் நிர்வாகி அஜிதா தற்கொலை முயன்றதால் பரபரப்பு
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 25 Dec 2025 18:01 PM IST

சென்னை, டிசம்பர் 20 : தனது கட்சியில் மாவட்ட செயலாளர் பதவி வழங்கவில்லை எனக் கோரி பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக (Tamilaga Vettri Kazhagam) தலைமை அலுவலகத்தின் முன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட தூத்துக்குடியை சேர்ந்த அக்கட்சியின் பெண் நிர்வாகி அஜிதா தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னதாக அவர் தனது ஆதரவாளர்களுடன் விஜய்யின் காரை முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அவர் தற்கொலைக்கு முயன்றிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தவெக பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி

கடந்த டிசம்பர் 23, 2025 அன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மீதமுள்ள மாவட்ட செயலாளர்களை அறிவித்தார். இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட பெண் நிர்வாகி அஜிதா, கட்சிக்காக உழைத்த தனக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்காமல், மாவட்டத்தில் பிரபலம் இல்லாத ஒருவருக்கு வழங்கப்பட்டிருப்பதாக தனது ஆதரவாளர்களுடன் பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தார். ஆனால் அங்கு அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இதையும் படிக்க : விஜய் கார் மறிப்பு… தனக்கு பதவி வழங்கவில்லை என ஆர்ப்பாட்டம் – பரபரப்பான பனையூர்

இதனையடுத்து தனது ஆதரவாளர்களுடன் கட்சியின் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கு வந்த அக்கட்சியின் தலைவர் விஜய்யின் காரை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து காவலர்கள் அவரை அப்புறப்படுத்தினர். பின்னர், தனது ஆதரவாளர்களுடன் அவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.  அப்போது அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார் அவருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஆனால் பேச்சுவைர்த்தை தோல்வியில் முடிந்தது.

அஜிதாவின் எக்ஸ் பதிவு

 

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய நிர்மல் குமார், தலைவர் சரியான நபர்களுக்கு பொறுப்புகள் வழங்கி வருகிறார் எனவும் கட்சிக்காக உழைப்பவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். இந்த நிலையில் தான் அஜிதாவை அவர் திமுக ஆதரவாளர் என ஒரு சில தவெகவினர் குற்றம்சாட்டினர். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கமளித்த அஜிதா,  இறுதி மூச்சு உள்ள வரை என்‌ தாய் கழகமான தமிழக வெற்றிக் கழகத்தோடும், எம் தலைவர் தளபதி விஜய்யோடும் மட்டும் தான் எனது அரசியல் பயணம் தொடரும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிக்க : தவெக அலுவலகம் முன்பு அஜிதா உண்ணாவிரதம் – பின் வாசல் வழியாக வெளியேறிய ஆனந்த் – பரபரப்பு சம்பவம்

இந்த நிலையில் தான் அவர் தற்கொலைக்கு முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கட்சி தொடங்கி இரண்டே ஆண்டுகளாகும் நிலையில், கடந்த சில மாதங்களாக அக்கட்சியில் உட்கட்சி பிரச்சனைகள் தீவிரமடைந்து வருவது கட்சியினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

(தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)